Friday, March 24, 2023

பால்தினகரன் சட்ட விரோத மதமாற்ற சுவிசேஷக் கூட்டங்களில் பேசக் கூடாது என இலங்கை காவல் துறை நாடு கடத்தினர்.

யாழில் ஆசிர்வாத வழிபாடுகளை நடத்திய பிரபல பாதிரியார் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்

8 Hours Ago 

தமிழ் பண்பாடு மரபை அழிக்கும் அன்னிய கிறிஸ்துவப் பாதிரி பால் தினகரன் இலங்கை வர்த்தக விசாவில் போய் சட்ட விரோதமாக மதமாற்ற வேசித்தன சுவிசேஷக் கூட்டங்களில் பேசக் கூடாது என போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து இந்தியாவிற்கு நாடு கடத்தினர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணப் பகுதியில் “ஆசிர்வாத வழிபாடுகளை” நடத்தத் தயாரான பாதிரியார் மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக யாழ்.பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பால் தினகரன் என்ற இந்த பாதிரியார் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 15 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ளார்.

பின்னர் நேற்று (23ம் திகதி) இரத்மலானையிலிருந்து பலாலிக்கு உள்ளக விமானம் மூலம் சென்றதுடன், “மானிப்பாய்” பகுதியில் இரண்டு ஆசீர்வாத சேவைகளை நடாத்தினார்கள்.

இன்றும் நாளையும் (25) ஆசீர்வாத ஆராதனைகள் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், வியாபார விசாவில் வந்து ஆசீர்வாத சேவைகளை பிரதேசம் பூராகவும் நடாத்துவதற்கான மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு இவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி நேன்று (24) பிற்பகல் 01.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-127 இல் இந்த பாதிரியார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


பகிர்வு

*ஆப்ரேஷன்  தினகரன்* நடந்தது எப்படி ?? 

இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பிரதேசத்தில் ஒரு மலைப் பகுதியாய் சட்டவிரோதமாக கையகப்படுத்தி *காருண்யா* என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைத்து 8000 துக்கு மேற்பட்ட மாணவர்களை மதமாற்ற சிந்தனையுடன் பலசல சலுகைகளையும் உதவிகளையும் வழங்கி மதமாற்றம் செய்யும் பால் தினகரன் Jesus Calls  என்ற கிறிஸ்தவ மதமாற்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார் 

இவருக்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சுமார் இந்திய மதிப்பில் 20 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துக்கள் உண்டு. தனது மகள் மற்றும் மகனுக்கு அமெரிக்க பிரஜா உரிமை வேண்டி கொடுத்துள்ளார் இவர்களுடைய தந்தை தினகரன்.

 இவர்களுடைய மதம் மாற்ற நிறுவனத்தின் நிறுவனர் தினகரன் 10 வருடங்களுக்கு முன்னர் மதமாற்ற சிந்தனை உடன் மலேசியா சென்று மலேசியா அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டவர்.

 2023.03.16 அன்று இலங்கைக்கு 
01) திருமதி எவாஞ்சலின் பால் தினகரன் இந்தியர்
2 திரு. சாமுவேல் பால் தினகரன் அமெரிக்கர்
3 செல்வி ஸ்டெல்லா இரமோலா தினகரன் அமெரிக்கர்
4 செல்வி. யோகினி வசந்தகுமார் இலங்கையர்
5 திரு. பால் தினகரன் இந்தியர்
6 திரு. உலூக் பெர்னார்டர் யோர்ச்சர் இந்தியன்
7 திரு. இரத்தினகுமார் ஆசீர்வதம் இந்தியர்
8 திரு. இரெசி இடேனியல் பால்ராசர் இந்தியன்.
 வருகிறார்கள்.  Cinnamon Grand hotel  தங்குகின்றார்கள்.

2023.03.17 அன்று காலையில் உள்ள ஆராதனா ஹோட்டல் செல்கிறார்கள் சிங்களவர்களில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய மதமாற்றுகளுடன் ஆடல் பாடல் கொண்டாட்டம் முக்கியமாக இளைஞர்கள் ஜோடிகளை மூடிய அறைக்கில் வைத்து தேவ செய்தி கூட்டம் என்ற பெயரில் இளைஞர் ஜுவாதிகளில் வாலிப வயசு உணர்ச்சிகளுடன் விளையாடுகின்றன.

2023.03.18 அன்று கொழும்பு விகாரமா தேவி பூங்காவில் மீண்டும் ஒரு கூட்டம் அங்கும் காலையில் செய்தது போல் தனது திருவிளையாடல்களை  மேற்கொள்கின்றார்  கொழும்பில்.

 இவரை கொழும்பு மாநகர சபை முன்னாள் நகர பிதா ரோஸி சென விநாயகா சந்தித்து ஆசி பெறுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் மனைவியும் தாயும் கூடவே சென்று ஆசி பெறுகின்றார்கள். ஜோன் அமரதுங்க  ஈரன்விக்ரம ரத்தின  இவருடைய கொழும்பு நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்கின்றார். பணம் மற்றும் ஏனைய பரிசல்களையும் பெறுகின்றார்கள்.

இந்தியாவில் திருமூலரால் கூறப்பட்ட சிவலிங்கங்கள் யாழ்ப்பாணத்தில் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கும் சைவ பூமியில், தமிழர் பூமியில் மதம் மாற்றி மாணிப்பாய் ஏஞ்சல் பாடசாலையின் அதிபர் சாம் ராஜசூரியர் 2023.03.24, 25 திகதிகளில் பாடசாலையில் மூடிய மண்டபத்தில் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு எழுப்புதல் சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்துகின்றான்

2023.03.23 திகதி  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக Cinnamon Air  விமானத்தில் மாலை 03.15 அளவில் யாழ்ப்பாணம் வருகின்றான் மதமாற்றி பால் தினகரன். 

விடுவார்களா யாழ்ப்பாணத்தில் சைவர்கள்?
 யாழ்ப்பாணம் சிவ பூமியை மாலை 0420 மணி அளவில் வந்தடைகின்றான் பால் தினகரனும் அவருடைய கூட்டாளிகள் மனைவி பிள்ளைகள்.

 யாழ் சிவ பூமியில் நாலு அடி கால் எடுத்து வைக்கின்றார் பால் தினகரன்  immigration  திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்படுகின்றார். அவரை வரவேற்பதற்கு மாலைகள் பூங்கொத்துகளுடன் சாம் ராஜசூரியரும் அவருடைய மதமாற்ற கூட்டமும் விமான நிலையத்தை நோக்கி வந்து காத்திருப்பு மண்டபத்தில் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
 
போல் தினகரனும் அவருடைய கூட்டாளிகளுடனும் நாலு மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தன்னிடம் 20,000 கோடிகளுக்கு மேல் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கின்றார் பால் தினகரன். 
எதிர் தரப்பில் கூறப்படுகின்றது ‘ஐயா எவ்வளவு சொத்துக்கள் இருந்தும் பிரயோசனமில்லை தற்பொழுது தாங்கள் உட்கார்ந்திருப்பது இரவல் கதிரை’  என .

‘கொழும்பில் விகாரமாக பூங்காவில் கூட்டம் நடத்தினேன் யாரும் எதிர்க்கவில்லை . என்னை ஏன் நீங்கள் கைது ? என வினாவுகின்றார், மதி மயங்குகின்றார், சிந்தை புலம்புகின்றார்,
 
யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு எதிராக  இந்து சமய பக்தர்கள் மதமாற்றி பால் தினகரன் யாழ்ப்பாண மண்ணில் கால் வைக்காதே யாழ்ப்பாணம் சிவ பூமி சுவரொட்டிகள்   . மீண்டும் கூறுகின்றார் இலங்கை குடியரசுத் தலைவரை நேற்று தான் சந்தித்தேன் என அவரின் வார்த்தையாளங்கள் எதுவும்  எடுபடவில்லை . 

