Wednesday, December 23, 2020

புதிய ஏற்பாடு கதைகளின் அப்போஸ்தலர் பவுல் யார்? தெரியாதே!!

கிறிஸ்துவ தொன்மத்தின் சுவிசேஷக் கதைகளை வரலாற்று நோக்கில் ஆராய்ச்சி செய்பவர் உணர்வது,  பொஆ 30ல் இறந்த இயேசு எனும் மனிதனை தெய்வீகராக உயர்த்தி புனைந்தவர் பவுல் என்பவர்.

புதிய ஏற்பாடு தொன்மத் தொகுப்பில் 27 நூல்களில் 14 கடிதங்கள், மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் பெரிதும் பவுல் பற்றியே , என பெருமளவில் பவுல் கதைகள். இன்றைய கிறிஸ்துவ மதத்தினை உருவாக்கியவர் பவுல் எனவே அறிஞர்கள் ஏற்கின்றனர்.

பவுல் மதம் மாறி கதை   

 அப்போஸ்தலர் 9: 3 எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. 4 சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம். 5 சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, 6 நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது. 7 சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் ஒளி & யாரையும் பார்க்கவில்லை.
 அப்போ22:6 “ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. 7 நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது. 8 .நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன்.    அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப் படுத்துகிறவன் நானே’ என்றது.9 என்னோடிருந்த மனிதர்கள்  அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.
கடைசியாக உள்ள கதையில் ஒளி பார்த்தனரா? ஒலி கேட்டனரா? விஷயம் இல்லை ஆனால் பவுல் யூதர் அல்லாதவரிடம் பணி செய்யச் சொன்னதாக ஒரு புது கதை
 

அப்போஸ்தலர் 26: 13 நான் தமஸ்குவுக்குப் போய்க் கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது. நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன். சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது. அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது. 14 நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ‘சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொண்டிருக்கிறாய்’ என்றது.  15 “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே. 16 எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய். 17 நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன். 18 உண்மையை இம்மக்களுக்கு நீ காட்டுவாய். அதனால் மக்கள் இருளிலிருந்து ஒளிக்குத் திரும்புவார்கள். 

பவுலின் பிரச்சாரமும் ஜெருசலேம் சபையும் 

 

இயேசுவின் மரணத்திற்கு 20 வருடம் பின்பு, யூதர் அல்லாதவர்களை பவுல் சேர்ப்பது பற்றிய ஒரு விசாரணை.  அனைத்து அப்போஸ்தலர்  ஜெருசலேம் ஆலயத்தைப் போற்றி தங்கிட அங்கே நடந்த கூட்டம்.
இறந்த மனிதன் இயேசுவை வணங்குவதா ஏதும் இல்லை, பவுலால் மாற்றப்பட்டவர்கள், யூத மதச் சட்டப்படி கோஷராக நடக்க வேண்டும்
  அப்போஸ்தலர் 15: 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான்.                                                                                                                                20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:  ‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’

பவுலின் துணைவனான யூதர் அல்லாத தீமோத்தேயு விருத்தசேதனம செய்ய வைத்தனர்

 அப்போஸ்தலர் 16:3  3 தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.
இயேசுவின் மரணத்திற்கு 30 வருடம் பின்புஜெருசலேம் ஆலயத்தைப் போற்றி அங்கே மோசே சட்டப்படி மொட்டை போட்டு, ஆலயச் சுத்தம் எனப் பிராயசித்தங்கள் செய்ய ஆணையிட்டனராம்
 அப்போஸ்தலர் 21: 17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர்.  

22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.

 நாம் மேலே கண்டது கொண்டு இயேசு இறந்து 30 வருடம் பின்பு அனைத்து அப்போஸ்தலரும் ஜெருசலேம் ஆலயத்தைப் போற்றி தங்கியிருந்தனர்.  மோசே சட்டப்படி வாழ்ந்து, மாறியோரை விருத்தசேதனம் செய்ய வைத்து  பவுல் மற்றும் துணைக்கு வந்தவர்களையும் மோசே சட்டப்படி மொட்டை போட்டு, ஆலயச் சுத்தம் எனப் பிராயசித்தங்கள் செய்ய ஆணையிட்டனராம். 

