Wednesday, March 22, 2023

கிறிஸ்துவ ஆங்கிலேயன் விதித்த கப்பம் கட்ட கேரள மீசை வரியும் -தலை(முலை) வரியும்

 *மறைக்கப்பட்ட, திணிக்கப்பட்ட வரலாறு!!!*

https://m.youtube.com/watch?v=guuFX4066zY

https://hindupost.in/society-culture/breast-tax-a-false-story-to-attack-hindus/

https://www.opindia.com/2022/12/cji-cited-fictional-story-of-nangeli-and-breast-tax-to-highlight-atrocities-against-lower-caste/

https://indusscrolls.com/travancores-breast-tax-and-nangeli-story-are-fabrication-designed-to-divide-hindus

https://www.telegraphindia.com/culture/style/the-breast-tax-that-wasnt/cid/1803638 முலைவரி இருந்தது அது ஹிந்து கொடுமை, அது பார்ப்பனிய கொடுமை என்றெல்லாம் இங்கு *பலவகையான வரலாறுகள் பதியப்பட்டுள்ளன‌* .
*அப்படி ஒரு வரி இருந்தது உண்மை,* அதை எதிர்த்து *அய்யா வைகுண்டர் போன்றோர் போராடியதும் நிஜம்* , ஆனால் அந்த வரி ஆதிகாலத்திலே இருந்ததா? என்றால் இல்லை. சேரமன்னர் காலத்தில் இல்லை. அவர்களுக்கு பின் காலத்திலும் இல்லை.


