Thursday, March 30, 2023

ரோஹினி தியேட்டர் -நரிகுறவர் மக்களை படம் பாக்க விடலயாம்..

 ரோஹினி தியேட்டர்ல நரி குறவர் இன மக்களை படம் பாக்க விடலயாம்...

.அவங்களுக்கு 6டிக்கெட் குடுத்தது யாருனு அவங்களுக்கே தெரியலயாம்.. அன்பளிப்பா குடுத்தாங்கலாம்...
.
சரி அத கூட விட்ருவோம்...
.
நான் நிறைய நரிகுறவர் இனத்து ஆட்களோட பழகி இருகேன்.. சாதாரணமா அவங்க எதாவது விசேஷத்துக்கு போனா கூட நல்ல துணி, மேக்கப்லாம் போட்டு போவாங்க...
.




பார்த்தா கூட கண்டு புடிக்க முடியாது.. பேச்சில மட்டும் தான் வித்தியாசம் தெரியும்..
.
அப்புடி இருக்கும் போது கிளிஞ்ச உடையோட வேணும்னே அங்க போயி நின்ன மாதிரி தெரியுது...
.
விசாரனணை கைதிக்கு பல்லு புடுங்குனத கூட பெரிய செய்தியா போடாத மீடியா இது நடந்து சில நிமிசத்துலயே அவங்க ஏரியா வரைக்கும் போயி பேட்டி எடுத்து இத பேசு பொருளாக்கி பெருசாக்குறாங்க...
.
இதெல்லாம் திட்டமிட்டு எதையோ தோண்ட இல்ல எதையோ மறைக்க செய்ற வேலை மாதிரி இருக்கு...
.
ஒருவேள நாளைக்கு முதல்வர் அவங்கள சந்திக்கிற மாதிரி செய்தி வறதுக்கு இதுவும் ஒரு டூல்கிட்டா கூட இருக்கலாம்...
.
எது எப்படியோ இப்புடி நடந்துகிட்டது தப்பு.. அது எவனா இருந்தாலும் சரி.. எதுவா இருந்தாலும் சரி.. மனிதன சமமா பாக்கனும்..
.
அப்புடி துறத்துனவன தூக்கி உள்ள வைங்க.. ஓகே...
.
இப்ப எல்லாரயும் சமமா பாக்கனும்னு யூடியூப்ல இருந்து போராளிகள் வரைக்கும் உருட்டுறாங்க...
.
சரி.. இப்ப சமூகநீதி சமத்துவம் பேசுற எத்தனை பேரு அவங்க வீட்டுல நரிகுறவர் இனத்தவர வாடகைக்கு குடி வைப்பீங்க..??
.
வீடு வாடகைக்கு குடுக்க எத்தனை பேர் தயார்..?? தன்னோட நிறுவனத்துல வேலைக்கு வைக்க எத்தனை முதலாளி போராளிகள் தயார்..??
.
எத்தனை போராளிகள் வீட்டுல நரிகுறவர்கள குடி வச்சிருகீங்க..? அவங்களும் மனுசங்க தான் வாடகையும் குடுப்பாங்க.. ஏன் வசிக்க விடல..??
.
சரி..எல்லாரும் சமம்னு நாம பேசுனா கவுனண்டர் எனக்கு பொண்ணு குடுப்பானா.? வன்னியர் எனக்கு பொண்ணு குடுப்பானா.?? பார்ப்பான் எனக்கு பொண்னு குடுப்பானானு கேக்குறாங்க...
.
இப்ப குறவர் மக்களுக்கு சப்போட் பண்ற எத்தனை போராளிகள் குறவர் வீட்டு பெண்ண கல்யாணம் பண்ண தயார்..?
.
நீங்க கல்யாணம் பன்னி அவங்களோட வாழ்கையயும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தலாமே..?
.
சரி இதுவரைக்கும் சமத்துவம் சமூக நீதி பேசுன எத்தன பேரு குறவர் மக்கள் கூட திருமணம் செஞ்சி சமத்துவத்த நிலைநாட்டுனீங்க..??
.
அதெப்புடி காதல் முதல் சமூவ நீதி வரைக்கும் உங்களுக்கு சாதி பாத்து தான் வருது..??
.
செய்ய மாட்டீங்களே.. வாய் கிழிய பேசவும் டுவிட்டு போட்டு பொங்கவும், இன்னைக்கு ஒரு நாள் கன்டன்டுக்கு அத வச்சி செய்தி போடவும் தான் நீங்கலாம் லாயக்கு...
.
உங்கள மாதிரி மனசு உள்ள வக்கிரம் & தீண்டாமைய வச்சிகிட்டு போராளினு பேசுறவங்கள விட அந்த ரோஹினி தியேட்டர் ஊழியர் எவ்வளவோ மேல்...

No comments:

Post a Comment

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் இதோ ஓர் உத...