மணல் கடத்திய எம்.சான்ட் பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் நிறுவனத்திற்கு ரூ. 9.57 கோடி அபராதம்
ALL NEWS PAPER HID THAT ILLEGAL SAND MINING IS DONE BY CHURCH DIOCESE & M SAND MINING FACTORY LICENSE WAS IN Rev.MANUEL RAJ name
https://timesofindia.indiatimes.com/city/madurai/man-fined-rs-9-6cr-for-illegal-sand-mining/articleshow/78304117.cms
https://www.thehindu.com/news/cities/Madurai/957-crore-fine-imposed-on-illicit-sand-miner-in-tirunelveli/article32643532.ece
செப் 19, 2020 https://www.dinamalar.com/news_detail.asp?id=2617155
திருநெல்வேலி:மணல் கடத்திய எம்.சான்ட் நிறுவனத்திற்கு 9 கோடியே 57 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சப் கலெக்டர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி, கல்லிடைகுறிச்சியை சேர்ந்த சிவசங்கரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், தெற்குகல்லிடைகுறிச்சி அருகே தாமிரபரணிக்கு செல்லும் வண்டலோடையில் கேரளாவை சேர்ந்த மனுவேல்ஜார்ஜ் என்பவரது தோப்பில் ஒரு தரப்பினர் பாறைகளை உடைத்து மணல் தயாரிக்கும் எம்.சான்ட் மணல் கம்பெனி நடத்த அரசு அனுமதி பெற்றுள்ளனர்.ஆனால் அங்கு எம்.சான்ட் தயாரிக்காமல் தினமும் 300 லாரிகள் வீதம் ஆற்று மணலை கடத்தி விற்கின்றனர்'' என தெரிவித்திருந்தார்.
செப்.,8 ல் இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, இந்த மணல் கடத்தல் போலீசாருக்கு தெரியாமல் நடக்காது. மாவட்ட கலெக்டர் ஷில்பா, எஸ்.பி.,மணிவண்ணன் ஆகியோர் செப்.,24ல் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி பதிலளிக்க உத்தர விட்டனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு பிறகு மணல் கடத்தல் விவகாரம் சூடு பிடித்தது.
சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதிக் தயாள், எம்.சான்ட் நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அங்கு எம்.சான்ட் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் எதுவும் இல்லை. எம்.சான்ட் நிறுவனத்திற்கு அனுமதி பெற்று மணல் விற்பனை செய்துள்ளதை கண்டுபிடித்தார். எனவே அந்த வளாகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
மணல் கடத்தலை கண்டுகொள்ளாத தெற்கு கல்லிடைகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மோகனை சஸ்பெண்ட் செய்தார். பல மாதங்களாக மணல் கடத்திய அளவை கணக்கிட்டு, அந்நிறுவனம் அரசுக்கு 9 கோடியே 57 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்டார். அப்பகுதி மக்கள் கூறுகையில், மணல் கொள்ளை நடப்பது குறித்து போலீசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போதும் கூட அங்கிருந்த மணல் லாரிகள், டிராக்டர்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
செப்.,24ல் கலெக்டர், எஸ்.பி., ஆஜராகும்போது பதிலளிப்பதற்காக கண் துடைப்பிற்காக சில நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர், என தெரிவித்தனர்.
கைது 4
மணல் கடத்தல் தொடர்பாக வருவாய்த்துறை புகாரில் அம்பாசமுத்திரம் தனியார் டிவி செய்தியாளர் ஜான்பீட்டர் 29, மற்றும் நிறுவன ஊழியர்கள் பால்ராஜ் 35, சங்கரநாராயணன் 27, ஆத்தியப்பன் 27 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நிறுவன ஊழியர்கள் உதவியுடன் ஜான்பீட்டர் டிராக்டரில் மணல் கடத்தியது குறிப்பிடத்தக்கது.
https://www.polimernews.com/dnews/121320
No comments:
Post a Comment