*அந்த வரி 17ம் நூற்றாண்டில்தான் அமலாகியிருந்தது* . அதன் பின்னணி எது? என்றால் இதுதான்.
சேரநாடு எனும் கேரளம் நெடுங்காலம் அந்நிய ஆட்சியில் சிக்காமல் ஹிந்து ராஜ்ஜியமாக நீடித்தது. இந்தியா முழுக்க ஆண்ட ஆப்கானியர் கேரள பக்கம் செல்லவில்லை. அதற்கு நில அமைப்பு முதல் பல காரணங்கள் மலையாளிகளுக்கு சாதகமாக இருந்தன‌. அதனால
துக்ளக் மற்றும் நாயக்க ஆட்சி அங்கு வரவில்லை. அமைதியா இருந்தது.
இந்த அமைதிக்கும் 17ம் நூற்றாண்டின் இறுதியில் சிக்கல் ஏற்பட்டது. அதை *தொடங்கியவன் திப்பு சுல்தான். அவன் கோழிக்கோடு வரை தன் ராஜ்ஜியத்தை விரிவாக்க எண்ணி படைநகர்த்தினான்* .
இந்நேரம்தான் தமிழகத்தில் கூலிக்கு படை அனுப்பிகொண்டிருந்தது பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி. அது *கட்டபொம்மன் போன்றோரை நவாபுக்காக கொலை செய்து கொண்டிருந்த காலம்.* அந்த கிழக்கிந்திய கம்பெனியிடம் உதவி கோரினார் திருவிதாங்கூர் மன்னன் பால ரவிவர்மா.
*திப்பு சுல்தானை எதிர்க்க இங்கொரு களம் கிடைத்த மகிழ்வில் பிரிட்டானியரும் வந்தனர்.* கட்டபொம்மனை தோற்கடித்த தளபதி பாணர்மேனும் வந்திருந்தான். திப்பு விரட்டப்பட்டான்.
*கேரளாவில் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது இப்படித்தான்!!!*
கந்துவட்டியில் சீனாவினையே மிஞ்சிய வரலாறு உடையது... கிழக்கிந்திய கம்பெனி.
அவர்கள் ஒரு *நாட்டை பிடிக்க முடிவு செய்து விட்டுத்தான் வரி கணக்கை சம்பிரதாயத்துக்கு சொல்வார்கள்.*
அப்படி மிகபெரிய தொகையினை கிழக்கிந்திய கம்பெனி கோரியது. திருவிதாங்கூர் மன்னனால் இதை கட்ட முடியவில்லை.
சேரநாட்டில் அப்போது ஒரு வழக்கம் இருந்தது. *அந்த நாட்களில் சம்பாதிக்கும் ஆண் வரிகட்டவேண்டும்* . அரசுக்கு *நெருக்கடியான காலங்களில் வேலை செய்யும் பெண்ணும் வரிகட்ட வேண்டும்* .
கேரளாவில் பெண் அதிகாரம் உண்டு. *ஆணை விட பெண்ணுக்கு கூடுதல் அதிகாரம் உண்டு* என்பதால், சரிக்கு சரியாக இதை வசூலித்தார்கள்.
அக்கால *தமிழ்நாட்டில் முலை எனும் வார்த்தை வயது வந்த பெரிய பெண்களை, குறிக்கும்* அடையாளமாக இருந்தது. ஆண்டாள் கூட ஒரு பாடலில் *நாங்கள் சிறுமி அல்ல... முலைகொண்ட பெரியவர்கள்* என சொல்லும் வார்த்தை உண்டு.
இதனால் *பெரிய பெண்களுக்கான வரி, முலைவரி என விதிக்கப்பட்டது* . இது *எல்லா குடும்பத்துக்கும் கட்டாயமாக்கப் பட்டது.* திருவிதாங்கூருக்கு ஏற்பட்ட நெருக்கடி அப்படி.
*இதெல்லாம் பிராமணனோ, திருவிதாங்கூர் அரசனோ சுருட்டி செல்லவில்லை* . பிரிட்டிஷாரின் நெருக்கடி அப்படி இருந்தது. இந்த 18ம் நூற்றாண்டில்தான் ஒரு சலுகையும் பிரிட்டிசாரால் அறிவிக்கபட்டது.
அது *கிறிஸ்தவத்துக்கு மாறும் ஹிந்து குடும்பத்துக்கு இந்த வரி அவசியமில்லை* என்பது. இது வரியின் *கொடுமையினை இன்னும் தீவிரமாக்கியது* .
தென் கேரளமான கன்னியாகுமரி பக்கம், இது ஒருபக்கம் மதமாற்றமும் *இன்னொரு பக்கம் ஹிந்துக்களுக்கு நெருக்கடியும் கொடுத்தது.* மன்னனுக்கும் வேறு வழி தெரியவில்லை!!!
இதில் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ளவேண்டும். *கேரள பெண்களின் மேலாடை வடிவம் இன்றுவரை வித்தியாசமானது. அன்றும் அப்படித்தான் இருந்தது* . இதனால் *மேலாடை அணிவது என்பது ஒன்றும் பெரிய சர்ச்சையாகவோ சிக்கலாகவோ இருக்கவில்லை* .
