Thursday, March 23, 2023

#ஷாலின்_மரியா_லாரன்ஸ் மதவெறி தமிழர் விரோத நச்சு பிரிவினை உளறல்


https://www.google.co.in/amp/s/thecommunemag.com/dalitchristian-quint-columnist-blames-brahmin-neighbour-for-losing-internet/amp/
பொதுவாக மக்களிடம் நீ உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளை உருவாக்குபவர்கள் தங்களின் ஏதோ ஒரு சிந்தாந்தத்தை நம்மிடம் திணிக்க முற்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சிலப்பதிகாரத்தில் நான்கு வர்ணத்து மக்களும் ஒரே தெருவில் குடியிருந்த தகவல்கள் மிகத்தெளிவாக உள்ளன. சோழர்காலத்தில் "பறசேரி" இருந்ததைப்போல் பார்ப்பனச் சேரியும் இருந்தது என்பதை அறியாதவர்கள் இன்றும் சேரி என்றால் ஏதோ தீண்டத்தகாதவர்கள் குடியிருக்கும் பகுதி என்று எண்ணுவதோடு உளறியும் திரிகிறார்கள்.!
சேரி என்றால் மக்கள் வாழும் நிலப்பகுதியை குறித்துவந்த காலங்கள் மாறி இன்று அதற்கு நேர் எதிரான பொருள்கூறி புரட்சி செய்கிறார்கள். பட்டினப்பாலையில் "உறைக் கிணற்றுப் புறச்சேரி" என்ற வாசகம் உறை கிணறுகளை உடைய குடியிருப்புகள் என்ற பொருளிலேயே வருகிறது. மேலும் அகநானூறு, நற்றிணை போன்ற இலக்கியங்களிலும் இதே பொருள்களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல கீழ், மேல் என்ற சொற்களுக்கும் புது புது அர்த்தம் கொடுத்து தத்தமது சித்தாந்தங்களை திணிக்க முற்படுகின்றனர். கீழை என்றால் தீண்டத்தகாதவர்கள் வாழும் நிலப்பகுதிகளைக் குறிப்பதாக எழுதுகின்றனர். திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற "கீழை திருக்காட்டுப்பள்ளியை" இவர்கள் என்னவென்று சொல்வார்கள்? "கீழைநாட்டு கவிதை மஞ்சரி" என்றொரு கவிதை நூலும் இவர்கள் சொல்வதைப்போல் தீண்டத்தகாதவர்களைத்தான் குறிக்கிறதோ என்னவோ🤔 அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் "கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு" என்றொரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை இதுவும்😴🤦!
"வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள் திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி"
- திருப்புகழ்.
அருணகிரி நாதரின் இப்பாடல் வரிகளெல்லாம் இவர்களின் கண்களில் பட்டால் நமது நிலைதான் என்னவோ? இவ்வரிகளும் இன்னபிற தமிழ் இலக்கியங்களில் வரும் மேலை, கீழை என்ற சொல்லாடல்களும் அவற்றின் உண்மையான பொருள்களும் இவர்களைப் போன்றவர்களின் கண்களில் படாமல் இருக்க எம்பெருமான் முருகனை வேண்டுவோம்!
- பா இந்துவன்.





No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா