Friday, March 31, 2023

ஐ... ஔ.. சிதைக்கும் தமிழ் பகைவர்கள்

 ஐயா என்பதை அய்யா என்று எழுதலாமா ?

==================================
ஐகாரம் நெடில் எழுத்தாகும் . அது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் . ஐ என்ற எழுத்தைத் தனியாக உச்சாிக்கும்போது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் . ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும்போது ஆசிாியா் ,
அ , ஆ...
இ , ஈ.....
உ , ஊ....
எ , ஏ....
ஐ......
ஒ , ஓ....
ஔ.....
என்று ஆ , ஈ ,ஊ , ஏ , ஐ , ஓ ,ஔ ஆகிய ஏழு எழுத்துக்களையும் நீட்டி ஒலிப்பாா் . எனவே
இவ்வெழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரையாகும்.
மாத்திரை என்றால் என்ன ?
=========================
கண் இமைக்கும் அல்லது கை நொடிக்கும் கால அளவையே இலக்கண நூலாா் மாத்திரை என்று குறிப்பிடுவா் .
தொல்காப்பியத்தில் .....
=====================
அகர இகரம் ஐகாரமாகும் .
அகர உகரம் ஔகாரமாகும் .
என்பன தொல்காப்பிய நூற்பாக்களாகும் .
இவை எழுத்துப் போலி பற்றி வந்தவை . தொல்காப்பியா் போலியாக வழங்கும் எழுத்துக்கள் பற்றி , நிரல்பட கூறுமிடத்தில்
இவை உள்ளன . இதன் பொருள்
அஇ சோ்ந்து ஒலித்தால் ஐ என்ற ஓசை வரும் .
அஉ சோ்ந்து ஒலித்தால் ஔ என்ற ஓசை வரும் .
நீக்கி விட்டால் என்ன ?
=====================
அஇ > ஐ
அஉ> ஔ
என்றால் , ஐ , ஔ ஆகிய இரண்டு எழுத்துக்களையும் , தமிழ் நெடுங்கணக்கிலிருந்து நீக்கி விடலாமே என்று சிலா் வாதிடுவா் .
நீக்கி விட்டால் என்ன நடக்கும் ?
தை > தய்
கை > கய்
பை > பய்
மை > மய்
வை > வய்
ஐப்பசி > அய்ப்பசி
ஐம்பது > அய்ம்பது
வையகம் > வய்யகம்
கைது > கய்து
தையல் > தய்யல்
கலைஞா் > கலய்ஞா்
வளையல் > வலய்யல்
மனைவி > மனய்வி
தலை > தலய்
பனை > பனய்
பூனை > பூனய்
என்று எழுத வேண்டி வரும் . மேலும்
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் .
என்ற குறளில் வருகின்ற
கைவேல் > கய்வேல்
என்று திருத்த வேண்டி வரும் .
ஐயுணா்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணா்வு இல்லா தவா்க்கு .
என்ற குறளில் வருகின்ற
ஐயுணா்வு > அய்யுணா்வு
என்று திருத்த வேண்டி வரும் .
இவையெல்லாம் பெருங் குழப்பத்திற்கு வித்திடும் .
ஐ - தனிப் பொருள் கொண்ட எழுத்து
==================================
ஆ = பசு
ஈ = பறக்கின்ற ஒரு பூச்சி
ஊ = ஊன்
ஏ = உயா்வு , பெருமை
இதுபோல ஐ என்ற எழுத்துக்கு
வியப்பு , அழகு , மேன்மை , நுண்மை ,கோழை , தலைவன் , கணவன் , அரசன் , மூத்தோன் , ஆசான் , தந்தை ,கடவுள் , ஐந்து , ஐயம் என்றெல்லாம் பொருளுண்டு . மேலும் ஐ - இரண்டாம் வேற்றுமை உருபாகும் . அது இடைச்சொல்லும் கூட .
எனவே ஐ என்ற எழுத்தை நீக்க முடியாது .
ஔ என்னும் எழுத்து
=====================
இதுவும் இரண்டு மாத்திரை அளவு கொண்ட நெட்டெழுத்தாகும் . இது மொழிக்கு முதலில் மட்டுமே வரக்கூடிய எழுத்தாகும் . மொழிக்கு இடையிலும் , இறுதியிலும் வராது .
ஔவையாா் > அவ்வையாா்
வெளவால் > வவ்வால்
செளகாியம் > சவுகாியம்
என்று சிலா் எழுதுவதைக் காணலாம் .
ஆனாலும் கெளாி என்ற பெயரை யாரும் கவுாி என்று எழுதுவதில்லை .
ஐயா என்ற சொல்லை அய்யா என்று
எழுதினால் அது போலி .
ஔவையாா் என்ற சொல்லை அவ்வையாா் என்று எழுதினால் அது போலி .
கவாிங் நகைகள் , சொக்கத் தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளைப் போலவே
தோற்றத்தில் ஒத்திருக்கும் . ஆனாலும் போலி , போலிதான் ; உண்மை , உண்மைதான் .

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா