திரு.தெய்வநாயகம் (மோசடி முனைவர்) பற்றிய . தெய்வ நாயகம் எழுதிய நூல்களை, அவருடைய பிஹெச்டி கட்டுரையையும் முழுமையாக படித்தும் சேமித்து வைத்து உள்ளேன்.
1969ல் திரு. மு.கருணாநிதி அணிந்துரையோடு திருவள்ளுவர் கிறித்தவரா என்ற நூலைத் தொடங்கி 6 நூல்கள் தெய்வ நாயகம் பெயரில் வந்தன.
1972ல் தேனாம்பேட்டை சர்ச் வளாகத்தில் தேவநேயப் பாவாணர் தலைமையில் முரசொலி ஸ்பான்சர் செய்ய 36 அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் திருக்குறளிற்கும் பைபிளிற்கும் தொடர்பில்லை எனற முடிவிற்கு வந்ததாம். ஆனால் மாநாட்டு செய்தியை வெளியிலே பதிவு வேண்டாம் என பாவாணர் கூறிட, வரவேற்பு குழு தலைவர் புலவர் என்.வி.கலைமணி தன் நூலில் பதித்த 2008 வரை மறைக்கப் பட்டு இருந்தது என்பதை கூறினேன்.
1974இல் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சுப்புரெட்டியார் தலைமையில் திருக்குறள் கருத்தரங்கு நடந்தது. அதில் சென்னை லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மற்றும் இயேசு சபை பாதிரியான பேராசிரியர். எஸ்.ஜே.ராஜமாணிக்கம் கலந்து கொண்டு கொடுத்த கட்டுரை மூல நூல் படித்து-பின் பக்கங்களை சேமித்து வைத்துள்ளேன். பேராசிரியர். எஸ்.ஜே.ராஜமாணிக்கம் தெய்வநாயகத்தின் ஆய்வு தமிழ் ஆய்வு முறைக்கு மாறானது அது தனக்கு மன நிறைவைத் தரவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தெய்வநாயகம் செய்யும் ஆய்வு என்பது தமிழ் ஆய்வு முறைக்கும் ஒத்தது அல்ல; இது மோசடி என ஒரு தமிழ் பேராசிரியர் அதுவும் ஒரு கிறிஸ்தவ பேராசிரியர் பதிவு செய்துள்ளார் என்பதை மூல நூல் படித்து பதிவு செய்துள்ளேன்.
இதன்பிறகு திருக்குறளுக்கு பண்டைய காலம் முதலே கிறிஸ்தவ உரை என ஓலைச்சுவடி தயாரிப்பு -சர்ச் பணத்தில் நடந்தது என்பதும்; ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு ஜான் கணேஷ் ஐயர் என்றவருக்கு தண்டனை என கீழ் நீதிமன்றம் தண்டனை தந்தது. ஆனால் அடுத்த நாளே உயர்நீதிமன்றத்தில் இரு பக்கமும் நீதிமன்றம் வெளியே உடன்பாடு என முடித்தது என்பதைக் கூறினேன்.
தெய்வநாயகம் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ச.வே.சுப்பிரமணியம் கீழ் முனைவர் பட்டத்தை பெற்றார்.1983ல் பிஹெச்டி தரப்படுகிறது.1985ல் புத்தகம் ஆகிறது. மறுப்பு நூல் பேராசிரியர்.அருணை வடிவேல் முதலியார் வெளியிட்டார் .
நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திரு கிருஷ்ணசாமி ரெட்டியார் இது ஒரு கிறிஸ்தவ மதவெறி அராஜகம் இந்த முனைவர் பட்டம் திரும்பப்பெற வேண்டும் என்று அறிவித்தார்
பின்னர் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அது ஆய்வு நூல் அல்ல, இந்துக்கள் மனதை பாதித்து உள்ளது என தெரிவதால் வருந்துகிறோம் என சர்குலர் வெளியிட்டதை வரலாற்று அறிஞர் வேதப்பிரகாஷ் தன் "இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை" நூலில் பதிவு செய்துள்ளார் என குமுதம் செய்தியாளரிடம் கூறினேன்.
குமுதம் ரிப்போர்ட்டர் நிருபருக்கு பேட்டி தந்தது-தேவப்ரியா. உள்ளே வேதப்பிரகாஷ் நூல் பெயரை குறிப்பிட்டதை பார்த்து, இருவரும் ஒருவர் எனத் தானாக குழப்பி தேவப்ரியா புகைப்படம் போட்டு கீழே பெயரை தவறாக வேதப்பிரகாஷ் என போட்டு விட்டது.
குமுதம் நிருபரிடம் அன்றே சொல்லி அடுத்த இதழில் தவறை கூறி பதிவிட கேட்டுக் கொண்டேன்.
No comments:
Post a Comment