Monday, February 14, 2022

திருக்குறள் காட்டும் ஷத்திரியர்களுக்கு மட்டுமான அறம்

திருக்குறள் காட்டும் ஷத்திரியர்களுக்கு மட்டுமான அறம்

தமிழர் பொது வாழ்வின் தொழில் அடிப்படையில் கல்வியாளர்(பிராமணர்-அந்தணர்- பார்ப்பானர்), அரசுப் பணி (ஷத்திரியர்), உற்பத்தியாளர் (உற்பத்தி, உழவு, வியாபாரி) உதவியாளர் (மூவர்க்கும் உதவியாளர்) எனப் பிரித்தனர் 

                         

பிரித்து   கெடுத்தல்  அனைவரையும்

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. குறள் 633: அமைச்சு.

பகைவர்க்குத் துணையானவரைப்  பிரித்தல், தம்மிடம் உள்ளவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல்,  முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல்; எனும் செயல்களில் வல்லவரே அமைச்சர்.  

அனைவரையும் ஒற்றிதல்  

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.  குறள் 582: 
 ஒற்றாடல்.
பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும்  நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் ஒற்றரைக்கொண்டு  விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசுக்குரிய கடமையாகும்.

பகைவரை அடியோடு அழிக்க வேண்டும்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.  குறள் 879: பகைத்திறந்தெரிதல். 
முள்மரத்தை சிறிய கன்றாக இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும். பகைவர் வலியராவதன்முன்னே களை வேண்டும்

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல். 
நம் பகைவரின் தலைமையைக் கெடுக்க முடியாதவர்  சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது. -நிச்சயம் அழிக்கப்பவர்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.  குறள் 674: வினைசெயல்வகை.

செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால்  அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

 தினமும் போரை நோக்கி மரணம் தேடணும் 

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. குறள் 776: படைச்செருக்கு. 
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களை எண்ணி எடுத்து அந்த நாட்களில் போரின் போது தன்  முகத்திலும் மார்பிலும்  விழுப்புண்படாத நாட்களையெல்லாம்  பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.  குறள் 780: படைச்செருக்கு. 
வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு காத்த அரசர்  நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் வீரனின் சாவு, பிறரிடம் யாசித்தாவது கேட்டுப் பெறத்தக்க பெருமை உடையதாகும்

தண்டனை தருதல் - களை பிடுங்கல் போலே 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. குறள் 561: வெருவந்தசெய்யாமை.
செய்த குற்றத்தைத் தக்கவாறு நடுநிலை தவறாமல் ஆராய்ந்து, மீண்டும் அக்குற்றம்  செய்யாதபடி; குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.         குறள் 549: செங்கோன்மை.
குடிமக்களை அயலவர் அழிக்காமல் பாதுகாத்துத் துணை நிற்பதும், அவர்களில் குற்றம் செய்தவர்கள் யாராயினும் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.  குறள் 550: செங்கோன்மை.
கொலை முதலிய கொடுமைகள் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் பயிரைக் காப்பாற்றக் களையைக் பிடுங்கி அழித்து பயிரைக் காப்பதற்குச் சமம்

தூது. செல்பவர் உயிரையும் தரத் தயாரகணும் 

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.        குறள் 690: தூது.
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே  அழிவே தருவதாக இருந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.அரசன் தகுதி பார்க்கணும் அனைவரும் சமம் இல்லை
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.  குறள் 528: சுற்றந்தழால். 
 அரசன் எல்லாரையும்  ஒன்று போல சமம் என எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப   பயன்படுத்திக் கொண்டால்,    அந்த அரசை  சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...