Sunday, March 19, 2023

பழனி சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான ஐ.பி. செந்தில்குமார் மனைவி மெர்சி செந்தில்குமார் -சாதி வேறு...மதம் வேறு....



https://tamil.oneindia.com/news/chennai/dmk-mla-ip-senthilkumar-s-wife-posts-on-valentine-s-day-in-fb-411998.html




காதலித்துதான் அவருக்கு செய்த கெடுதல்-காதலர் தினத்தில் திமுக எம்எல்ஏ ஐபி செந்தில் மனைவி உருக்கம் By Mathivanan Maran Updated: Sunday, February 14, 2021, 22:15 [IST] சென்னை: என் கணவருக்கு செய்த மிக பெரிய கெடுதல் நான் அவரை காதலித்து திருமணம் செய்ததுதான் என்று பழனி சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான ஐ.பி. செந்தில்குமார் மனைவி மெர்சி செந்தில்குமார் காதலர் தினத்தில் உருக்கமான பதிவை போட்டுள்ளார். 
காதலர் தினத்தை முன்னிட்டு மெர்சி செந்தில்குமார் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
 என் காதலே, என்னை காதலித்ததால் என்னை ஏமாற்ற கூடாது உண்மையாக இருக்க வேண்டும் என ,என் கணவர் பல நெருக்கடியில் என்னை திருமணம் செய்தார். 
 என்னால் பல நேரங்களில் உறவுகளிடம் இருந்து ஒதுக்கப்பட்டார். எல்லாம் என்னால்........சாதி வேறு...மதம் வேறு....  ஆனால் அவரிடம் இருக்கும் மனித நேயம்...அன்பு எல்லை இல்லாதது.....பல நேரம் நான் அழுகிறேன். உன் அன்புக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்று..... வாழ்க்கையில் நான் என் கணவருக்கு செய்த மிக பெரிய கெடுதல் நான் அவரை காதலித்து திருமணம் செய்ததுதான். என்னை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் அவரின் வசதியான வாழ்க்கை தொடர்ந்து இருக்கும். என் அன்பு கணவரின் அழகான வாழ்க்கையை நான் என் காதலால் கெடுத்துவிட்டேன். இதுதான் ரொம்ப முக்கியம்! கல்வித்துறைக்கு கொட்டிக்கொடுத்த பிடிஆர்.. கடந்த முறையை விட அதிகம்.. சிறப்பு என் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அடிபடை உரிமைகள் கூட என்னால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனக்கே என்னை பிடிக்கவில்லை. ஏழேலு ஜென்மத்திற்கும் நீயே என் கணவராக வர வேண்டும என நான் விரும்பி கடவுளை வேண்டுகிறேன். இப்படிபட்ட கணவர்கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். அதனால் அவரை நன்கு பார்த்து கொள்ள வேண்டியது கடவுளும் கட்சியும்தான் ....... காதலர் தின வாழ்த்துகள் உண்மையான காதலுடன் ....... உன்காதல் மனைவி Dr மெர்சி செந்தில்குமார்MA .,MED .,MPhil .,PHD இவ்வாறு மெர்சி செந்தில்குமார் பதிவிட்டுள்ளார். ஐ.பி. செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் இந்த உருக்கமான பதிவை படித்து மாய்ந்து மாய்ந்து கமெண்டுகளில் ஆறுதல், வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dmk-mla-ip-senthilkumar-s-wife-posts-on-valentine-s-day-in-fb-411998.html



No comments:

Post a Comment