Saturday, November 29, 2025

திராவிட மாடல் ஆட்சி-தந்தை குடிப்பழக்கத்தால் மருத்துவ மாணவி மதுமிதா தற்கொலை

தந்தையின் குடிப்பழக்கத்தால் பெண் பயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை: பெரியகுளம் அருகே சோகம்  29 Nov 2022

https://www.hindutamil.in/news/crime/907473-female-trainee-doctor-commits-suicide-by-drinking-poison-due-to-father-s-alcoholism-tragedy-near-periyakulam.html

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தந்தையின் தீராத குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண் பயிற்சி மருத்து வரான மகள் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி நாராயணசாமி-சுமித்ரா. இவர்களது மகள் மதுமிதா(26). இவர் பிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்பு முடித்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார்.

கப்பலில் வேலை பார்த்து வந்த நாராயணசாமி 6 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இதனால் உற வினர்களிடம் அதிக கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், நாராயணசாமி வீட்டை விற்கப் போவதாகக் கூறி அடிக் கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மனைவி சுமித்ராவும், மகள் மதுமிதாவும் நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில் மகள் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர் பாக, தென்கரை காவல் ஆய் வாளர் ஜோதிபாசு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.



 

No comments:

Post a Comment

கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் ரஷ்யா, சீனா என பல நாடுகளில் மசூதிகள் இடித்து ஆக்கிரமித்தவை சில

ரஷ்யாவின் Derbent பகுதியில் இருந்த மிகப் பழமையான Juma மசூதி சோவியத் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ...