Saturday, February 26, 2022

குர்ஆன் கதை மறுமை- சுவனத்தில் 72 கன்னிப்பெண்கள்

முகமது பரலோகத்தை குறித்து என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.

"பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். ஸுன்துஸ், இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே அங்கு நடைபெறும்; மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்"
 - திருக்குர்ஆன் 44:51-54
https://islamiyaallahvumshaitanum.blogspot.com/2016/11/13.html
"நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும், ஒரே வயதுள்ள கன்னிகளும் பானம் நிறைந்த கிண்ணங்களும் இருக்கின்றன"  - திருக்குர்ஆன் 78:31-34 
(அரபி மூலபிரதி 'வீங்கிய மார்புகளை உடைய ஒரே வயதுள்ள கன்னிகள்' என்று கூறுகிறது, ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரே வயதுள்ள கன்னிகள் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது, தமிழ் மொழிபெயர்ப்பில் ஏன் இந்த பிழை?) 
"மேலும், உன்னதமான விரிப்புகளில் அமர்ந்திருப்பர். நிச்சயமாக ஹூருல் ஈன் என்னும் பெண்களைப் புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; தம் துணைவர் மீது பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப் புறத்தோருக்காக ஆக்கி வைத்துள்ளோம்" 
- திருக்குர்ஆன் 56:34-38
"இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் - ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது அமர்ந்திருப்பார்கள். தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும். அது மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட அமர கன்னியரும் இருப்பார்கள். தூய்மையில் அவர்கள் சிப்பிகளில் மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்"  - திருக்குர்ஆன் 37:43-49
"நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், இறையருளில் இன்புற்றும் இருப்பார்கள். அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். அவர்களுக்குக் கூறப்படும்: “நீங்கள் நன்மைகளைச் செய்து கொண்டிருந்ததற்காக, சுவர்க்கத்தில் தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்”, அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய ஹூருல் ஈன்களை மணம் முடித்து வைப்போம்" - 52:17-20
"அவற்றில் அடக்கமான பார்வையுடைய அமர கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்"  - திருக்குர்ஆன் 55:56-58
"அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? ஹூர் என்னும் அக்கன்னியர் அழகிய கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்கள் பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது (இது என்ன???)" - திருக்குர்ஆன் 55:70-78
"பொன்னிழைகளால் ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது - ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். நிலையான இளமையுடைய இளைஞர்கள் இவர்கள் பணிக்காகச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு அவர்களிடம் சுற்றி வருவார்கள். அப்பானங்களைப் பருகும் அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள். இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் - விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள். அங்கு இவர்களுக்கு ஹூருல் ஈன் என்னும் நெடிய கண்களுடைய கன்னியர் இருப்பர். மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் இருப்பார்கள். இவையாவும் சுவர்க்க வாசிகள் இம்மையில் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு கூலியாகும்" - திருக்குர்ஆன் 56:16-24
முகமது அவர்கள் ஆணித்தரமாக கூறுகிறார். பூமியில் நற்செயல்கள் செய்வோருக்கு அல்லாஹ் நெடிய கண்களும், முத்துகளை போன்ற அழகும், வீங்கிய மார்புகளும் உடைய ஒரே வயது கன்னிபெண்களை உருவாக்கி வைத்திருக்கிறாராம். அவர்களை இதற்கு முன் எந்த ஆடவனும் தீண்டியதில்லை என்றும், அவர்களை அல்லாஹ் சுவர்கத்தில் கூடாரங்களில் மறைத்து வைத்துள்ளதாகவும் முகமது கூறுகிறார். அங்கே அவர்களுக்கு மதுபானம் கிண்ணங்களில் ஊற்றி தரப்படும் என்றும், திராட்சை பழங்களும், மிகுதியான கனிகளும் தரப்படும் என்றும் கூறுகிறார். இதுவே சுவர்க்கவாசிகளுக்கு அல்லா தரும் கூலி என்கிறார் முகமது.
சரி, மனைவியர்கள் இருக்கையில், எதற்காக இவ்வளவு ஹூருலீன்கள் ?  தங்களது கணவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளாத (கள்ளத்தொடர்பு) காரணத்தால் நரகத்தில் பெண்களே மிகுதியாக இருக்கக் கண்டதாக முஹம்மது நபி கூறுகிறார்.
புகாரிஹதீஸ் எண் : 3241
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் (மிஅராஜ்- விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களை கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஹம்மது நபி, பெண்கள் என்றாலே பிற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு கொள்பவர்கள் என்று முடிவு செய்துவிட்டாதாகவே தோன்றுகிறது. மிஃராஜ் பயணத்தின் பொழுது கண்ட காட்சிகளில் இதுவும் இடம்பெறுகிறது.,
பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.
முஹம்மது நபியின் சந்தேக குணத்தை பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைத்தது உமர் கத்தாப் அவர்களின் பணியாகும். இன்று முஸ்லீம் பெண்களின் முகங்கள் கருப்புத் திரைகளால் மூடப்பட்டிருப்பதற்கு  இவர்களது இந்த குணம் மட்டுமே காரணம்.
எனவே, பெரும்பாலான பெண்கள் கள்ளத் தொடர்பு குற்றத்திற்காக நரகத்திற்குள் வீசப்பட இருப்பதால், ஆண்களின் இச்சையை  சரிகட்டவே ஒவ்வொருவருக்கும் 72 ஹூருலீன்கள் வழங்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஹூருலீன்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஹதீஸ்களிலிருந்து சில செய்திகள்.
புகாரிஹதீஸ் எண்: 3327 அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள் பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள். எச்சில் துப்பவும் மாட்டார்கள், மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவருடைய சீப்புக்கள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.
புகாரிஹதீஸ்:3246 ,அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது, எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வெருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வெருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளது பளிங்குமேனியின் பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களுடைய பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களுடைய தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களுடைய வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும்.
Sahih Muslim  6793
The great Islamic scholar, Ibn Kathir, comments on 78:33:
(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said, (Kawa`ib) “This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.” The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah…
(சம வயதுடையவர்கள் ஹூரூலீன்களுக்கு வட்டவடிவமான நிமிர்ந்த்த மார்புகள்  உடையவர்கள்)
Comment on 56:36 from Maariful Tafsir
The word “abkaran, being the plural of bikr, means ‘virgins’. The sense is the creation of the maidens of Paradise will be of such a nature that, even after every sexual intercourse, they will remain like virgins  (Page: 290)
(ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் அவர்கள் (ஹூரூலீன்கள்) கன்னியர்களாகவே இருப்பார்கள்)
Comment on 44:54 from Maariful Tafsir
… Although the inmates of Paradise will not be legally obligated to observe the precepts of Shariah the purpose of marriage will be to honour them. Therefore, this should not raise any objection IF the word is taken in the first sense, houris having big dark eyes will be given as life partners to the men of Paradise. The houris in this case will be granted to them as a gift. There will be no need for a contract of marriage as is done in this world. (Page 762).
(மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு, ஹூரூலீன்கள் பரிசாக வழங்கப்படுவார்கள். உலகில் இருப்பதைப் போல அங்கு எவ்வித திருமண ஒப்பந்தங்களும் தேவையில்லை)
இத்தனை ஹூருலீன்களையும் வைத்துக் கொண்டு சராசரி பாலியல் பலம் கொண்ட மனிதன் தன் இச்சையை எப்படி தீர்க்கமுடியும்?என்ற உங்களது அச்சம் நியாயமானதே. இதற்கும் சரியான தீர்வு முஹம்மது நபி அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.
Sunan al-Tirmidhi #2459 A man will have intercourse in Paradise with his wives from among al-hoor al-‘iyn and his wives from among the people of this world, if they enter Paradise with him.A man will be given the strength of a hundred men to eat, drink, feel desire and have sexual intercourse. It was narrated from Anas that the Prophet said: “The eliever in Paradise will be given such and such strength for sexual intercourse.” He was asked, “O Messenger of Allaah, will he really be able to do that?” He said, “He will be given the strength of one hundred (men).” 
(ஹூருலீன்களுடன் இணைவதற்கும் முடிவில்லா சுகம் பெறுவதற்கும் நூறு பேருடைய ஆற்றல் சொர்க்வாசி ஆண்களுக்கு வழங்கப்படும். அறிவிப்பவர் அனஸ் (ரலி) திர்மிதீ.) 
ஜிப்ரீல் முஹம்மது நபிக்கு ஆண்மைபலம் பெருக லேகியம் (பக்குவமாக சமைக்கப்பட்ட இறைச்சி) கொடுத்ததை முன்பே உங்களிடம் கூறியிருக்கிறேன். அதைவிட பல மடங்கு சக்த்திவாய்ந்த லேகியம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறதே பிறகு என்ன கவலை? ஆற்றல் குறைபாடு உள்ளவர்கள், அல்லஹ்விடம் முறையிடலாம். ஜிப்ரீலைத் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து சற்று கூடுதல் சக்தியுடைய லேகியம் வாங்கி சாப்பிடவும்.






