Sunday, February 27, 2022

வேர்ச்சொல் ஆய்வு - பித்தலாட்டங்கள் - பேராசிரியர் V.S.ராஜம்

  வேர்ச்சொல் ஆய்வு - பித்தலாட்டங்கள் - பேராசிரியர் V.S.Rajam
(செம்மொழி தமிழ்விருது -2010 - முனைவர் வீ.எஸ். இராஜம், 
(Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania) 


என் முறைப்படி, ஒரு தமிழ்ச் சொல்லுக்கு வேர்ச்சொல் காண வேண்டும்  என்றால்...   டாக்டர்.வி. எஸ்.ராஜம். தமிழகத்தின் மதுரையில் பிறந்து கல்விகற்று தொழில் புரிந்து பின்னர் வட  அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர் தன் விடாமுயற்சிகளினால் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.  ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க மூன்று நூற்களை வழங்கியிருக்கின்றார். அவையாவன,

Reference Grammar of Classical Tamil Poetry 

The Earlier Missionary Grammar of Tamil

சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற..

இவரது The Earlier Missionary Grammar of Tamil நூல் ஹார்வர்ட்  பல்கலைக்கழக தென்னாசிய ஆய்வு மையத்தின் வெளியீடாக வந்தது என்பது பெருமைக்குறிய செய்தி.

2010ம் ஆண்டிற்கான கருணாநிதி அறக்கட்டளை சார்பாக செம்மொழி தமிழ் விருது பெற்றவர்.


முதலிலேயே ஒத்துக்கொள்கிறேன் ... எனக்கு வேர்ச்சொல் ஆய்வில் அவ்வளவாகப் பிடிப்பில்லை, திறமையும் இல்லை. ஏன் என்றால் ... அந்த வகை ஆய்வுக்குத் தேவையான பலமொழிப் புலமை இல்லை. என் தமிழை மட்டுமே முழுதுமாக அறிந்தேனா என்பதுவும் ஐயமே!
 
இக்கால வேர்ச்சொல் ஆய்வின் நடைமுறை எனக்கு ஒத்துவரவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல இருக்கிறது. சரியான சான்றுகள் இல்லாமல் ... இங்கேயிருந்து இது அங்கே போச்சு என்ற கூற்றும், இந்த ஒலி இப்படித் திரியும் என்ற கூற்றும் என்னை இந்தவகை ஆய்விலிருந்து அப்புறப்படுத்துகின்றன. 
 

  
 1. ஒலி ஒப்புமை மட்டும் நோக்கி உடனே பிற மொழிக்குத் தாவக்கூடாது. 
  
2. அந்தச் சொல் தமிழிலேயே காலந்தோறும் எப்படிப் புழங்கி வந்து  ருக்கிறது என்பதைத் திட்டமாக அறியவேண்டும் (இலக்கியம், இலக்கணம்,  உரைகள், எழுத்து, பேச்சு, கல்வெட்டு, இன்ன பிற அகப்படும் சான்றுகள் மூலம்).  
 
3. காலத்தையும் வரையறுத்துக் கொள்ளவேண்டும். வெறுமனே ... ஈன் என்ற மிகப் பழைய தமிழ்ச்சொல்லில் இருந்துதான் yean என்ற ஆங்கிலச்சொல் பிறந்தது என்றும், நெருடு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்துதான்  nerd என்ற ஆங்கிலச் சொல் உருவானது என்றும் சொல்லுவதில் பயனும் இல்லை, பிறருடைய கிண்டலுக்கும் ஆளாவோம். 
 
4. தமிழுக்குள்ளேயே கிடைக்கும் சான்றுகளுக்கு இடையே காணப்படும் ஒலி மாற்றங்களுக்கும் பொருள் மாற்றங்களுக்கும் நேரிய முறையில் விளக்கம் கொடுக்கவேண்டும். அதாவது, இன்ன ஒலி/பொருள், இந்தச் சொற்சூழலில், இந்தச் சமூகச் சூழலில், இந்தக் காலத்தில் ... இப்படி மாறியிருக்கிறது என்று சான்று காட்டவேண்டும்
  
5. எல்லாவற்றுக்கும் மேலாக ...  தமிழைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் பிறமொழிச் சொற்களைக் களையவேண்டி வேர்ச்சொல் ஆய்வில் இறங்குவது நேரியதில்லை. ஜன்னல் என்ற சொல்லில் உள்ள கிரந்த ஒலியை/எழுத்தைக் களைய வேண்டிச் சன்னல் என்று சொன்னாலும் எழுதினாலும் அது பிறமொழிச் சொல்லே! போர்த்துக்கீசியம்.  தமிழில் இருக்கு ஓர் அழகான சொல்: காலதர் (== 'காற்று வழி'). அதைத் தவறாக நம் இளைய தலைமுறை 'காதலர்' என்று எழுதிவிடும். அதுக்கு ஜன்னலே பரவாயில்லை!  அலமாரியை என்ன செய்வீர்கள்? 
கிராம்பு என்பதை இலவங்கம் என்று சொல்லலாம், ஆனால் அது எங்கேயிருந்து வந்தது?
 சில எடுத்துக்காட்டு
எழுத்தில்  பேச்சில்  மாற்றம் வேர்?
அகம்   ஆம்   க > 0  ?      
இலை  எல   இ > எ ?     
இழப்பு, இழவு எழப்பு, எழவு     இ > எ   ?
  
