Saturday, March 11, 2023

நங்கேலி தோள் சீலை முலைச்சிபரம்பு கட்டுக்கதைகள்

அன்னிய ஆங்கிலைய கிறிஸ்துவ கொடுங்கோலர்களை கேரளாவில் கால் வைக்காமல் தடுக்க கப்பம் கட்ட ஆண்களுக்கு மீசா வரி, பெண்களுக்கு தலை வரி என போடப்பட்டதை பற்றிய நச்சுப் பொய்கள் உருவாக்கி இந்து வெறுப்பு தூண்டும் கிறிஸ்துவ அடிமைக் கூலிகள் 



  
#முலைவரி மறுத்த பெண்ணியவாதி நங்கேலி பிறந்த தினம் 08.03.2007

புரட்சிப்பெண் நங்கேலி பிறந்த கதை
திருவாங்கூர் சமஸ்தானத்தை பற்றி எழுதும் போது அதன் சனாதன கோட்பாடுகளயும் அதன் சாதி ஆதிக்க வெறியாட்டங்களயும் மறைத்து எழுதி விட முடியாது. இன்று திருவாங்கூர் என்றாலே மார்புவரியயும் நங்கேலி கதையையும் வைத்துதான் எழுத தொடங்குகிறார்கள். ஆனால் இத்தனை வீரமிக்க பெண்ணாக ஆதிக்க சாதியின் பெண்களுக்கெதிரான வன்கொடுமையை எதிர்த்த பெண்ணாக வீரத்துடன் புகழப்படும் நங்கேலி பிறந்த கதையை யாரும் சரியாக பேசுவதில்லை. நங்கேலிகள் பேசப்படவேண்டும் அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரையான வரலாறை நாம் தெளிவாக பேசியாக வேண்டும்........

