Friday, February 11, 2022

திருக்குறளை வைத்து பிரிவினை செய்வோருக்கு திருவள்ளுவர் கொடுக்கும் தண்டனை

 திருக்குறளை வைத்து பிரிவினை செய்வோருக்கு திருவள்ளுவர் கொடுக்கும் தண்டனை  

புறங்கூறிப் பொய்த்து  உயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கத் தரும்.   குறள்183: புறங்கூறாமை 

அறங்கூறும் ஆக்கத் தரும். - தர்ம சாஸ்திரங்கள் அற- நீதி நூல்கள் கூறும் புண்ணியம்

ஒருவன் இல்லாதபோது அவனைப் பற்றிப் புறம்பேசிக், அவனைக் காணும்போது பொய்யாக அவனுடன் பேசி பொய்யாக வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அறநூல்கள் கூறும் உயர்வைத் தரும். 

இந்திய ஞான மரபின் வேர்களான வேதங்களும் அவற்றின் சாரமான தர்ம சாஸ்திரங்களையும் போற்றி அதனைத் துணை கொண்டே வள்ளுவர் திருக்குறள் இயற்றினார்

 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். குறள் 543:  செங்கோன்மை

மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

ஒரு நல்ல அரசினின் வழி என செங்கோன்மை அதிகாரத்தில், அரசனின் செங்கோல்(குறள் -543) பிராமணரில் வேதங்களுக்கும். அவற்றினால் ஆன அற நூல்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் 

சங்க இலக்கியம்,முதல் சிலப்பதிகாரம் ஏன் திருக்குறள் -அந்தணரை தமிழரின் மூத்த தொல்குடியினர் நிறைமொழி மாந்தர் எனும் அந்தணரை ஆரியர் என்பவர்கள் காலனி ஆதிக்க கிறிஸ்துவ மதமாற்ற சக்திகளின் நச்சு போதனைக்கு அடிமையாகி உண்மையை மறைக்கின்றனர்.
பாதிரி கால்டுவெல்படி தமிழ் என்பது ஸ்கைத்திய மொழி குடும்பம், கைபர் போலன் கணவாய் வழியே வந்த அன்னியர் மொழி.
ஹார்வர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் நூல் மீண்டும் மிகத் தெளிவாக வேதங்களின் பல பகுதிகள் முடிந்த பின்னர் வெளியிலிருந்து வந்தெ வந்தேறி தான் தமிழ் - திராவிடியார்கள்
ஆரியர் அன்னியர் என்போர் எப்போது இந்தியாவிற்கு வந்தார்கள் என பன்னாட்டு பல்கலைக் கழக பேராசிரியர் ஏற்கும் ஆதாரத்தோடு நிரூபித்தால் 2 கோடி பரிசு  

கிறிஸ்துவ மிஷநரிகள் வழிகாட்டலில் கிறிஸ்துவ  ஆங்கிலேய ஆட்சி இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து சென்றதை இன்று திரும்பி தரவேண்டும் எனில் Rs.3500 லட்சம் கோடி ஆகும் என டில்லி ஜேஎன்யு பல்கலைக் கழ்க பொருளாதாரப் பேராசீர்யர், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் நூலில் எழுதி உள்ளார்

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.  குறள் 735:நாடு.
மொழி, அரசியல்  இனம் சாதி, சமய, , கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள்,  உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்தியவர்கள் இல்லாது இருப்பதே நாடு. 
திருக்குறள் இந்திய ஞான மரபு சனாதனத்தின் கிளை; மதமாற்ற சக்திகளின் அடிமையாக வள்ளுவத்தினை கையில் வைத்துக்கொண்டு ஆரிய-திராவிடியார் என்போர் மரணிப்பது நீதி நூல்கள் தரும் புண்ணியம் தரும்- திருவள்ளுவர்

No comments:

Post a Comment