Friday, March 31, 2023

ஓலைச்சுவடியும் பூர்ஜ் மரப்பட்டை சுவடிகளும்

இந்தியாவின் அனைத்து மொழிகளும் முதலில் எழுதியது பிராமி எழுத்துக்களில்.
பிராமி எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். அசோகர் கல்வெட்டில் எழுதும் பொழுது செய்யுள் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதாமல் அதன் வெகுஜன பேச்சு மொழி வழக்கு பிராகிருதத்தில் எழுதினார்
தமிழகத்தில் பனை ஓலையில் இலக்கியத்தை எழுதி பாதுகாத்தனர் அதற்கு முன்பு கற்க பானை ஓட்டில் எழுதியதை நாம் கீழடி, கொடுமணல், இலங்கையில் கண்டோம்
வடஇந்தியாவில் இமயமலை அருகே விளையும் பூர்ஜ் (Himalayan Birch) மரப்பட்டையில் எழுதும் பழக்கம் இருந்ததனால் அதை அதில் கற்க எழுதியவை அடுப்பில் விட அழிந்து போய் இருக்க வேண்டும் இலக்கியம் 1500 வருட பழைய மர பட்டை சுவடிகள் நமக்கு நம்மிடம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
ஓலைச்சுவடிகள் 300 வருடங்கள் தான் தாங்கும் அதுவும் கூட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்து அதை முறையான பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு செய்ய வேண்டும்.
All reactions:
Venugopalan Sankaran, Raj Sibi and 19 others

தமிழ் பிராமி, வட்டெழுத்து & தமிழ் எழுத்து எல்லாமே அடிப்படையில் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கிய பிராமியைத் தழுவியதால் குறில் "எ- ஒ" எழுத்துகள் கிடையாது. தொல்காப்பிய சூத்திரமும் நெடில் ஏ & ஓ ஒலிக்கான எழுத்து மீது புள்ளி வைத்தால் குறில் எனவும், கது புள்ளி மருங்கியல் எனாறது. வீரமாமுனி எனும் ஜோசப் பெஸ்கி பாதிரி 17ம் நூற்றாண்டு சீர்திருத்தம் வரை இத்த நிலை.
தமிழுக்கு என தனி சிறப்பு மெய் எழுத்துகள் ".ழ ற & ன" மூன்றும் இறுதியில் வைக்கப் பட்டன
 https://en.wikipedia.org/wiki/Birch_bark_manuscript

1. மொழிவடிவம் இத்தனை ஒற்றுமையிருக்கும் போது, அவை ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் விலகி இருப்பது வியப்பாக இருக்கிறது.

2. நெட்டெழுத்துகள், தென்னிந்தியாவுக்கு வரும்போது, வரிவடிவங்கள் முழுமையான வட்டெழுத்தாக மாறுவதைக் காணலாம்.

3. குறிப்பாக ஆந்திராவை விட்டு தூரச் செல்லும் போது, வட்டெழுத்துகள், நெட்டெழுத்துகளாக மாறுகின்றன.

4. இம்முறை மாற்றும், எழுதப்படும் மேற்பரப்பு, மற்றும் அந்த திடப்பொருளின் / ஊடகத்தின் தன்மையினால் (கல், மரப்பட்டை, ஓலைச்சுவடி முதலியன) மாறுகின்றன என்கின்றனர்.

5. எப்படியாகிலும், இவ்வரிவடிவங்களில் மூலம் ஒன்று என இருந்திருக்க வேண்டும், பேசும் மொழிகள் மாறியிருக்கலாம்.

6. பொதுவாக, இந்தியாவிலிருந்து தூரத்தில் இருக்கும் நாடுகளில் தான் நெட்டெழுத்து வரிவடிவங்கள் காணப்படுகின்றன.

7. ஆனால், எழுதும் மக்களிடையே ஏதோ சம்பந்தம், தொடர்பு, இணைப்பு இருந்திருக்க வேண்டும்.

8. தென்கிழக்கு ஆசியா நாடுகளிடம் தென்னிந்தியர் வாணிக ரீதியில் தொடர்பு கொண்டிருந்தனர் அல்லது ஒரு காலத்தில் அப்பகுதிகளில் இருந்தவர்கள் எல்லோருமே, ஒரே மக்கள் தாம் எனலாம்.

9. அதாவது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலிய மூலங்கள் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

10. பிறகு தோன்றிய காரணங்களால், காரணிகளால் அவை உள்ள மக்களின் மீது திணிக்கப்பட்ட போது, வெளிப்படையாக இவை மாறினாலும், உள்ளே அந்த பழைய வேர்களைக் காணப்படுகிறது.

No comments:

Post a Comment