இயேசு சீடர்கள் யூதரிடம் மட்டுமே இயங்கினர் 

 அப்போஸ்தலர் 11: 19 ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள்.

பவுல் - யூதர் அல்லாத மற்ற இனத்துக்கான மதமாற்றுபவராக நியமிக்கப்பட்டேன் எனச் சொல்லுதல்  

கலாத்தியர் 1:16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப் படுத்தினார்.   

கலாத்தியர் 2:7  தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார்,8. ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன். 

ரோமர் 11:13 நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக் கொண்டு   ருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாக   ருக்கிறேன். 

இயேசு சீடரோடு இயங்கிய காலத்தில் யூதர் அல்லாதவரோடு பழகவே இல்லை, சீடர்களை யூதரிடம் மட்டுமே இயங்கச் சொன்னார் - எனவே தான் இயேசு செத்து 25 வருடம் பின்பான கடிதங்களில் இப்படி பவுல் எழுத வேண்டியதாகியது

சுவிசேஷக் கதை இயேசுவின் போதனை 

  இயேசு சீடருக்கு கொடுத்த கட்டளை
மத்தேயு 10 :5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.
மத்தேயு 5:17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது. 19 ,“ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.
 மத்தேயு 23:15  ,“விவிலிய பாதிரியே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் வேஷக்காரர்கள்.  ஒருவரையாவது உங்கள் மத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.”
 மத்தேயு 6: 1  ,“நீங்கள்  மதச் செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.                                                   5.,“நீங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள்.  6நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.


அப்போஸ்தலர் பவுல் யார்??

இயேசு யூதராகப் பிறந்து  அடிப்படைவாத யூதராகவே இறந்து போனார், இயேசு இறந்து 30 வருடம் பின்பும் சீடர்கள் அனைவரும் ஜெருசலேம் ஆலயத்தை போற்றி அங்கேயே வாழ்ந்தனர். ஆனால் பவுல் என்பவர் இயேசுவின் கருத்திற்கு மாறுபட்டு யூதர் அல்லாதவர்களை சேர்ப்பதை காசு பண்ணும் தொழிலாக செய்தார். பவுல் யார்?

 கூடாரம் கட்டும் தொழில் செய்தவர் 

 அப்போஸ்தலர் 18:1 இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான். 2 கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்து கொரிந்துவுக்கு வந்திருந்தனர்.  கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். 3 அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.

பவுல் ஒரு ரோமன் குடிமகன் 

 அப்போஸ்தலர் 22 : 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான். 26அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளை  டுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான். 27அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான். பவுல் “ஆம்” என்றான். 28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான். ஆனால் பவுல், “நான் பிறப்பால் ரோமன் குடிமகன்” என்றான். 29. பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு  விலகினர். ரோமன் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.

யூத மதப் பாதிரிகள் விசாரணை சங்க உறுப்பினர்-சதுசேயர் 

 அப்போஸ்தலர் 26: 9 நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். 10 இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமை  பாதிரிகளிடம் அதிகாரம்  பெற்றேன்.   அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன். 
(அப்போஸ்தலர் 5: 17 தலைமை பாதிரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். 18 அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்.)  

 யூத மதப் பாதிரியாகும்படி விவிலியம் கற்ற பரிசேயன்

 அப்போஸ்தலர் 22 :3 “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் மாணவன்நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார்.
பிலிப்பியர் 3: நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன்.நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.

இந்த நாலில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கலாம், அல்லது நான்குமே பொய்யாக இருக்கலாம். 

பவுலுடைய அடிப்படை நம்பிக்கை தன் வாழ்நாளின் உலகம் அழியும் என, அதனால் திருமணம் செய்து கொள்ளதவர்கள் இனிமேல் திருமணம் அவசியமில்லை என்கிறார்.

யூத மோசே சட்டப்படி அவரவர் பாவத்திற்கு அவரவர்கள் தான் சாக முடியும்

 உபாகமம்  24.16   “பிள்ளைகள் செய்தக் பாவத்திற்காகப் பெற்றோர்கள் கொலை செய்யப் படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த பாவங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.  

 மனிதர்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள்

  யோபு 25:4 மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது  பெண்ணின் யோனியில் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?                                                                                      6அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!


No comments:

Post a Comment