Sunday, September 21, 2025

பொதுமக்களின் கஷ்டத்தை போக்கவே மது பாட்டிலுக்கு MRPவிட அதிகமாக 10 ரூபாய் சட்ட விரோதமாக வாங்குகிறோம்

தமிழ்நாட்டில் முதலில் நீலகிரி மாவட்டத்தில் தான் இதுபோல மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2022ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நீதிமன்றம்  இத்திட்டத்தை மாநிலம் முழுக்க விரிவுபடுத்த உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் படிப்படியாக இப்போது மாநிலம் முழுக்க விரிவுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு: தமிழ்நாட்டில் இப்போது பல்வேறு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்குக் MRPவிட அதிகமாக  கூடுதலாக ரூ.10 (சட்ட விரோதமாக) வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், டெட்ரா மது பேக்குகளை விரைவில் கொண்டு வருவது குறித்தும் என அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலமாகவே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக்கில் மது வாங்கி குடிப்போர் முன்பு அந்த காலி பாட்டில்களை அப்படியே குப்பையில் போட்டுவிடுவார்கள். இதனால் அளவுக்கு அதிகமாகக் குப்பை சேர்கிறது. மேலும், அந்தக் கண்ணாடி பாட்டில்கள் உடைந்தால் பலருக்கும் அது ஆபத்தாக மாறுகிறது. 

கூடுதலாக 10 ரூபாய் 

இதைக் கருத்தில் கொண்டு காலி பாட்டில்களை மீண்டும் வாங்கும் திட்டம் டாஸ்மாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மதுபாட்டில்களுக்கு  MRP விட அதிகமாக  கூடுதலாக ரூ.10 (சட்ட விரோதமாக) வசூலிக்கப்பட்டது. மதுவை வாங்கும் நபர்கள், அதைக் குடித்துவிட்டுத் திரும்பக் கொடுத்தால்... காலி பாட்டில்களை வாங்கிக் கொண்டு டாஸ்மாக் ஊழியர்கள் அந்த ரூ.10ஐ திரும்பக் கொடுத்து விடுவார்கள். இது இப்போது பல மாவட்டங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். 

அமைச்சர் முத்துசாமி  -கூடுதல் ரூ.10 ஏன்? 

தொடர்ந்து காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்துப் பேசிய அவர், "காலி பாட்டில்களை மீண்டும் வாங்கும் திட்டம் ரொம்பவே முக்கியம். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே நாங்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கூடுதலாக வசூலிக்கப்படும் MRPவிட அதிகமாக  கூடுதலாக சட்ட விரோதமாக 10ரூபாய் ஒரு டெபாசிட் போன்றது. காலி பாட்டில்களைத் திரும்பக் கொடுக்கும்போது இந்தத் தொகையைத் திருப்பிக் கொடுப்போம். படிப்படியாக இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். மதுவை டெட்ரா பேக்குகளில் விற்கும் திட்டமும் இருக்கிறது. ஆனால், அதற்குப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்க வேண்டி இருக்கிறது" என்றார்.

5 மாதங்களில் நிறைவேற்றுவோம் 

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பெரும்பாலான வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாகத் தெரிவித்த அவர், மீதமுள்ள வாக்குறுதிகளையும் அடுத்த 5 மாதங்களில் செயல்படுத்துவோம் என்று கூறினார். 

 https://tamil.oneindia.com/news/erode/why-tasmac-shops-charging-rs-10-extra-for-liquor-bottles-minister-muthusamy-gives-major-explanation-736897.html

No comments:

Post a Comment

கிட்னி திருட்டு மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு நியமித்தது உயர் நீதிமன்றம்: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி

  கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு நியமித்தது உயர் நீதிமன்றம்: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி  https://www.dinamalar.com/...