Wednesday, March 22, 2023

காஷ்மீர் புனித பூமி

*காஷ்மீரம்!*


*காஷ்மீர் = காஷ்யபர்+மீரா* 

காஷ்யப ரிஷியின் பெரிய ஏரி. பெரிய ஏரிக்கு சமஸ்க்ருதத்தில் *மீரா* எனப்பெயர். காஷ்யப ரிஷி இப்போதைய வைஷ்வத மந்வந்ரத்தின் சப்தரிஷிகளில் ஒருவர்! 


ப்ரஜாபதி தக்ஷர், தம் குமாரத்தியை கஷ்யபருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தேவர்கள், கன்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள் எல்லாம் காஷ்யபரின் பிள்ளைகள்!


வற்றியிருந்த ஏரியை சமப்படுத்தி ஊராக்கினார் அனந்த்நாக். அங்கு பல குருகுலங்கள், சர்வகலாசாலைகள் நிறுவி மிகப்பெரிய ஞான நகரமாக்கினார்!


ஞானம் என்னும் செல்வத்தை (ஶ்ரீ) உடைய நகர் என்பதால் *ஶ்ரீநகர்!*


இவற்றையெல்லாம் நிர்வாகம் செய்ய நிர்மாணித்த இடமே *அனந்த்நாக்*


ஶ்ரீநகரின் ஞானச் செல்வத்தை அனுபவிக்க கௌரிதேவியும், விநாயகரும் கைலாயத்திலிருந்து அங்கு வருவார்களாம்! அவர்கள் வரும் வழி *கௌரிமார்க்* இதுவே இன்றைய *குல்மார்க்!* 


காஷ்மீரை ஆளும் காவல் தெய்வம் *சரஸ்வதி (சாரதா) தேவி*! 


காஷ்மீர மொழியின் எழுத்து வடிவங்கள் *சாரதா* என்றழைக்கப்பட்டது. கலாசாலைகள் *சாரதா பீடங்கள்* ஆயின! 


ஶ்ரீ ராமானுஜர் ஒருசமயம் வேதவியாசரின் பிரம்மசூத்திரங்களுக்கு உரை எழுதுவதற்காக, சாரதா பீடத்தில் இருந்த, வேதவியாசரின் சீடர் போதாயன மகரிஷி இயற்றிய 'போதாயன விருத்தி கிரந்தம்' என்னும் நூலை படிக்க காஷ்மீர் வந்தார்!


ஶ்ரீராமானுஜர் இயற்றிய *ஶ்ரீபாஷ்யத்தை* சரஸ்வதி தேவி தம் சிரஸில் வைத்து பெருமைபடுத்தினார்!

சில சூத்திரங்களுக்கு ராமானுஜரின் வியாக்யானங்களைக் கேட்டு, அவரை  *ஶ்ரீபாஷ்யக்காரர்* என்று போற்றினார்! 

தாம் ஆராதித்து வந்த 'லக்ஷ்மி ஹயக்ரீவர் விக்ரஹத்தை' ராமானுஜருக்கு தந்தருளினார்!

-

*நமஸ்தே சாரதா தேவி!*

*காஷ்மீர் பூரவாசினி!*

*த்வமஹே ப்ரார்த்யே நித்யம்,*

*வித்யா தான் இஞ்சா தேஹிமே!*

🙏🙏-

அடியேனுக்கு வாட்ஸ்அப்பில் ஸ்ரீரங்கத்து ஒரு ஸ்வாமி அனுப்பியதை முக நூலில் பதிவிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா