Wednesday, March 29, 2023

கீழடி தொல்லியல் அகழாய்வு அமர்நாத் ராமகிருஷ்ணா தன்னிச்சை பேச்சுகளும்


Ananthakrishnan Pakshirajan அமர்நாத் ராமகிருஷ்ணா அகழ்வாராய்ச்சியாளர் என்று தன்னைக் கூறிக் கொள்கிறார். சமீபத்தில் பேசிய பேச்சு ஒன்றில் Perforatted Pottery. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைக்கிறது. அதற்குப் பிறகு கீழடியில்தான் கிடைத்திருக்கிறது என்கிறார். அப்படியா? இந்த ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
இது Perforatted pottery பற்றிய கட்டுரை.
தெளிவாக தென்னாட்டில், குறிப்பாக ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் பல இடங்களில் கிடைக்கிறது என்று சொல்கிறது.
ஆனால் தமிழ் நாட்டில் கீழடிக் கோமாளித்தனம் தலைவிரித்து ஆடுவதால், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நேர்மையைப் பற்றி திராவிடம் கவலைப்படத் தேவையே இல்லை.





Ananthakrishnan Pakshirajan

அமர்நாத் ராமகிருஷ்ணா இன்னொன்றையும் சொல்கிறார். பிராமி கீழடியில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதாவது கிறுக்கல்கள் கிடைக்கிறதாம். பிராமியின் பெயர்கள் தவறு தவறாக எழுதப்பட்டது கிடைக்கிறதாம். இது மொழி எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைக் காட்டுகிறதாம். அதனால் பிராமி கீழடியில்தான் பிறந்திருக்க வேண்டுமாம்.
அப்படியா?
1. எழுத்து வளர்வதின் பரிணாமத்தை பெயர்கள் தவறாக எழுதப்பட்டதிலிருந்து எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? பானையில் பெயர் எழுதியவர்கள் மொழி வளர்ச்சியை பானையில்தான் துவங்கினார்களா? அடித்தல் திருத்தல், மாற்றுதல் போன்றவற்றை பானையில்தான் நடத்திக் கொண்டிருந்தார்களா? அதாவது தாங்கள் பயன்படுத்தும் பானையில்!.
2. நம்மூரில் பாத்திரத்தில் பெயர் அடிப்பது போல பானையில் பெயர் எழுதக் கொடுத்திருக்கலாம். பெயர் எழுதியவர் அரைகுறையாக இருந்தால் பெயர் தவறாகத்தான் எழுதப்படும். இப்போது கூட போஸ்டர்களில் பெயர் தவறாக எழுதப் படுகிறது. இவர்கள்தான் தமிழ் எழுத்தைக் கண்டு பிடித்தார்கள் என்று சொல்ல முடியுமா?
3. பானை ஓடுகளில் பிராமி எழுத்து கீழடியில் மட்டும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்திருக்கின்றன. அதனால் எல்லா இடங்களிலும் எழுத்து கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது எனக் கூற முடியுமா?
4. சரி, தவறாக ஒரு பத்து வருடங்கள் மொழியை எழுதலாம். ஆனால் தமிழ்பிராமி கல்வெட்டுகள் இவர்கள் சொல்லும் காலத்திலிருந்து தொள்ளாயிரம் ஆண்டுகள் தவறாக எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே தமிழன் பிராமியைக் கண்டுபிடித்து வடவருக்கு கொடுத்து விட்டு தான் மட்டும் மொழியைத் தவறாக தொள்ளாயிரம் ஆண்டுகள் எழுதிக் கொண்டிருந்தான் என்று இவர் கூற வருகிறாரா?
அறிவியலில் நம்பிக்கை உள்ள யாரும் இது போன்ற வாதத்தை ஒதுக்கித் தள்ளி விடுவார்கள். ஆனால் திராவிடம் தனக்குத் தேவையில்லை என்றால் அறிவியலை ஒதுக்கித் தள்ளி விடும்.




 

https://www.jstor.org/stable/2798120

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...