Friday, February 11, 2022

மகாபாரதமும் திருக்குறளும் - நீ உன்னிடம் எப்படி செயல்படுவது போலவே பிற உயிரினங்களிடமும் நட -அறவழியின் முக்கிய விதி

 மகாபாரதமும் திருக்குறளும் 

                                 

 மனித வாழ்வியல் அறவழியின் முக்கிய விதி - நீ உன்னிடம் எப்படி செயல்படுவது போலவே பிற உயிர்  னங்களிடமும் நட

ஒருவன் தனக்குத் தீங்கு எனக் கருதுவதை மற்றவனுக்கு ஒருபோதும் செய்யக்கூடாது. இதுவே அறத்தின் சுருக்கமான விதியாகும். வேறு வழியில் செயல்படும் ஒருவன் ஆசைக்கு வசப்படுவதன் மூலம் அறமற்ற {அதர்மம் செய்யும்} குற்றவாளியாகிறான். - யுதிஷ்டிரனிடம் பிருஹஸ்பதி -அநுசாஸனபர்வம் 113:8   mahabharatham.arasan.info/2019/06/Mahabharatha-Anusasana-Parva-Section-113.html 

ஒருவன், அறத்தில் முக்கியக் கவனம் செலுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் வாழ வேண்டும். அவன் தன்னைப் போலவே பிற உயிரினங்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.  - யுதிஷ்டிரனிடம் விதுரன்- சாந்திபர்வம் 167:9   mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-167.html

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. குறள் 190: புறங்கூறாமை.
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் பார்ப்பார்களேயானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. குறள் 315: இன்னாசெய்யாமை.
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாகக் கருதிக் காப்பாற்றா விட்டால் அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். குறள் 319: இன்னாசெய்யாமை
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் முற்பகலில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் பிற்பகலில் தானாக வரும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. குறள் 436: குற்றங்கடிதல்.
முதலில் தன் குற்றத்தைக் கண்டு க் கொண்டு அதன் பின்னர் பிறருடைய குற்றத்தை காணும் ஆற்றல் மிக்க தலைவனுக்கு என்ன குறை நேரும்?


பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. குறள் 1015: நாணுடைமை.
சாலமன் பாப்பையா உரை:தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் உறைவிடம் என்று உலகத்தவர் கூறுவர்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலைமை.
பிறர் பொருளையும் தம் பொருள் போலவே கருதி நேர்மையுடன் வியாபாரம் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...