Monday, March 27, 2023

இந்திய இஸ்ரோ ராக்கெட் மூலம் இங்கிலாந்து ஒன்வெப் நிறுவன 36 செயற்கைகோள்கள் விண்ணீல் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ராகெட் மூலம் இங்கிலாந்து ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் விண்ணீல் ஏவப்பட்டது

இங்கிலாந்து சென்ற மாதம் ஏவிய ராக்கெட் தோல்வி அடைந்து விழுந்தது

https://www.maalaimalar.com/news/national/isro-lvm-rocket-carrying-36-satellites-588066?infinitescroll=1

36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்' 
Byமாலை மலர்26 மார்ச் 2023 9:08 AM (Updated: 26 மார்ச் 2023 9:17 AM)

இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது. ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. 

இந்த ராக்கெட் 'ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3' என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. அப்போது தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.

 இந்த 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன்னாகும். எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது. இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. 

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...