Tuesday, December 2, 2025

தமிழர் விரோதம் - முத்தமிழ் முருகன் திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி தீர்ப்பை எதிர்த்து, HRCE மேல்முறையீடு?

2000 ஆண்டுகளாய் முத்தமிழ் முருகன் முதலாம் ஆறுபடை வீடு  திருப்பரங்குன்றம்கோவிலில், அகநானூறு கூறும் தமிழர் பண்டிகை எதிர்த்து தமிழர் விரோதிகள்  – 03-12-2025 அன்று கார்த்திகை தீபம் ஏற்றத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி தீர்ப்பை எதிர்த்து, HRCE மேல்முறையீடு!

தீபம் ஏற்ற ஆதரவாக ஒரு தீர்ப்பு. பல ஆண்டுகளாக கோவில் நிர்வாகம் ஒன்றும் செய்யவில்லை. யாரோ ஒருவர் மீண்டும் வழக்கு தொடர்ந்து அந்த உரிமையை கொண்டு வருகிறார்.
இதை வைத்து கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டியது தானே?
அதற்கு மாறாக கோவில் நிர்வாகமே தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறார்கள்!
இவர்கள் அக்கறை / விசுவாசம் எங்கே உள்ளது? மிகப் பெரிய கேள்வி.

திருப்பரங்குன்றம் : இது தேவார பாடல் பெற்ற சிவாலயம் . ஆறுபடை வீடுகளுள் ஒன்று இது என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு !
// இது ஸ்ரீ முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்று. ஸ்ரீ முருகப் பெருமான் , ஸ்ரீ தெய்வயானை தேவியைத் திருமணம் செய்துகொண்ட தலம். ஸ்ரீ முருகப் பெருமான் வழி பட்ட தலம். சுவாமி பெயர் ஸ்ரீ பரங்கிரிநாதர். அம்மை ஸ்ரீ ஆவுடைநாயகி. தீர்த்தம் சரவணப்பொய்கை. மலைமேல் காசிதீர்த்தம் என்ற ஒன்று இருக்கிறது.. ஸ்ரீ நக்கீரர் வாழ்ந்த நன்னகரம். இத்தலம் மதுரைக்குத் தென்மேற்கில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கல்வெட்டு:
இத்தலத்துக் கல்வெட்டுக்களாக செவல் பாதிரியார் குறிப்பவை பதினொன்று. ஆனால் அவைகள் தெளிவும், வரலாற்று விளக்கம் உடையனவும் அல்ல. கி.பி. 1843 இல் வீரசிம்மநாயுடு என்பவன் மரபில் வந்த மங்கம்மாள் கோயிலுக்குச் சிறிது தானம் வழங்கினாள். சுந்தரபாண்டியதேவன், வீரநாராயண குளத்திற்குக் கீழ்ப்புறமிருந்த அம்பாண்டியபுரமாகிய புளிங்குன்றூர் கிராமத்தைப் பூசைக்கும் பணிக்கும் அளித்தான். அதில் கடவுள் பெயர் சுந்தரபாண்டீசுவர முடையார் என்று குறிக்கப்படுகிறது. முகம்மதிய அரசாங்கத்தில் திவானாயிருந்த ராஜகோபாலராயர் ஐரோப்பியர் படை மதுரையில் புகுந்து, கோயிலை அழித்து முன்னேறிக்கொண்டிருந்தபோது, வயிராவி முத்துக்கருப்பன் குமாரன் குட்டி என்பவன் எதிரிப்படை களைத் தடுப்பதற்காகக் கோபுரத்திலிருந்து கீழே விழ, அவன் பரம்பரையினருக்கு இறையிலியாகச் சில நிலங்கள் அளித்த செய்தி அறியப்படுகிறது.//
புராண சிறப்புகள் , சங்க இலக்கியப் பெருமைகள் , எம் பரம ஆசாரியர்கள் ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் மற்றும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரப் பனுவல்கள் மற்றும் தொல்லியல் சிறப்புகள் கொண்ட இந்த தலத்தை பிற்காலங்களில் வந்தேறிய ஜி ..தி . மதமாற்ற பயங்கவாதிகளின் கும்பல் ‘ ஆட்டையைப் போடப் ‘ பார்க்கிறது .
ஹிந்துக்களின் இந்த புனித தலத்தில் மலையின் நடுவில் அமைந்திருக்கும் உச்சிபிள்ளையார் கோவிலின் அருகில் , ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகைத் திருநாள் அன்று தீபம் ஏற்றும் வழக்கம் இருந்து வந்தது , ஆயினும் அண்மைகாலமாக சங்க காலத்திலும் , தேவார காலத்திலும் என்றும் ஹிந்துக்களின் வழிபாட்டு தலமாக இருந்து வந்த விவரத்தை உறுதிப்படுத்தும் விஷ்யமாக – மலை முழுவதும் ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலம் என்பதை உறுதி செய்ய - இந்த ஆண்டு முதல் மலை உச்சியில் நாளை எதிர்வரும் கார்த்திகைத் திருநாள் அன்று தீபம் ஏற்ற ஹிந்துப் பக்தர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது . இந்த முடிவுக்கு மாண்புமிகு மதுரை உயர்நீதி மன்றக் கிளையின் தனி நீதியரசர் உத்தரவும் பெறப்பட்டது .
ஹிந்துக்களின் நலன் காக்க வேண்டிய மாநிலத்தின் ஹிந்து சமய அறநிலையைத்துறை , திராவிட ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரிலும் , பாஜக கட்சித் தவிர அனைத்து ஹிந்து எதிர்ப்பு / ஜி.... தி ஆதரவு ஒட்டு வங்கி அரசியல் ஆதரவு எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்து , அதே நீதிமன்றத்தில் இரு நீதியரசர்கள் அமர்வில் இந்த தனி நீதியரசர் – கார்த்திகை தீப உத்தரவுக்கு ஒரு தடையாணையை எதிர்நோக்கி , மேல்முறையீடு செய்துள்ளார்கள் . இந்த முறையீடு , இந்தத் திருக்கோவில் நிர்வாக அதிகாரியே செய்திருப்பது – ஹிந்துக்களை கேவலப்படுத்தும் செயல் !
நாளை நீதிமன்றம் தடையாணையை வழங்குமா ? ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமை கிடைக்குமா ?
பொறுத்திருந்து பார்க்கவேண்டும் !
வெற்றிவேல் ! வீரவேல் !
Reference : திருப்பரங்குன்றம் – தல வரலாற்றுக் குறிப்புகள் – Thevaaram.org – ஸ்ரீ தருமை ஆதீன Website

No comments:

Post a Comment

கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் ரஷ்யா, சீனா என பல நாடுகளில் மசூதிகள் இடித்து ஆக்கிரமித்தவை சில

ரஷ்யாவின் Derbent பகுதியில் இருந்த மிகப் பழமையான Juma மசூதி சோவியத் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ...