சுப்பிரமணியன் சந்திரசேகர் — ஒரு தமிழரின் மறைக்கப்பட்ட பெருமை
Kevin Paul https://x.com/kevinpaulshow/status/1995862971164361161 சுப்பிரமணியன் சந்திரசேகர் தெரு? சுப்பிரமணியன் சந்திரசேகர் பேருந்து நிலையம்? சுப்பிரமணியன் சந்திரசேகர் பன்னாட்டு முனையம்? சுப்பிரமணியன் சந்திரசேகர் நூலகம்? சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆராய்ச்சிக் கூடம்? இப்படி தமிழ்நாட்டில் ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால்… நாசா இயக்கும் X-ray telescope-ன் பெயர் Chandra X-ray Observatory, Chandrasekhar Limit (ஒரு astrophysical concept), 1958 Chandra (ஒரு asteroid), சிகாகோ பல்கலைக்கழகத்தில் அவரின் பெயரில் Chandrasekhar Fellowship, Elon Musk கூட தனது மகனுக்கு Chandrasekhar என்ற பெயரை வைத்திருக்கிறார். உலகமே அவரைக் கொண்டாடுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அவரைப் பற்றி அறிமுகம் கூட இல்லை. சுப்பிரமணியன் சந்திரசேகர் ஒரு தமிழர். சென்னை Presidency College-ல் படித்தவர். நட்சத்திரங்களின் வளர்ச்சி, black holes போன்ற ஆய்வுகளுக்காக 1983-ல் நோபல் பரிசு பெற்றவர். தமிழ்நாட்டில் அவரை நினைக்கும் போது வரும் ஒரே பிரச்சனை: அவரது பெயர். “அய்யர்” என்ற அந்த பெயர்தான். அதுவே அவரை நம்மிடம் அறிமுகமே இல்லாதவர் ஆக்கியது.
அவரது பிறந்தநாளின் 100-வது ஆண்டு நினைவாக, உலகின் முன்னணி astrophysicists பலர் சேர்ந்து
‘Fluid Flows to Black Holes’
என்ற ஒரு நினைவு நூல் வெளியிட்டனர்.
இயற்பியல் எனக்குப் புரியாததால், அவரது வாழ்க்கைக் குறிப்புகளைத் தாண்டி அந்தப் புத்தகத்தில் எதுவும் விளங்கவில்லை. Physicists யாராவது இருந்தால் அவரது ஆய்வுகளின் முக்கியத்துவத்தை விளக்கவும். Link: ndl.ethernet.edu.et/bitstream/1234
இது தான் உண்மையான genocide. ஒரு மனிதரின் சாதனைகளைக் கூட அழித்து, அவரின் பெயரையே நம்மிடையே தெரியாமல் ஆக்கியது. அதுதான் இன அழிப்பு.
No comments:
Post a Comment