Sunday, March 19, 2023

திராவிடர் கழக திடல் -கலப்பு திருமணம் கிறிஸ்தவ முஸ்லிம் இருந்தால் அனுமதி இல்லை


பெரும் மன குழப்பத்திற்கு நடூவே அந்த முடிவை எடுத்திருந்தோம். யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்வது என்று.
திடலை தொடர்புகொண்ட போது "இந்து அல்லாதவர்கு இங்கு திருமணம் செய்ய இயலாது" என்று சொல்லி விட்டதால், ஏற்கெனவே நண்பர்கள் சிலருக்கு பதிவு திருமணம் செய்து வைக்க உதவிய வழக்கறிஞர் நண்பர் மூலமாக ஏற்பாடுகளை துவங்கி இருந்தேன்.
காலை எட்டு மணிக்கு இணையரை புந்தமல்லியில் pickup செய்வது என திட்டம். பேருந்து தாமதமாக வர, 8:30க்கு வந்திறங்கினார். அங்கிருந்து walltax road, register office செல்வது தான் திட்டம். காலை உணவு உண்ணும் போது வழக்கறிஞர் அழைத்தார். "இன்னிக்கு walltax roadல முடியாது, நீங்க Beach Station வந்திடுங்க" என்றார்.
கிட்டதட்ட சென்னையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு சென்று சேர மணி 10.30 ஆகியிருந்தது. கையெழுத்து போட வர சொல்லியிருந்த நண்பர்கள் எங்களுக்கு முன்னரே அங்கு வந்து காத்திருந்தனர்.
பதிவர் அலுவலகத்திலோ பெரும் அதிர்ச்சி காத்திருந்தது! எங்களை பதிவு அலுவலகம் உள்ளேயே போக விடவில்லை. நேராக கட்டிடத்தில் பின்புறம் கொண்டு செல்லப்பட்டோம்! என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் அங்கு வெள்ளை சட்டையோடு பார்க்க வழக்கறிஞர் போலிருந்த சிலர் "sign போடுங்க" "sign போடுங்க" என அவசரப்படுத்த, நாங்களும் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டோம். எதை எதையோ சரிபார்த்த படி "அவ்ளோ தான் போலாம்" என்றனர்...
எனக்கோ ஒன்னுமே புரியல. இணையருக்கோ அதுக்கும் மோல.
ஏற்பாடு செய்ய சொல்லிருந்த வழக்கறிஞர் நண்பரை தனியாக அழைத்து கேட்டேன். "அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சு கிளம்புங்க. சான்றிதழ் வந்ததும் நானே கூப்பிடுறேன்" என்றார்.
இதோ இன்றோடு ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. வாழ்க்கை தான் எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை மட்டும் அடிக்கடி நினைத்து கொள்கிறோம். மற்றபடி சிரிப்பு, அழுகை, கோவம், வெறுப்பு, வெறுமை என எல்லாவற்றையும் ஒரே அளவீட்டில் முடிந்தவரை கடக்கிறோம்.
சமூகத்தின் பார்வைக்காக துளியளவு கூட எங்களை மாற்றி கொள்ளாமல், யாரோடும் போட்டி, பொறாமை இன்றி, இந்த நொடியை வாழ்ந்து பார்க்கிறோம்.
நல்லாருப்போம் நல்லாருப்போம் எல்லாரும் நல்லாருப்போம்.
  













 

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...