ஒரு நாளைக்கு நூறுமுறை என்றால்,  மறுமை வெற்றியாளர்கள்  சுமார் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை RECHARGE செய்யப்பட்டு ஹூருலீன்களை  ‘வெற்றி கொள்ள களத்திற்கு’ அனுப்பப்படுவார்கள்.
சாதாரண ஆண்மை பலத்திற்கே நம்மில் பலருக்கு பலதாரங்கள் தேவைப்படுகிறது. இதில் நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்பட்டால் மென்மையான ஹூருலீன்களின் நிலை என்னாவது? என்று கவலைப்பட வேண்டாம்.உங்களது அந்த கவலையையும் அல்லாஹ் கவனத்தில் கொண்டுள்ளான்,
நிச்சயமாக நாம் (ஹூருல்ஈன்களான) அவர்களை பிரத்தியேகமாக உண்டாக்கினோம்.
(குர் ஆன் 55.35)

ஹூருலீன்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். எவ்வளவு முறை உறவு கொள்ளப்பட்டாலும் சலிப்படையவோ வேதனையடையவோ மாட்டார்கள். அவர்களுக்கு மாதவிலக்கு கிடையாது என்றுமே கன்னித்தன்மையுடையவர்களாக இருப்பார்கள். இவை பற்றிய ஹதீஸ்கள் கூறும் வர்ணணைகளின் சுருக்கமான தகவல்கள்.


எகிப்திய அறிஞரின் குர்ஆன் விரிவுரையிலிருந்து
Imam Al-Suyuti (died 1505). He wrote:
 “Each time we sleep with a houri we find her virgin. Besides, the penis of the Ejected never softens. The erection is eternal; the sensation that you feel each time you make love is utterly delicious and out of this world and were you to experience it in this world you would faint. Each chosen one [ie Muslim] will marry seventy  houris, besides the women he married on earth, and all will have appetizing vaginas.”
(ஒவ்வொரு முறையும் (உறவுக்குப் பின்னும்)ஹூரூலீன்களைக் கன்னியர்களாகவே நாம் காண்போம். அன்றியும், ஆணுறுப்பு ஒருபொழுதும் தளர்ந்து விடாது. அதன் விறைப்புத்தன்மை நிலையானது; உங்கள் காதலால் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணரும் முழு இன்பம் உலகில் இல்லாதது. அதை(இன்பங்களை) இவ்வுலகில் நீங்கள் அனுபவித்தால் மயங்கி விடுவீர்கள்.  தேந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் 70 ஹூரூலீன்களை திருமணம் செய்வார்கள். அன்றியும், அவரது இவ்வுலக மனைவியர்கள் (இச்சையைத்) தூண்டும்படியான பெண்ணுறுப்புகளைப் பெற்றிருப்பார்கள்.

ஆண்களுக்கு ஹூருல் ஈன்கள். Ok.  பெண்களுக்கு என்ன…?
56 : 34 -38 - அவர்களைக் கன்னியர்களாகவும் (லாய்லாஹ்?), தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சம வயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.

இப்படியெல்லாம் கூறப்பட்டாலும், Maulana Umar Ahmed Usmani ஹூரி என்பது இரு பாலாருக்கும் பொருந்தும் என்கிறார். (அப்படியானால் சுவனம் செல்லும் பெண்களுக்கும் 72 ஆண் ஹூரிக்கள் கிடைக்கும் என்பதுதானே சரியாக இருக்கும்).
பிஜெ பெண்களுக்கும் கிடைக்கும் என்கிறார்.
8. சொர்க்கத்தில் பெண்களுக்கு துணைகள் உண்டா?
வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா? பெண்களுக்கு சம உரிமையில்லையா? என்ற போர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கிதும் இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களையும் வரலாறுகளையும் புரட்டி தேடிப் பார்த்தனர். ஹதீஸ்கள் ஹூருலின்களை பெண்கள் என குறிப்பிட்டு பல விதமாக அவர்களின் அழகை வர்ணணை செய்கிறது. ஹூருலின்களில் ஆண்களும் உண்டு என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களில் எவ்விதமான ஆதரமில்லை. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, ஹூருல் என்பது பன்மைச் சொல் ஆண், பெண் என இருபாலரையும் குறிப்பிடும். மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் போலவே பெண்களுக்கும் வழங்கப்படும் நிச்சயமாக, ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் உண்டு என்றனர். இதை Dr. ஜாகீர் நாயக் அவர்களும் தன்னுடைய பதிலில் குறிப்பிடுகிறார்.,
… மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் ‘ஹூர்’ என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் ‘ஹூர்’ என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் – மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி ‘ஹூர்’ என்கிற அரபி வார்த்தைக்கு Companions (இணை அல்லது துணை ) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி – சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.
பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள். அருள்மறை குர்ஆனில் ‘ஹூர்’ என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் – சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது – சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத – மனித காதுகள் எதுவும் கேட்டிராத – மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் – மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹூருலீன்கள் என்பவர்கள் பெண்களே என்றால்,
குழந்தைகளை பராமரிப்பது, உணவு சமைப்பது, துணிகளை துவைப்பது வீட்டைப் பராமரிப்பது என்ற எவ்விதமான சேவைகளும் அங்கு பெண்களுக்கு கிடையாது. சுவைமிகுந்த உணவுகளும், பழங்களும், பானங்களும், உடைகளும், ஆபரணங்களும் அளவின்றி வழங்கப்படும். எதிர்கால தேவை, வாரிசுகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற கடமைகளும் இருக்காது. இருக்கும் ஒரே வேலை, தங்களது கணவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஏனென்றால் ஒவ்வொரு மனைவியரையும் ஒரே மாதிரியாக நீதத்துடன் நடத்த வேண்டும் அவர்களுக்கிடையே வேற்றுமை காணக் கூடாது. ஒவ்வொரு மனைவியருடனும் சமஅளவில் நேரத்தை செலவிட வேண்டும் என்பதும் முஹம்மது நபி உலக வாழ்வில் செயல் முறையில் நமக்கு கற்றுத் தந்த படிப்பினைகளாகும்.
ஒரு சொர்க்கவாசி, தன் மனைவியிடம் சென்று தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், 72 ஹூருலீன்கள் X 15 நிமிடங்கள் = 1080 நிமிடங்கள். அதாவது, அவர்களது கணவர்கள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல்படுவதாக இருந்தாலும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் வரையிலும், ஹூருலீன்கள் உட்பட ஒவ்வொரு மனைவியரும் தங்களது முறை வருவதற்காக காத்திருக்க வேண்டும். உணவு உறக்கம் போன்ற தேவைகளுக்கான நேரம் தனிக்கணக்கு.
மனைவியர்கள் விரும்பினால் தங்களது கணவர்கள் ஹூருலீன்களுடன் நிகழ்த்தும் வீர விளையாட்டுக்களை கண்டு பரவசமடையலாம். அல்லது தங்களது கணவர்கள் 72 ஹூருலீன்களுடனும் சாகசங்கள் பல புரிந்து வரும்வரை ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும் (வேறு வழியில்லை…!)
ஹூருலீன்களில் ஆண்களும் உண்டு என்றால்,
மறுமையில் வெற்றி பெற்றவர்கள் தம்பதிகளாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று முன்பே பார்த்தோம். பெண்களில் மிகப் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்களே. வெகு சிலரே திருமண வாழ்க்கையின்றி இருப்பவர்கள். இவர்களைத் தவிர மீதம் இருப்பவர்கள் கணவன் நரகத்திற்கு சென்று விட்டதால் தனிமையில் சொர்கத்திற்கு வரும் பெண்கள் இவர்களுக்கும் ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள்.
