தமிழக கோவில்களில் உள்ள 20.000க்கும் மேற்பட்ட - சூரிய சந்திரர் உள்ளவரை என்றே தான் தான கல்வெட்டுகளில் உள்ளதுஎ என்பதை சுட்டி - லண்டன் நீதிமன்றத்தில் பாத்தூர் நடராஜர் சிலை மீட்டோம்.
கோவிலின் இறைவன் விக்ரகம் ஒரு சட்டப்படி மைனர்- எந்த பக்தரும் அவருக்காக வழக்கு போட்டு மீட்பு செய்யலாம் என்பதே உலகநீதிமன்றங்கள் ஏற்ற தீர்ப்பு
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் நாம் தமிழரின் மேல்முறையீடு ( SR NO :108685 )
1. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சைவ ஆலயங்களில் ஒன்று என்பதையும், அந்த கோயில் வழிபாட்டு உரிமைகளை முடிவு செய்யும் போது, சித்தாந்த சைவ விதிகளை (தமிழர் வழிபாட்டு முறைகளை) கடைபிடிக்க வேண்டும் என்பதையும் இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் மறந்து விட்டனர்.
2. மனுதாரர் ராம ரவிக்குமார் முருகன் கோயில் சைவசித்தாந்த கோயில் என்ற அணுகுமுறையில் மனுதாக்கல் செய்யவில்லை. அரசு தரப்பு வாதங்கள் இதை பிரதிபலிக்க இயலவில்லை. தீர்ப்பை வழங்கிய நீதியரசர் இது குறித்தான ஆய்வின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கவில்லை.
3. வழிபாட்டு உரிமை என்ற அளவில் தொடர்ந்து இந்த வழக்கை சொத்துரிமை என்ற அளவில் தீர்ப்பை வழங்கியிருப்பது பெரும் ஆபத்தானது.
மேற்கண்ட சிக்கலை முன்வைத்து இந்த சிக்கலில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மேல்முறையீடு செய்துள்ளது. இந்த சிக்கல் குறித்து விவாதத்தில் நமது பார்வையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறோம்.
.png)
.png)
.png)
No comments:
Post a Comment