உலக்கை  ஒலக்கை  உ > ஒ ? 
உவகை  ஓகை   உ > ஓ       ?
   
ஒப்பிலி  உப்பிலி  ஒ > உ       ?   

குடை  கொடெ  உ > ஒ       ?  
கொடை  கொடை   
குயவன்  கொயவன்
குலை (bunch) கொல   
 
பருமன்   பெருமன்  அ > எ      ?
  
பிறகு   பொறவு  இ > ஒ; க் > வ்    ?     
புறா, புறவு  பொறா  உ > ஒ           ?

விரல்   வெரல்  இ > எ                ?

++++++++++++++++++++++++++++
கன்று   கண்டு  ன்ற் > ண்ட் 
கன்று   கன்னு  ன்ற் > ன்ன் 
மூன்று  மூணு   ன்ற் > ண்

++++++++++++++++++++++++++++
பூண்டு  பூடு   ண் > 0
    
தாண்டு  ?           
++++++++++++++++++++++++++++ 
   
ஓத்து (வேதம், நூற்பா)  < ஓது 
ஓத்து (இன்று கொச்சை மொழி)      <      உவ
 
கொல  < கொல் (kill)? குலை (bunch)? 

++++++++++++++++++++++++++++++++

மரம் ~ மரன்
குணம் ~ குணன் 

அப்போ ... அவன் என்பதை அவம் என்றும் சொல்லலாமோ?! 

பந்தர் ~ பந்தல் 

அப்போ ... இவர் என்பது இவல் என்றும் புழங்கப் படலாமே?!

+++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்கிறாள்   சொல்றா, சொல்லுதா 

இதைப் பற்றி என்ன சொல்லலாம்? 

வால், வாலம் ('tail'; சங்க இலக்கியச் சான்று). 

அப்போ, கால் ('leg') என்பது காலம் என்றும் சொல்லப்படுமோ?

++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆல் < யால் < சால் 
ஆனை < யானை < சானை?
ஆத்தா < யாத்தா? < சாத்தா?

N Deiva Sundaram (Retd HOD, Tamil Madras University)

unread,
பேராசிரியை V.S. இராஜம் … தமிழின் சிறப்பை உலகறியச் செய்த தமிழாய்வாளர். கணிதத்தில் இளங்கலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர், தமிழார்வத்தில் மதுரையில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேர்ந்து (1963) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். 1963 – 75 வரை பாத்திமா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மொழியியலில் சான்றிதழ் (1974), பட்டயப் படிப்புகளையும் (1975) அங்கேயே மேற்கொண்டார். பாத்திமா கல்லூரியில் சில ஆண்டுகள் தமிழ் பயிற்றுவித்தபின்னர், அமெரிக்கா சென்றார். 1977 –இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் 1981 –இல் முனைவர் பட்டமும் பெற்றார். பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் இரண்டிலும் பல ஆண்டுகள் விரிவுரையாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்க மாணவர்களுக்குப் பலநிலைகளில் தமிழ்மொழி பயிற்றுவித்துள்ளார். பல ஆராய்ச்சித்திட்டங்களுக்கு அமெரிக்காவில் நிதி உதவிபெற்று, தமிழாராய்ச்சியை மேற்கொண்டார். வரலாற்றில் நிலைத்துநிற்கக்கூடிய அவருடைய ஒரு மிகப் பெரிய ஆய்வு நூல் - “ A Reference Grammar of Classical Tamil Poetry ( 150 B.C. – pre-fifth / sixth centuryA.D.) “. இந்நூலை American Philosophical Society (1992) வெளியிட்டுள்ளது. இந்நூலின் சிறப்பறிந்து, அதன் ஒரு படியை எனது பேரா. செ.வை. சண்முகம் அவர்களிடமிருந்து பெற்றுப் படித்தேன். மொழியியல் அடிப்படையில் தமிழ்மொழியை அவர் ஆழமாக ஆராய்ந்து, தமிழின் சிறப்பை வெளிக்கொண்டுவந்துள்ளார். மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஒரு நூல், அவரும் ஜீனி ஹெயின் ( Jeanne Hein) என்பவரும் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள 16 – ஆம் நூற்றாண்டில் Fr. Henriques என்பவரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கணம் ( ஹார்வார்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது) . பேராசிரியை அவர்கள் கணினி நிரல் ஆக்கத்திலும் வல்லவர். கணினித்தமிழ் என்ற ஒரு தொடர் தமிழகத்தில் புழங்குவதற்கு முன்னரே தமிழ்மொழிக்குப் பல நிரல்கள் எழுதியுள்ளார். அதுபற்றிய விவரங்களை http://www.letsgrammar.org/ என்ற இணையதளத்தில் காணலாம். தமிழகமும் தமிழ் ஆய்வுலகமும் இவருக்குச் சிறப்புசெய்யக் கடமைப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...