Friday, February 4, 2022

தவறான தீர்ப்பு? -திருநெல்வேலி CSI சாப்டர் பள்ளி 3 மாணவர்கள் பலி-தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்கு ரத்து

இந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் முறையாக அணுகவில்லை. 

 

சிஎஸ் ஐ சர்ச் பள்ளி தாளளர் மற்றும் இருவரும் சில மாதம் முன்புதான் பணிக்கு வந்தோம் என்பதைந் நீதிமன்றம் ஏற்றது, முழுமையான உண்மைகளை தமிழக அரசு ப்ராசிகுஷன் கூறவில்லை என்பது தெளிவாக்கும்

  

Tirunelveli Schaffter School | 3 மாதங்களுக்கு முன் தகுதி சான்று பெற்றது     CSI  சர்ச் சாஃப்டர்   பள்ளி Dec 19, 2021  பள்ளி 3 மாதம் முன்பு தான் பிட்னெஸ் சர்டிபிகெட் வாங்கி உள்ளது (காணொளி).  இந்த சுவர் மோசமான நிலையில் உள்ளது என கம்ப்லைன்ட் முன்பே உண்டு என்பது செய்தி.

மாணவர் பள்ளி மோசமான நிர்வாகக் கோளாறால் இறந்த அடுத்த நாளே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விபத்து நடந்த உடனே சர்ச் பள்ளி கார் தந்திருந்தால் மாணவர்கள் இறப்பை த்டுத்தும் இருக்கலாம் என்கிறது செய்தி 

 

ண்மை இப்படி இருக்க சர்ச் நிர்வாகிகளை காக்க திமுக போலிசு, அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையான தகவல் சொல்லவில்லை என்பது நிச்சயம்.

  

சர்ச் நிர்வாக ஊழலால் பல விபத்துக்கள்

கடந்த 2014ல் இதே பள்ளியில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் காயமுற்றனர்.
*திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சேவியர் காலனியில் 2015ல் கட்டப்பட்ட சி.எஸ்.ஐ., சர்ச் கூரை காங்கிரீட் தளம் சரிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் இறந்தனர்*.
13 பேர் காயமுற்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. பெருமாள்புரத்தில் உள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லுாரி வளாகத்தில் முகப்பு கட்டட வளைவு பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. சி.எஸ்.ஐ., நிர்வாக மாற்றத்தால் அப்பணிகளும் அந்தரத்தில் நிற்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மாணவியர் வந்து செல்கின்றனர்.வளைவு கட்டுமான பொருட்கள் கீழே விழுந்தால் மாணவியர் களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.சி.எஸ்.ஐ., டயோசீஸ் நடத்தும் டி.டி.டி.ஏ., பள்ளிக் கட்டடங்கள் பலவும் பராமரிக்கப்படாமல் உள்ளதாக திருநெல்வேலி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த அமைப்புகளுக்கு தமிழக தலைமை செயலகம் வரை செல்வாக்கு இருப்பதால் இவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் புலம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன் கும்பகோணத்தில் கிருஷ்ணா நடுநிலை பள்ளியில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் இறந்ததால் அப்போதைய தமிழக அரசு பள்ளியை மூடி சீல் வைத்தது.  

பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி- நெல்லை தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்கு ரத்து 

 பிப்ரவரி 04, 2022 14:29 IST திருநெல்வேலி CSI சாப்டர் (SCHAFFTER) மேல்நிலைப்பள்ளி பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

நெல்லை பள்ளி சுவர் இடிந்து விபத்து

மதுரை: நெல்லை தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் கழிவறை சுவர் இடிந்தது. இதில் 3 மாணவர்கள் பலியாகினர். இது தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை மற்றும் கட்டிட காண்டிராக்டர் ஆகியோர் மீது நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, பள்ளியின் தாளாளர் செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில், சம்பவம் நடந்த சில மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாக கூறியிருந்தார். இதே போல பள்ளி தலைமை ஆசிரியரும் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வந்தார். இந்த நிலையில் இந்த மனுக்கள் அதே நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முடிவில், பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


 


அதே போல் இந்த பள்ளியையும் மூடி சீல் வைக்குமா இப்போதைய திமுக அரசு என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. மேலும் 10 லட்சம் கொடுத்தது வெரும் கண் துடைப்பே. சுர்ஜித் வில்சன் மரணத்தின் போது கொடுக்கப்பட்டது போல் 50 இலட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.



No comments:

Post a Comment

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க., 1 PUBLISHED ON : ஏப் 03, 2021 12:00 AM   https://www.dinamalar.com/weekly/uratht...