அல்லது அனைத்து பெண்களுக்கும் பாகுபடின்றி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் பரிசாக வழங்கப்படலாம். எப்படி இருந்தாலும், அறிஞர்களால் தரப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் கூறுவதென்றால், ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே பெண்களுக்கும் சிறப்பு ஆற்றல்களும், 72 ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள் என்று உறுதியாகக் கூறமுடியும்.
“……………….”
“…………………”
(இவ்விடத்தில் ஆண்களுக்கு விவரித்த சொர்க்கலோக சல்லாபக் காட்சிகளை பெண்களுக்கும் கற்பனை செய்து கொள்ளவும்)
ஆக,சொர்க்கவாசியாகத் தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் 72 கட்டழகு கன்னியர்களும், காளையர்கள் இணையக் காத்திருக்கின்றனர் (ஒருவேளை இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். யார் கண்டது ?!)
ஒருவேளை, சொர்க்கவாசிகள் தங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஹூருலீன்கள் போதவில்லை என்று நினைத்தால், அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Al Hadis, Vol. 4, p. 172, No. 34
Ali reported that the Apostle of Allah said, “There is in Paradise a market wherein there will be no buying or selling, but will consist of men and women. When a man desires a beauty, he will have intercourse with them.”
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் கூறினார், சொர்க்கத்தில் உள்ள கடைத்தெருவில் ஆண்களையும் பெண்களையும் தவிர வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றும் இருக்காது. ஒரு ஆண் விரும்பும் பொழுது (அங்குள்ள) அழகிய பெண்ணுடன் கலவியில் ஈடுபடலாம்.
Sunan al-Tirmidhi 1495
In paradise, there is a market of rich, beautiful and ever-young women; they will be pleased whoever buys them…
சொர்கத்தில் செல்வந்தர்களின் கடைத்தெரு உள்ளது, (அங்கு) மிக அழகான என்றும் இளமையாக உள்ள கன்னியர் (ஹூருலீன்கள்) உள்ளனர். யார் அவர்களை வாங்கினாலும் அவர்கள் (ஹூருலீன்கள்) அகமகிழ்வார்கள்.
உங்களது விருப்பம் போல பெற்றுக் கொள்ளலாம். (கடையின் உரிமையாளர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?)
முஹம்மது நபியால் வர்ணனை செய்து கூறப்பட்ட சொர்க வாழ்க்கையின் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். கேடுகெட்ட காட்சிகள்தான் கண்முன்னே தோன்றும்.
சிற்றின்பக் கேளிக்கை விடுதியை அடைவதற்காகவா இந்த உலகத்தில் பலவிதமான கொடுமைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்?. அல்லாஹ், இது போன்ற காட்சிகளைக் காண மிகுந்த சிரமம் எடுக்கத் தேவையில்லை. மிக மட்டரகமான நீலப்பட காட்சிகள் இணைய தளங்களிலும், குறுந்தகடுகளாக கடைத்தெருக்களிலும் எளிதாக கிடைக்கின்றது.
ஆக, சொர்கம் என்பது சிற்றின்ப வெறியர்கள் நிறைந்த பரத்தையர் இல்லத்தைப் போன்றது என்றும் கூறலாம். ஹூருலீன்களை காமப்பதுமைகள் (Sexdolls) என்று கூறுவதே பொருத்தமானது. இதிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிந்தனையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.
குர்ஆனில் காணப்படும் பல செய்திகள் சமகால அறிவியலிற்கும், பகுத்தறிவிற்கும் முரணானதாகும். காரணம்?
திருக் குர்ஆன் அறிவியல் புத்தகமல்ல.
இந்த பதில் திருக் குர்ஆன் அறக்கட்டளையின் குர்ஆன் மொழி பெயர்பின் 3:190 ன் Foot Note 14 ன் ஆரம்ப வரிகள். இதை கூறுவது என்னைப் போன்ற பகுத்தறிவுவாதிகள் அல்ல. ஒரு மார்க்க அறிஞர்கள் குழுவின் கருத்து.
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களால் 1500 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட இருக்கும் அறிவியல் வளர்ச்சியையும் அதனால் ஏற்படும் நாகரீகத்தின் போக்கை கணிக்க முடியாது. ஒரு புறம் குர்ஆன் நவீன அறிவியலுக்கு முன்னோடி, சவால் விடுகிறது குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்படாதது எதுவுமில்லை என்று நம்மை நாமே புகழ்ந்து நம்மையும் மற்றவர்களையும் எதற்காக ஏமாற்ற வேண்டும்? அறிவியலுடன் உள்ள முரண்பாடுகளைக் குறிப்பிட்டால், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றி முஹம்மது நபி அவர்கள் ஏன் கூற வேண்டும் அவரென்ன விஞ்ஞானியா? குர்ஆன் அறிவியல் புத்தகமல்ல என நழுவிவிடுவது மார்க்க அறிஞர்களின் வாடிக்கை.





No comments:

Post a Comment