Saturday, April 1, 2023

ஷாருக்கான் மகள் சினிமா நடிக்க வருகிறார்

 
புர்கா எதுக்கு ?
வழக்கமாக நாம் நினைப்பது என்ன ? புர்கா என்பது முஸ்லிம் பெண்களின் அழகை மறைப்பது என்பது மட்டும் தானே இதைதானே ஆணாதிக்கம் என்று விமர்சிக்கிறோம் ஆனால் அதை விட ஒரு கொடுமையும் இந்த "புர்காவில் மறைந்து இருக்கிறது . அது பெண்களை அடித்து துன்புறுத்துவது .
// மனைவியர்களிடம் தொல்லைகள் வரும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு (1)அறிவுரை கூறுங்கள்! (2)படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! (3)அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்..(4:34)
இந்த வசனத்தில் முஸ்லிம் கணவனுக்கு நான்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
ஒன்று அல்லாஹ் ,நபி மறுமை ,நரகம் என்று எதையாவது அறிவுரையாக கூறி அச்சமூட்டி அடக்கி வைப்பது .
அடுத்து அவளின் சிற்றின்ப தேவைகளை முடக்குவது இங்கே கணவனுக்கு மூன்று ,நான்கு மனைவிகள் இருப்பதால் இவனின் சிற்றன்ப தேவைகள் முடிந்து விடும் ஆனால் அவளின் நிலை ? மூன்றாவது அடித்து துன்புறுத்துவது எந்த அளவிற்கு அடிக்கலாம் என்பதை புகாரீ, நஸாயீ யில் வரும் ஹதீஸ்கள் வழிகாட்டுகிறது நான்கு இம்மூன்றுக்கும் கட்டுப்படாவிட்டால் நான்காம் வழியை தேடலாம் ஆனால் அது என்ன வழி என்பதை அல்லாஹ் கூறவில்லை .சாய்ஸில் விட்டிருப்பானோ?
//நீங்கள் உங்கள் மனைவியரை உங்களதுஅடிமையை(விலங்குகளை) அடிப்பது போல அடிக்க வேண்டாம். அதே நாளின் இரவில் அவளுடன் உறவு கொள்ளும் நிலைவரும் (வலியின் காரணத்தால் அவள் உங்களுக்கு ஒத்துழைக்க முடியாமல் போகலாம்)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)
நூல் : புகாரி 5204
//ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, “அவள் உமக்குத் தர வேண்டியதை (மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!” என்றார்கள். அவர் “சரி” என்றார். அப்பெண்மணியிடம் “ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ருபய்யிஃ (ரலி) நூல் : நஸயீ 3440//
மனைவியை எலும்பு உடையும்வரை அடிக்க அனுமதிக்கிறது அதை பஞ்சாயத்தாக்கினால் மஹரை கணவனிடம் கொடுத்துவிட்டு குலா கொடுத்து விலகலாம் ஆனால் அதற்கும் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும் .இங்கே. மனைவியின் கையை ஒடித்த கணவனுக்கு எந்த தண்டனையும் இல்லை என்பது மட்டுமல்ல மஹரை மீட்டு கொடுத்து லாபமும் பெற வைக்கிறார் உலக முன்மாதிரிநீதிமான் முஹம்மது .
ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் (உமது மனைவி) உமது விளைநிலமாகும். உமது விளைநிலங்களுக்கு நீ விரும்பியவாறு சென்று கொள். (அவளைக் கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே! அவளை அசிங்கமாகத் திட்டாதே! நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்! நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு! வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே...(நூல் : அஹ்மத்)
அவள் விளை நிலம் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்து ஆனால் முகத்தில் அடிக்காதே அப்படி அடித்தால் அது பிறருக்கு தெரிய வாய்ப்புண்டு. உடலில் மற்ற பகுதி என்றால் புர்கா மறைத்துக்கொள்ளும் .
முஸ்லிம் பெண்களுக்கு புர்கா இப்படியும் பாதுகாப்பை தந்துக்கொண்டு இருக்கிறது .
சாதிக் சமத்








No comments:

Post a Comment