Sunday, February 13, 2022

திருக்குறளில் அறக் கடவுள்

 திருக்குறளில் அறக் கடவுள் 

 என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.    குறள் 77: அன்புடைமை.
மணக்குடவர் உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.
சாலமன் பாப்பையா உரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்                

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. குறள் 204: தீவினையச்சம்.
மணக்குடவர் உரை:பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
சாலமன் பாப்பையா உரை: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. குறள் 130:அடக்கமுடைமை.
மணக்குடவர் உரை:வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறக்கடவுள் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. குறள் 1018: நாணுடைமை
மணக்குடவர் உரை:உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.
சாலமன் பாப்பையா உரை:மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறக்கடவுள் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.
உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் குறள் 271: கூடாஒழுக்கம்
மணக்குடவர் உரை:கள்ள மனத்தை உடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன் உடம்பின் உண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும். பூதங்களைந்தும் அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.
பொழிப்பு (மு வரதராசன்): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
அறம்= தர்ம சாஸ்திரங்கள்

புறங்கூறிப் பொய்த்து  உயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கத் தரும்.   குறள்183: புறங்கூறாமை 

அறங்கூறும் ஆக்கத் தரும். - தர்ம சாஸ்திரங்கள் அற- நீதி நூல்கள் கூறும் புண்ணியம்

ஒருவன் இல்லாதபோது அவனைப் பற்றிப் புறம்பேசிக், அவனைக் காணும்போது பொய்யாக அவனுடன் பேசி பொய்யாக வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அறநூல்கள் கூறும் உயர்வைத் தரும். 

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...