Sunday, February 6, 2022

திராவிடியார் அரசு டாஸ்மாக் வைன் (ஏசுவின் ரத்தம்) கடைகளில் பார்களை மூட வேணும் - உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஈவெராமசாமியார் வழி திராவிடியார் அரசு டாஸ்மாக் கடைகளில்- மு.கருணாநிதி பின்பான ஆட்சிகள் திறந்த சாராய வியாபாரக்   வைன் (ஏசுவின் ரத்தம்) கடைகளில் பார்களை மூட வேணும் - உயர் நீதிமன்றம்

 
  பிப் 04,2022  சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 

டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
 அதில், ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன், பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும். 
டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை. டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த இந்த சட்டம் அனுமதிக்கவில்லை.
  
பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பார்களில் மதுபானம் அருந்திய நபர்களை பொது இடங்களில் நடமாட எவ்வாறு அனுமதிப்பது?.
பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை கமிஷனருக்கு மட்டுமே உள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது. இவ்வாறு தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...