தென்னக கிழவிகள் 1900 *முன்பு இருந்த கோலத்தில்தான் அவர்களும் இருந்தார்கள்.* ஆனால் இந்த கொடும் வரியினை கட்டாத பெண்களுக்கு , *வரியினை கட்ட முடியாத பெண்களுக்கு பிரிட்டிஷ் தூண்டுதலில் சில தண்டனைகள் வழங்கபட்டன* . அந்த *தண்டனைகளைத்தான் ஹிந்து கொடுமை என திரித்துவிட்டனர் சில ஹிந்து எதிர்ப்பு சக்திகள்.*
*பிரிட்டிஷார் ஒருபக்கம் வரியினை இட்டு* , இன்னொரு பக்கம் வேகமான *மத மாற்றம் செய்த பொழுதுதான் போராட்டங்கள் வெடித்தன‌.* அதையும் ஹிந்துக்கள் மேலேயே பழியினை போட்டு *அதிதீவிரமாக வரி வசூலித்து, மதமாற்றமும் செய்தது பிரிட்டிஷ் கோஷ்டி.*
*இந்த சமயத்தில் தான் அய்யா வைகுண்டர் போன்றோர் அவதரித்து இந்த கொடுமையினை களைந்து மதமாற்றத்தை நிறுத்தினர்.* அய்யா வைகுண்டரின் போராட்டம் உண்மையில் *திருவிதாங்கூர் மன்னனுக்கு எதிராக அல்ல* , மன்னனை கைக்கூலியாக பயன்படுத்திய மேற்கத்தியருக்கும் அவருக்குமானது.
இதனால்தான் மேற்கத்திய மதமாற்ற சக்திகளின் குறிப்புகளில்லாம் " *இந்த வைகுண்டன் வந்ததில் இருந்து மதமாற்றம் செய்யமுடியவில்லை" என அவர்கள் ஆத்திரத்தோடு எழுதிவைத்த வரிகளெல்லாம் உண்டு.*
அய்யா வைகுண்டர் வந்தபின் வேறு வழியின்றி மேற்கு கூட்டம் பணிந்தது. *அவரின் தெய்வாம்சமும் அவர் காட்டிய அற்புதங்களும் தென்னகத்தில்* *மதமாற்றத்தை கட்டி போட்டன‌!!!*
ஆனாலும் அவர் 1851ல் காலமான பின் மெல்ல அவர்கள் வாலாட்டினார்கள், ஆனால் 1857ல் இந்தியா பிரிட்டன் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு சென்றபின் *கிழக்கிந்திய கம்பெனியின் அராஜகம் ஒழிந்தது. அந்த முலைவரியும் நீங்கிற்று.*
*இதுதான் முலைவரி போராட்டத்தின் உண்மை வரலாறு* .
*இந்த வரலாற்றை திரித்து* ஹிந்துமதம் கேரள பெண்களுக்கு மார்பில் துணியிட மறுத்து கொடுமை செய்தது. அதை *திராவிடமும் சமூக நீதியும்தான் மாற்றியது என மிக பெரிய பொய்* இங்கு பதியப்பட்டுள்ளது.
*இந்தியாவில் எங்கும் இல்லா வரி கேரளாவில் விதிக்கபட்டது*. *பெண்களும் சமஸ்தானத்துக்கு வரிகட்ட வேண்டும் என்பதே தவிர* வேறேதும் அல்ல.
*இந்தியாவில் முதல் வேலை இம்மாதிரியான பொய்வரலாறு களை அகற்றி* *உண்மை வரலாற்றை கொண்டுவருவது,* அதில்தான் *பிரிட்டானியர் இங்கு செய்த எல்லா குதர்க்கமான கபட வேலைகளின் உண்மையும்* *அவர்கள் உருவாக்கி வைத்த அடிவருடி கோஷ்டிகளின் முகமும் தெரியும்* .
*இப்படியெல்லாம் கேரளாவில் முலைவரி என கட்டுகதை கட்டிய கூட்டம், வைக்கம் கொடுமை என நீலிகண்ணீர் விட்ட கூட்டம்,* *1921ல் மாப்பிள்ளா கலவரம் என ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள்* *கொல்லப்பட்டது பற்றி வாய் திறக்குமா என்றால் திறக்காது.* ஏனென்றால் *தமிழகத்தில் மறைக்கப்பட்டு மடை மாற்றப்பட்ட வரலாறுகள் அப்படி*!!!! .
*தோள் சீலை போராட்டம் பற்றி இன்று கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் நிகழ்வுகள்* போல *மாப்ளா கலவரம் பற்றி பேசுமா என்றால் பேசவே பேசாது?*
ஏனென்றால் *ஓட்டு பிச்சைக்காக இஸ்லாமியர்களிடம் மண்டியிட தயங்காதவர்கள் இவர்கள்!! ‌‌* by
பாண்டிய நாட்டு கொம்பன்
நன்றி.திரு.ரமேஷ்.NGP.

No comments:

Post a Comment