Tuesday, November 25, 2025

2015 -25ம் ஆண்டு வரைஓய்வு பெற்ற, 87 ஆசிரியர்கள், 249 பணியாளர், 129 குடும்ப ஓய்வூதிய பாக்கி ரூ95.44 கோடி

சென்னை பல்கலையில் ஓய்வூதிய நிலுவை ரூ.95 கோடியை வழங்க ஐகோர்ட் உத்தரவு UPDATED : நவ 05, 2025 https://www.dinamalar.com/news/kalvimalar-news/high-court-orders-payment-of-pension-arrears-of-rs-95-crore-to-madras-university/75473 

தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 'ஓய்வூதிய ப லன்களை உடனுக்குடன் வழங்குவது உறுதி செய்யப்படும். கடந்த 2015 முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்ற, 87 ஆசிரியர்களுக்கும், 249 பணியாளர்களுக்கும், 129 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் சேர்த்து, 95.44 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.


சென்னை:
சென்னை பல்கலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகை, 95.44 கோடி ரூபாயை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசு மற்றும் பல்கலை நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தேன்மொழி என்பவர், தனக்கு வழங்க வேண்டிய 18.17 லட்சம் ரூபாய் ஓய்வு கால பலன்களை வழங்கவில்லை என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வு கால பலன்களை வழங்க உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், அத்தொகை வழங்கப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தேன்மொழி தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 'ஓய்வூதிய ப லன்களை உடனுக்குடன் வழங்குவது உறுதி செய்யப்படும். கடந்த 2015 முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்ற, 87 ஆசிரியர்களுக்கும், 249 பணியாளர்களுக்கும், 129 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் சேர்த்து, 95.44 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:


இன்னும் 95.44 கோடி ரூபாய் ஓய்வூதிய பலன்கள் பாக்கி உள்ளது, கவலை அளிக்கிறது. ஓய்வூதிய பலன்கள் உடனுக்குடன் வழங்குவது உறுதி செய்யப்படும் என, அரசு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்ற வேண்டும்.

பாக்கித் தொகையை வழங்க தேவையான நடவடிக்கைகளை, தமிழக நிதித்துறை செயலர் எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ., 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Facebookல் நீதிபதிகளை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு கிடையாது - உச்ச நீதிமன்றம்

In November 2018, the  Supreme Court of India ruled that criticism of a judge on Facebook is not necessarily contempt of court , provided it...