Saturday, December 13, 2025

நீதிமன்ற தீர்ப்பை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை-' .

நீதிமன்ற தீர்ப்பை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை-' சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி ADDED : டிச 07, 2025

https://www.youtube.com/watch?v=RP_wTi8VSFI

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:  திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல் முறையீடு செய்வது எங்களது அடிப்படை உரிமை. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம், அவசியம் இல்லை. உரிமைகளை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வரை முறையிடலாம் என சட்டமே வகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு நிலுவையில் உள்ள இதற்கு விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.

எஸ்.ஐ.ஆர்., பெயரில் ஆத்துார் தொகுதியில் 22 ஆயிரம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக செல்லவில்லை. வாக்காளர்கள் முறையாக பூர்த்தி செய்த கொடுத்த விண்ணப்பத்தையே குடிபெயர்ந்து விட்டதாக பதிவேற்றம் செய்து குறித்துள்ளனர். பாலக்கனுாத்து, நரிப்பட்டி, நீல மலைக்கோட்டை பகுதியில் இறந்தவர்களை வாக்காளர் பட்டியல் சேர்த்துள்ளனர். அரசுக்கு கணக்குக்காட்ட வேண்டும் என்பதற்காக வேலை பார்க்கின்றனர். இப்பணிகளை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்றார்.

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவது ஏன்? அமைச்சர் முத்துசாமி தந்த விளக்கம்  -கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாய் ஒரு டெபாசிட் போன்றது

By Vigneshkumar Published: Friday, September 19, 2025

ஈரோடு: தமிழ்நாட்டில் இப்போது பல்வேறு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், டெட்ரா மது பேக்குகளை விரைவில் கொண்டு வருவது குறித்தும் என அவர் குறிப்பிட்டார். 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலமாகவே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக்கில் மது வாங்கி குடிப்போர் முன்பு அந்த காலி பாட்டில்களை அப்படியே குப்பையில் போட்டுவிடுவார்கள். இதனால் அளவுக்கு அதிகமாகக் குப்பை சேர்கிறது. மேலும், அந்தக் கண்ணாடி பாட்டில்கள் உடைந்தால் பலருக்கும் அது ஆபத்தாக மாறுகிறது.

கூடுதலாக 10 ரூபாய் 

இதைக் கருத்தில் கொண்டு காலி பாட்டில்களை மீண்டும் வாங்கும் திட்டம் டாஸ்மாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. மதுவை வாங்கும் நபர்கள், அதைக் குடித்துவிட்டுத் திரும்பக் கொடுத்தால்... காலி பாட்டில்களை வாங்கிக்கொண்டு டாஸ்மாக் ஊழியர்கள் அந்த ரூ.10ஐ திரும்பக் கொடுத்துவிடுவார்கள். இது இப்போது பல மாவட்டங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். 

அமைச்சர் முத்துசாமி

 இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "20 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரைச் சுத்தம் செய்ய சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அவசரப்படுத்த விரும்பவில்லை. அவசரப்படுத்தினால் டெக்னிக்கலாக பிரச்சனை வரும் என்பதால் படிப்படியாகச் செயல்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த பிரச்சினைக்குச் சீக்கிரமே முற்றுப்புள்ளி வைப்போம்" என்றார். 

 கூடுதல் ரூ.10 ஏன்? 

தொடர்ந்து காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்துப் பேசிய அவர், "காலி பாட்டில்களை மீண்டும் வாங்கும் திட்டம் ரொம்பவே முக்கியம். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே நாங்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாய் ஒரு டெபாசிட் போன்றது. காலி பாட்டில்களைத் திரும்பக் கொடுக்கும்போது இந்தத் தொகையைத் திருப்பிக் கொடுப்போம். படிப்படியாக இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். மதுவை டெட்ரா பேக்குகளில் விற்கும் திட்டமும் இருக்கிறது. ஆனால், அதற்குப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்க வேண்டி இருக்கிறது" என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், "தமிழிசை இத்தனை ஆண்டுகள் தூங்கிக் கொண்டு இருந்தார் போல.. இப்போது திடீரென எழுந்து, முப்பெரும் விழா குறித்து பேசுகிறார். திமுக வருடம் வருடம் முப்பெரும் விழாவை நடத்தும். அதன்படியே இந்தாண்டும் முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது. இது தெரியாமல் பதறிப்போய் நடத்தினார்கள் அது இது எனப் பேசி வருகிறார்" என்றார்.

5 மாதங்களில் நிறைவேற்றுவோம் தமிழகத்தில் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பெரும்பாலான வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாகத் தெரிவித்த அவர், மீதமுள்ள வாக்குறுதிகளையும் அடுத்த 5 மாதங்களில் செயல்படுத்துவோம் என்று கூறினார். 

தமிழ்நாட்டில் முதலில் நீலகிரி மாவட்டத்தில் தான் இதுபோல மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2022ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நீதிமன்றமும் கூட இத்திட்டத்தை மாநிலம் முழுக்க விரிவுபடுத்த உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் படிப்படியாக இப்போது மாநிலம் முழுக்க விரிவுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.                             Published On September 19, 2025


Read more at: https://tamil.oneindia.com/news/erode/why-tasmac-shops-charging-rs-10-extra-for-liquor-bottles-minister-muthusamy-gives-major-explanation-736897.html


திமுக அமைச்சர்  பாதிரியார்களை கைது செய்ய வாடிகனில் போப் அனுமதி பெற சட்டம் தேவை- அமைச்சர் ஐ. பெரியசாமி மருமகள் பேச்சு

By Mathivanan Maran Updated: Thursday, August 12, 2021

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/govts-to-get-permission-for-arrest-of-christian-fathers-from-vatican-pope-says-social-activist-merc-428354.html

No comments:

Post a Comment

கிறிஸ்துவ மதவெறி கோவை அரசு பள்ளி HM -தமிழராக இருக்காதே - மாணவிகள் பொட்டு, தலையில் பூ வைக்காது வரணும்

கோவை சூலூர் கள்ளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருபை கிருஸ்தவர் என்பதால் எந்த மாணவியும் நெற்றியில் பொட்டு வைக்க கூடாது, தலையில...