Monday, December 7, 2020

ஏஞ்சல் டி.வி -ஆவீக்குரிய பாஸ்டர் வின்சென்ட் செல்வராஜ் , சுந்தர் சிங் & மோகன் சி லாசரஸ் பலான லீலைகள்

                        

 “ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார்.  அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்”

 

ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும்” என்கிற சப்தம் வெளிப்பட்டது. இரண்டு பெரிய தேவ தூதர்கள் தங்களது ரெக்கைகளை விரித்துப் பறந்து வந்து அந்த புத்தகத்தைத் திறந்தனர். பிரியத்துக்குரிய பிள்ளைகளே… அது தான் உங்கள் பாவக் கணக்குப் புத்தகம். சீக்கிரமே வருவேன் என்று சொன்ன தேவன் இதோ வந்து கொண்டேயிருக்கிறார். அவரைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா?”

வின்சென்ட்-செல்வகுமார்
”தீர்க்கதரிசி” வின்சென்ட் செல்வகுமார்

நண்பர்களே… குழம்பிப் போகாதீர்கள். நீங்கள் வினவு தளத்தினுள் தான் இருக்கிறீர்கள். இன்னும் இந்த சாத்தானின் தளத்தை ‘தேவ’ பிள்ளைகள் யாரும் ஹாக் செய்து விடவில்லை. மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமா கதைகள் எல்லாம் ‘தீர்க்கதரிசி’ என்று தமிழகக் கிருத்துவ வட்டாரத்தில் கொண்டாடப்படும் வின்சென்ட் செல்வகுமாரால் சொல்லப்பட்டவைகள் தான்.

‘தீர்க்கதரிசி’ வின்சென்ட் செல்வகுமாரும், இன்னொரு ‘தீர்க்கதரிசி’ சாது சுந்தர் செல்வராஜ் என்பவரும் இணைந்து ஏஞ்சல் டி.வி என்று ஒரு அல்லேலுயா அக்கப்போர் சேனலை நடத்தி வருகிறார்கள். இந்த தொலைக்காட்சியில் இருபத்து நான்கு மணிநேரமும் மேலே சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற “பரஞ்சோதியும் பாயும் நாகமும்” பாணி தீர்க்கதரிசனங்களை அவ்விருவருமாக சேர்ந்து அவிழ்த்து ஆராதனை செய்து வருகிறார்கள்.

மோகன்-சி-லாசரஸ்


இவர்களது ‘தீர்க்கதரிசனங்கள்’ பெந்தெகோஸ்தெ வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஊரில், உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள். அது மட்டுமல்ல, யாருடைய வாழ்வில் எப்போது ‘ஆவி’ குறுக்கிடும், அது என்ன விதமான ‘தரிசனங்களையும்’ ‘அபிஷேகங்களையும்’ அள்ளித்தரும் என்பது பற்றிய கன்சல்டேசனும் உண்டு.

                             

இப்படி ஊர் உலகத்துக்கே குறி சொல்லும் தீர்க்கதரிசன வரத்தை வின்சென்ட் செல்வகுமாருக்கு அளித்த ‘ஆண்டவர்’ அவரைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யாரிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அதைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள் – அதற்கு முன் மேற்படி அம்புலிமாமா பற்றி நக்கீரனின் சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையின் விவரங்களைப் பார்த்து விடுவோம்.

வின்சென்ட் செல்வராஜ் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமாக் கதைகளை உற்பத்தி செய்யும் பாக்டரி ஒன்றை ராமநாதபுரம் அண்ணா நகரில் நடத்தி வருகிறார். அதன் பெயர் ‘தீர்க்கதரிசன மையம்’. முதலில் பத்து குடும்பங்களை சேர்த்துக் கொண்டு ஒரு ஜெப ஆலமாகத் தான் இந்த தீர்க்கதரிசன தொழிற்சாலை துவங்கப்பட்டது. காலப் போக்கில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் வின்சென்டின் கதைகளால் ஈர்க்கப்பட்டு வரத் துவங்கியுள்ளனர். காசும் குவியத் துவங்கியுள்ளது.

வாயில் வந்ததையெல்லாம் உளற ஒரு மேடை; அந்த உளறல்களைக் கேட்க ஒரு கூட்டம்; கேட்டு விட்டு கை நிறைய காசு கொடுக்க சில நூறு முட்டாள்கள் என்று ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார். கடந்த சில வருடங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துள்ளார். போதுமான அளவுக்கு நண்டு கொழுத்து விட்ட பின் ஊர்மேயத் துவங்கியிருக்கிறது.

சாது-சுந்தர்-செல்வராஜ்
சாது சுந்தர் செல்வராஜ்

அஸ்தரோத்தின் (விபச்சாரம் தொடர்பாக பைபிளில் வரும் பாத்திரம்)  ஆவி என்பது விபச்சாரத்துக்குரியது என்றும், அதை அழிக்கும் வரலாற்றுக் கடமையை தேவன் தன்னிடம் தந்திருக்கிறார் என்றும், இதற்காகவே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக மாற்றி வருவதாகவும் நெருங்கியவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். அவசரப்பட்டு சிரித்து விடாதீர்கள் நண்பர்களே – காமெடியே இனிமேல் தான் ஆரம்பம். பெண்ணாக மாறி வரும் தனது உடலில் ஆண்டவர் கர்ப்பப் பையையும் உருவாக்கி வருவதாக அடித்து விட்டுள்ளார்.

