Sunday, March 19, 2023

ராஜஸ்தானில் 12 தமிழ்நாடு போலீஸ் கைது? & ஸ்கிரீன் ஷாட்

 



 
குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக போலீசார் 12 பேரை ராஜஸ்தான் போலீசார் சிறை பிடித்து வைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
  
திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக தமிழ்நாடு போலீசார் 12 பேர் ராஜஸ்தான் சென்றனர். இந்த நிலையில்  குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க தமிழ்நாடு போலீசார் லஞ்சம் கேட்டதாகவும், இதனையடுத்து ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் 12 தமிழக போலீசாரை சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து திருச்சி தனிப்படை போலீசாரிடம் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக தமிழக போலீஸ் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

அஜ்மீர்: தமிழகத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுமார் ரூ.52  லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் பைருகேடாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்வதற்காக திருச்சி போலீஸ் அதிகாரி மோகன் தலைமையிலான தமிழ்நாடு தனிப்படை போலீசார் 12 பேர் ராஜஸ்தானில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க ெசன்ற இடத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக போலீசார் 12 பேரை அம்மாநில போலீசார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து ராஜஸ்தான் போலீசார், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் முழு ஆவணங்களையும் தமிழக காவல்துறையிடம் அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...