சாம் ராஜசூரியர் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு  கொள்கின்றார். மறுபுறத்தில் பதில் வருகின்றது ‘யாழ்ப்பாணத்தில் சைவர்கள் அமைதியாக உள்ளார்கள். அமைதியை குழப்பாதீர்கள்’.

 மாலை பூங்கத்துக்களுடன் வந்த ஆண்களும் பெண்களும் முகம் கருக்குகிறார்கள் செய்வதறியாது சிந்தை கலந்து நின்றார்கள் சுமார் இரவு எட்டு முப்பது மணி அளவில் திருமதி எவாஞ்சலின் பால் தினகரன் இந்தியர்
2 திரு. சாமுவேல் பால் தினகரன் அமெரிக்கர்
3 செல்வி ஸ்டெல்லா இரமோலா தினகரன் அமெரிக்கர்
4.  திரு. பால் தினகரன் இந்தியர்
5. திரு. உலூக் பெர்னார்டர் யோர்ச்சர் 

இந்தியன்  கடவுச்சீட்டுகள் கையகப்படுத்தப்படுகின்றது. 24 மணி நேரத்தில் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்படுகின்றது.  மதமாற்ற கூட்டங்களில் கலந்து கொண்டால் கைது செய்து சிறை செல்ல நேரிடும்- என கூறப்படுகிறது.

 இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள்.   

 வழியில் செல்லும்போது வரவேற்க வந்தால் நங்கையர்கள் பூங்கொத்தை கொடுக்கிறார்கள் கோபம் மீதியால் பால் தினகரன் தட்டிவிட்டு வந்த ஆடம்பர கருப்பு நிற பென்ஸ் வாகனத்தில் தனது மனைவி மகன் மகளுடன் யாழ்ப்பாணம் வடக்கின் வாயல் ஹோட்டலுக்கு  செல்கின்றார். 
அங்கு தனது இரு கைகளையும் உயர்த்தி Jaffna Hindus  என சத்தமிடுகின்றார்.
 
அங்கு பத்திரையாளர்கள் இவரை சூழ்ந்த போதும் தப்பி ஓடி  ஹோட்டல்  அறைகளில் மனைவி பிள்ளைகளுடன் தங்குகின்றார்.  

மறுநாள் காலை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கு மீண்டும்  வருகின்றார், அங்கு மீண்டும் எச்சரிக்கப்பட்டு ஐவரின் கடவுச்சீட்டுகல் வழங்கப்பட்டு  Cinnamon Air  விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை சென்று அடைகின்றார். அங்கு மீண்டும் குடி வரவு  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மதிய நேர சென்னை விமானத்தில் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படுகின்றார் 

யாழ்ப்பாண இந்துக்கள் தங்கள்  மனங்களில் இருந்த  ஆதங்கங்களையும் எம்பெருமானுடமும் அம்பாளுடமும் கூறி மன நிறைவடைகின்றார்கள்
 
மதமாற்றி பால் தினகரன் மீண்டும் இலங்கை வர முடியாது கருப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்படுகின்றனர்  

மதம் மாத்திகளே ஒன்றை விளங்குங்கள் இந்துக்கள். 

**இந்துக்களாகவே வாழ விரும்புகின்றார்கள். யாரையும் மதமாற்றவோ மனம் மாற்றவோ முயலவில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றார்கள் . அவர்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்**

 இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரன் ஆறுமுக நாவலரின் வழிவந்த  மறவன் புலவு சச்சி ஐயாவுக்கு எமது வாழ்த்துக்கள்
வாழ்த்த வயதில்லை ஐயா உங்களை வணங்குகின்றோம்

No comments:

Post a Comment

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்! https://www.aljazeera.com/economy/2024/4...