Friday, March 17, 2023

ஓஷோ - மத.தெரசா ஏன் எதிர்த்தீர்கள்?

 
நீங்கள் தெரசாவை ஏன் எதிர்த்தீர்கள்?* *ஏழைகளை காப்பாற்ற போவது யார்? என்ற கேள்விக்கு *ஓஷோவின் பதில்*
இது ஒரு நடந்த சம்பவம்👇
தெரசாவின் கல்கத்தா ஆசிரமத்திற்கு அமெரிக்க தம்பதியர் ஒரு குழந்தையை தத்தெடுக்க வந்தார்கள். ஆசிரம வரவேற்பாளரை அணுகி விசாரித்தனர். அதற்கு அவர் 700 குழந்தைகள் தற்போது இருப்பதாகவும், விரும்பிய குழந்தையை நீங்கள் தத்தெடுக்கலாம் எனக் கூறிவிட்டு , அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப கூறினார்.
அவர்கள் நிரப்பிய படிவத்தை வாங்கிகொண்டு , இங்கேயே காத்திருங்கள் வருகிறேன் எனக்கூறிவிட்டு , உள்ளே சென்றார் தெரசாவிடம் தகவலை சொல்ல. *உள்ளே சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவே இல்லை.* சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மற்றொருவர் இவர்களிடம் சொன்னார், *மன்னிக்கவும் நீங்கள் தத்தெடுக்க, தற்போது எந்த குழந்தைகளும் எங்களிடம் இல்லை.* என்று.
அமெரிக்க தம்பதிகளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. இப்போதுதான் சில நிமிடங்களுக்கு முன் 700 குழந்தைகள் இருப்பதாக சொன்னார்கள், அதற்குள் என்ன நடந்தது என்று வந்தவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் எனக்கொன்றும் தெரியாது, உங்களிடம் சொல்ல சொன்னதை நான் சொல்லி விட்டேன் எனக்கூறிவிட்டு கிளம்பிவிட்டார். நடந்தது இதுதான்👇
*தத்தெடுக்க வந்தவர்கள் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள்* அவர்கள் நிரப்பிய படிவத்தில் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர் என நிரப்பியதே காரணமாக இருந்தது. ஒரு வேளை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு அப்போது அங்கேயே 700 குழந்தைகள் இருந்திருக்கும்.
அவர்கள் *பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர் என்பதால் அந்த 700 அனாதை குழந்தைகளும் திடீரென இல்லாமல் போய்விட்டனர்* *நான் இது பற்றி தெரசாவை கடுமையாக விமர்சித்தது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் அப்போது வெளியானது* இது பற்றி தெரசா எனக்கு பதில் கடிதம் அனுப்பினார்.
இங்கு உள்ள குழந்தைகள் எல்லாமே கத்தோலிக்க கிறிஸ்தவ குழந்தைகளாக வளர்பவை. அவை *பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களிடம் சென்றால், அவர்களது மனநிலை பாதிக்கப்படும்* என தெரசா கூறி இருந்தார். நான் தெரசாவுக்கு இவ்வாறு பதில் எழுத சொன்னேன்.
*கத்தோலிக்க குழந்தைகள், பிராட்டஸ்டண்ட் பெற்றோரிடம் வளர்ந்தால் அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் என சொல்ற நீங்கள் ,* *ஏன் இந்து, முகம்மதிய குழந்தைகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி அவர்களின் மனநிலையை சிதைக்கின்றீர்கள்? என்று!*
மேலும் 21 வயதிற்கு மேல்தான் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம். *நீங்கள் பிற மத குழந்தைகளை (இஸ்லாமிய, இந்து) கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவது மாபெரும் குற்றம்* இது குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்றும் , இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் எழுதி இருந்தேன்.
இதைப் படித்த தெரசா என் மீது பயங்கர கோபமடைந்தார். பின்பு அவர் இது பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை என்றும், *நான் உங்களை மன்னிக்க சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் எழுதியிருந்தார்*
இதற்கு பதிலாக நான் எனது கடைசி கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். *எனது அனுமதி இல்லாமல் எனக்காக கடவுளிடம் பிரார்த்திக்க நீங்கள் யார்?* *என் அனுமதி இன்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள் எவ்வாறு தலையிடலாம்?* இது குறித்து நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என பதில் எழுதி இருந்தேன்.
 

 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...