நங்கேலி எனும் பெண் சேர்த்தலையில் முலச்சிப்பரம்பு என்ற ஊரில் தனது கணவன் கண்ணப்பணுடன் வாழ்ந்து வந்தாள். வரிகொடுமை தலைவிரித்தாடிய திருவாங்கூரில் அரசு அதிகாரிகள் பெண்களின் முலைகளை அளக்கும் கருவி ஒன்றை வைத்திருந்தனர். அந்த கருவியை எடுத்துகொண்டு மாதமானால் ஒவ்வொரு ஈழவ பெண்கள் கவனிக்க ஈழவ பெண்கள் உள்ள வீட்டில் மட்டுமே போய் அவர்களின முலையை நெறுத்து பணம் வாங்கி கொள்வர். இதை பொறுத்து பொறுத்து பார்த்த நங்கேலி ஒருநாள் வெகுஉண்டெழுந்து தன் முலையை அறுத்து தன் வீட்டில் எவெர்சில்வர் தட்டு இல்லாத காரணத்தால் வாழை இலையில் வைத்து அதிகாரிகளுக்கு பரிசளித்தார்......
என்ன காரணமென்று தெரியவில்லை பத்தொனபதாம் நாற்றாண்டு இறுதி வரை புதைப்பதை வழக்கமாக கொண்டிருந்த ஈழவர்கள் நங்கேலியை மட்டும் எரித்துவிடுகிறார்கள். தன் மனைவி சிதையில் எரிவதை பார்த்து வெறியோடும் வேதனையோடும் ஓடி சிதையில் குதித்து மரணிக்கிறான் கண்ணப்பன்.இப்படித்தான் நமக்கு நங்கேலியை தெரியும் ஆனால் நங்கேலியின் பிறப்பை பற்றியோ அவரது பெற்றோரை பற்றியோ நமக்கு தெரியாது. ஆனால் சமகால ஆய்வுகள் மூலம் நங்கேலியின் தந்தையரையும் அவரது பிறந்த ஆண்டும் நமக்கு தெரிய வருகிறது. அவரது தந்தையின் பெயர் ராதாகிருஷ்னன் நங்கேலி பிறந்த நாள் மார்ச் 8, 2007......
எது 2007ல் பிறந்தவர் எப்படி திருவாங்கூரில் சாதிகொடுமைக்கு ஆளாக்கபட்டு இறந்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா....? ஆம் எனக்கும்தான் ஆனால் நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம். சரியாக புரிந்துகொள்ள நங்கேலியின் வாழ்க்கையை பயணத்தை புரிந்து கொள்ளவேண்டிய தேவை உள்ளது.......
1957 ஆம் அண்டு என் ஆர் கிருஷ்னா என்பவர் ஈழவர்கள் இன்னெலயும் இன்னும் என்ற புத்தகத்தை எழுதுகிறார் அந்த புத்தகத்தில் எந்த ஒரு ஆதாரமோ அடிக்குறிப்போ இல்லாமல் முலைவரி என்ற சொல்லாடலயும் அதற்காக ஒரு ஈழவ பெண் முலையறுக்கபட்டார் என்றும் போகிற போக்கில் ஒரே வரியில் குறிப்பிடுகிறார்......
1975 ஆம் ஆண்டு ஆர் என் யேசுதாஸ் தனது A peoples Revoult in Travancore என்ற புத்தகத்தின் அடிக்குறிப்பில் ஈழவர்கள் இன்னெலயும் இன்னும் என்ற புத்தகத்தில் இப்படி ஒரு கதை இருப்பதாக அதை அப்படியே பதிகிறார்......
1976 ஆம் ஆண்டு வாசுதேவ பணிக்கர் எழுதிய பத்மநாப பணிக்கர் சரித்திரத்தில் இதே கதையை அப்படியே குறிப்பிடுகிறார். ஒருவர் எழுதிய புத்தகத்தில் இருந்த ஒரு வரியை இரண்டு மூன்று வரிகளுக்கு விரித்து எழுதுகின்றனர் ஆனால் அந்த காதாபாத்திரங்களுக்கு பெயர் இல்லை. இதை நாம் நங்கேலி கருத்தரித்த காலமாக எடுத்து கொள்ளலாம். இப்படி கருத்தரித்த கதைகரு எந்தவொரு வளரச்சியும் இல்லாமல் இருபத்தைந்து ஆண்டுகள் கருவாகவே இருக்கிறது......
இப்படியே போனால் சரிவராது என எண்ணிய எஸ்.என் சதாசிவம் தனது A social History of India என்ற புத்தகத்தில் இந்த பெண் வாழ்ந்த காலமாக 1840ஐ தன் கற்பனை வளத்தால் முடிவு செய்கிறார். ஆனாலும் அவரது கற்பனை வறட்சியோ என்னவோ வருடத்தை குறிப்பிட முடிந்த அவருக்கு அந்த பெண்ணிற்கு சரியான பெயர் சூட்ட தெரியவில்லை........
இப்படியாக பெயர் தெரியாமல் சுத்திவந்த அந்த கதாபாத்திரத்திற்குதான் தந்தையாக திடீர் உதயமாகிறார் சி.ராதாகிருஷனன். ஒரு அழகான பின்புலத்தயும் அந்த பெண்ணிற்கு வரலாற்றில் மிக முக்கிய இடம் கொடுக்கும் அளவிற்க்குமான ஒரு பெயரை சூட்டுகிறார்.அந்த பெயர்தான் இன்று உலகபுகழ் பெற்ற நங்கேலி எனும் பெண் உரிமை போராளி . இப்படி தன் கற்பனை வளத்தால் உருவாக்கிய நங்கேலி பெண்ணை தனியாக உலவவிட அவருக்கு ஏனோ மனசு வரவில்லை. கண்ணப்பன் என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி கண்ணப்பனுக்கும் நங்கேலிக்கும் திருமணம் செய்துவைத்து நங்கேலி எரிந்த சிதையில் கண்ணப்பனை தள்ளிவிட்டு கொல்கிறார்.........
ராதாகிருஷ்னன் எப்படி பட்ட கில்லாடி என்றால் இந்த ஒட்டுமொத்த கதையையும் ஒரே கட்டுறையில் எழுதி ஒரே நாளில் தி பயோனியர், மாத்ருபூமி மற்றும் மலையாள மனோரமாவில் வெளியிடுகிறார். எனக்கு தெரிந்து ஒரே நாளில் ஒரே கதைய மூன்று பத்திரிகைளுக்கு எழுதி பணம் பார்த்தவர் அவர்தான்.ஆனால் பரிதாபகரமாக அந்த கதை பெரிதாக ஈர்க்கபடவில்லை அல்லது வெகுஜன மக்களிடம் பரவவில்லை. இந்தியர்கள் தான் எழுத்து வடிவத்தை விட ஒளி வடிவத்திற்கு மயங்குபவர்கள் ஆயிற்றே. அங்கேதான் ஓவியர் முரளி தன் சித்து வேலைய தொடங்குகிறார்......
2012 ஆம் ஆண்டு நங்கேலி கதையை கண்ணீர் வரவைக்கும் படங்களாக வரைந்து டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் பிபிசியில் ரீரிலீஸ செய்கிறார்கள்.இன்று இந்தியா முழுவதும் பேசும் பொருளாகிறது அதை அடிப்படையாக கொண்டு கட்டுரை வடிப்பவர்கள் புத்தகம் போடுபவர்கள் ய்ட்யூப் வாயர்கள் என்ற பெருங்கூட்டமே நங்கேலியை வைத்து பணம் பார்க்க ஆரம்பித்துவிட்டாராகள். மலையாள சினிமாவுமஅ விடுவேனா பார் என்று 2017க்கு பிறகு நங்கேலி என்ற பெயரை பாடல்களிலும் வசனங்களிலும் பயன்படுத்த தொடங்குகிறது. இன்று மகளிர் தினம் எல்லா சமூக ஊடக தளங்களிலும் ராதாகிருஷ்னன் எழுதிய கதாபாத்திரத்துக்காக கண்ணீர் சிந்தி புரட்சி வணக்கம் செலுத்தி கடமையாற்றி கொண்டிருக்கிறார்கள்.....
ஆம் நம் மக்களை ஏமாற்ற வெறும் ஒரு வரி கதையை எழுதி சுத்த விட்டால் போதும் அது தானாக வளர்ந்துவிடும். ஒரு சூபி கவிதையில் உருவான பத்மாவதி கதையை போல் என் ஆர் கிருஷ்னாவின் ஒற்றை வரியில் உருவாகி கருவாகி பிறந்த நங்கேலி யை போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகள் உலவுகின்றன இந்தியம் முழுமைக்கும்..........
எனிவே மார்ச் 8, 2007 ஆண்டு பிறந்த நாடு போற்றும் போராளியான நங்கேலிக்கு பதினாறாவது பிறந்தநாள் ஆசாம்சகள்.....

https://www.facebook.com/100046211673110/posts/772994474250935/
https://feminisminindia.com/2016/09/12/kerala-breast-tax-nangeli/

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...