தமிழின் மிகவும் தொன்மையான இலக்கியங்கள், பின்பான தொல்காப்பியம் இரண்டிலும் கடவுள், தெய்வம், இறைவன் என்ற சொற்கள் பல முறை பயன்படுத்தி உள்ளது. பாடலில் பயன் பாட்டின்படி பொருள் மாறுபடும்.
திருக்குறளில் தெய்வம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். . குறள் 50: இல்வாழ்க்கை
இந்தக் குறளை வைத்து திருக்குறளை சிறுமை செய்வோர் பலர், திராவிடியா அரசியல்வியாதிகள், சர்ச் அடிமை கிறிஸ்துவ கயவர்கள், காலனி ஆதிக்க மதமாற்ற நச்சுப் பொய்களுக்கு அன்டிமையாகி திராவிடியார் ஆதரவிற்கும் சர்ச் காசிற்கும் தமிழ் அறிந்து பொய் பேசும் நவீன டுமீல் புலவர்கள். அதாவது தமிழர் முன்னோரை வழிபட்டனர் என அறிவிற்கு சிறிதும் தொடர்பில்லாத வேசித்தன பொய் கூறுவர்
மணக்குடவர் உரை: தமிழ் மொழி நடை, யாப்பு, வெண்பா அமைப்பு அனைத்தையும் கொண்டு திருக்குறள் காலத்திலிருந்து அடுத்த ஒரு நூற்றாண்டிற்குள் எழுந்ததே தமிழ் சமணர் மணக்குடவர் உரை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். . குறள் 50: இல்வாழ்க்கை
குறள் 50: இல்வாழ்க்கை - மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவன் என்றவாறு.
தமிழ் சமணர் மணக்குடவர் இந்தக் குறளில் மிகத் தெளிவாக தேவர்களை குறிக்கிறது என்பது திருவள்ளுவர் மரபினை ஒட்டியே. மனித வாழ்க்கை என்பது மீண்டும்(339) மீண்டும் நிகழ்வது, ஒரு பிறவிக்கும் இன்னொன்றிற்கும் இடையே செய்த செயல்கள்படி சொர்கம் அல்லது நரகம் சென்று மீண்டும் பிறப்பர், நல்ல செயல் செய்து இறைவன் திருவடியைப் பற்றி கொண்டால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடலினைக் கடக்கலாம்.
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். துறவு:346
தேவர்கள் வாழும் இடம் (சொர்கம்) என்பதை வள்ளுவம் மேலுலகம், வியன்உலகம், அவ்வுலகம், புத்தேள் நாடு என பல பெயர்களில் குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியம் - பின்னரான தொல்காப்பியம் இரண்டிலும் கடவுள்/ தெய்வம் என்பவை - முழு முதல் கடவுள், தேவர்கள் மற்றும் ஊழ் எனும் தலை விதி மூன்றையும் குறிக்க பயன்பட்டுள்ளது.
- தெய்வம் என்பது ஊழ். [10]இது நம் உடலோடும் உயிரோடும் ஊழ்த்துக் (பூத்துக்) [11] கிடப்பது.
தெய்வத்தால் ஆகா(து) எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். - திருக்குறள் 619
- ↑ இணர் ஊழ்த்தும் நாறா மலர் - திருக்குறள் 650
- தெய்வம் என்பது ஊழ். தன் குடிப்பெருமை மேலோங்கப் பாடுபடும் ஒருவனுக்கு உதவ ஊழ்த்தெய்வம் வரிந்துகட்டிக்கொண்டு வந்து துணைநிற்கும்.[12]
குடிசெய்வல்' என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் - திருக்குறள் 1023
- வான் உறையும் தெய்வம்: தெய்வத்தில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று 'வான் உறையும் தெய்வம்'. இதனை யாரும் கண்டதில்லை. வையத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவர் இந்த வான்தெய்வத்துக்கு ஒப்பாக வைத்துத் தொழப்படுவர்.[13]
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - திருக்குறள் 50
- எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாமல் பிறர் குறிப்பறிந்து நடந்துகொள்பவனைத் தெய்வத்துக்கு ஒப்பாக எண்ணவேண்டும்.[14]
ஐயப் படாஅ(து) அகத்த(து) உணர்வானைத்
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல் - திருக்குறள் 702
- தெய்வம் எனப் போற்றப்படுபவர் துறவிகள். இல்லறத்தான் பேணவேண்டிய புலத்துறைக் களங்கள் ஐந்து. அவை தென்புலத்தார் எனப்படும் வயது முதிர்ந்தோர், தெய்வம் எனப்படும் துறவிகள், விருந்தினர், ஒருவனைச் சார்ந்து வாழும் ஒக்கல், தான் - என்னும் களங்கள். [15]
தென்புலத்தார், தெய்வம், விருந்(து),ஒக்கல், தான்,என்(று)ஆங்(கு)
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - திருக்குறள் 43
- கணவன், தெய்வத்தைப் பேணவேண்டும். மனைவி தொழமாட்டாள். காரணம், கணவனே அவளுக்குத் தெய்வம்.[16↑
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழு(து)எழுவாள்
'பெய்'எனப் பெய்யும் மழை - திருக்குறள் 55
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. குறள் 18: வான்சிறப்பு
மணக்குடவர் உரை:சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. குறள் 43: இல்வாழ்க்கை.
மணக்குடவர்உரை:பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. குறள் 55: வாழ்க்கைத் துணைநலம்.
மணக்குடவர்உரை:தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். குறள் 619: ஆள்வினையுடைமை.
மணக்குடவர் உரை:புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது
ஊழின் காரணத்தால் ஒரு செயல் நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். குறள் 702: குறிப்பறிதல்.
மணக்குடவர்உரை:பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க.
ஐயப்படாமல் அடுத்தவனின் மனத்தில் உள்ளதை உணர வல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். குறள் 1023: குடிசெயல்வகை.
மணக்குடவர் உரை:குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.
தன் குடியையும் நாட்டையும் உயர்வடையச் செய்திட ஓயாது செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்
No comments:
Post a Comment