பெண் குழந்தைகள் வைத்துள்ள விசுவாசிகளிடம் இந்தக் கதையைச் சொல்லி, அவர்கள் வீட்டிலிருந்து பெண் பிள்ளைகள் அணியும் துவைக்காத உடைகளை வாங்கியிருக்கிறார். அவற்றைத் தனிமையில் இருக்கும் போது அணிந்து கொண்டு அலைந்திருக்கிறார். பெண்களை மடியில் அமர வைத்துக் கொள்வது, மேலே கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். இந்தக் கூத்துக்களை ‘ஆண்டவராகிய யேசுக் கிருஸ்துவின் பெயரால்’ இராமநாதபுரம் விசுவாசிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பெண்களோடு பாலியல் ரீதியில் பொறுக்கித் தனமாக நடந்திருப்பதும், அதிலும் சின்னப் பிள்ளைகளிடமும் கூட அத்துமீறியிருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் துவங்கியிருக்கிறது. பல பெண்களிடம் தான் ஆணில்லை பெண் என்று சொல்லியே உறவு வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்த பத்து குடும்பங்கள் விலகத் துவங்கியிருக்கிறார்கள் – இதில் அவரது நெருக்கமான உறவினர்கள் குடும்பங்களும் அடக்கம். உச்சகட்டமாக, தேவ லீலைகளின் கவுச்சி நாத்தம் தாங்காமல் அவரது வளர்ப்பு மகனாக சொல்லப்படும் ஜாய்ஸ்டனே விலகியிருக்கிறார்.

விலகியவர்கள் வின்சென்டின் நெருங்கிய கூட்டாளிகளான சாது சுந்தர் செல்வராஜிடமும், மோகன் சி லாசரஸிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு மொள்ளமாரியின் இதயத்தை இன்னொரு மொள்ளமாரியால் தானே புரிந்து கொள்ள முடியும்? மோகன் சி லாசரஸ் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கியுள்ளார். மட்டுமின்றி, கடந்த சில வருடங்களாகவே இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் எழுந்து வந்த நிலையில், மோகன் சி லாசரஸ் இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாகவே வின்சென்டோடு கூட்டணி வைத்து கொண்டு தனது பங்குக்கு அம்புலிமாமாவின் சுவிசேஷத்தை ஏஞ்சல் டீ.வியில் அளிக்கத் துவங்கியிருக்கிறார்.

டி.ஜி.எஸ் தினகரின் சீடரான மோகன் சி லாசரஸ், தனது குருவைப் போலவே கூசாமல் கட்டுக்கதைகளைத் தொடர்ந்து சொல்லும் திறன் கொண்டவர். உதாரணமாக, சமீபத்தில் அவர் விருதுநகரில் நடத்திய ஜெபக் கூட்டமொன்றில் “பெட்ரோல் விலை உயர்கிறது, அரிசி விலை உயர்கிறது, பருப்பு விலை உயர்கிறது; இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் பலனைத் தாருங்கள் ஆண்டவரே” என்று மேடை போட்டு ‘ஜெபிக்கிறார்’ அதையும் அங்கே வந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிகள் எந்தக் கேள்வியுமின்றி கேட்டுக் கொண்டு மார்பில் அடித்து ஜெபிக்கிறார்கள்.  ஆனால், மோகனுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அவரிடம் சரியான ஊடகம் இல்லை.

தற்போது தனது நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார்’ கம்பெனியை விரிவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் மோகனுக்கு வின்சென்டிடம் இருக்கும் ஏஞ்சல் டி.வி ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு பிரதியுபகாரமாக வின்சென்டின் மேல் எழும் புகார்களை மறைக்க இவரும் அவருக்குத் துணை போயிருக்கிறார்.  இன்னொரு தீர்க்கதரிசியான சாது சுந்தர் செல்வராஜ் வின்சென்டின் நேரடிக் கூட்டாளி.

மோகன்-சி-லாசரஸ்
மோகன் சி லாசரஸ்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேன்சி ட்ரஸ் போட்டிக்கு வருவது போல் யேசு கிருஸ்துவைப் போல் வேடமிட்டு தோற்றமளிக்கும் சுந்தர், வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் ஜீன்ஸிலும் டீசர்ட்டிலும் தான் கலக்குவாராம். இப்படித்தான் நித்தியானந்தாவும் அமெரிக்காவில் அலைந்ததாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருக்கின்றனர். ஏஞ்சல் டி.வியில் காம்பயரிங் செய்ய வரும் பெண்கள் மேல் கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களில் துவங்கி முழு பொறுக்கித்தனங்களையும் செய்யக் கூடியவர் தான் சாது சுந்தர் செல்வராஜ். இதில், இவர் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் குடியுரிமை வைத்திருக்கும் சர்வதேச பிரசிங்கியார்.

வின்சென்டின் வளர்ப்பு மகன் ஜாய்ஸ்டன், வின்சென்டிடம் இருந்து விலகிய போது ஏஞ்சல் டி.வியில் தீர்க்கதரிசனம் உரைத்த சாது, ‘ 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தக்காளியைப் பிழிஞ்சா எப்படி சிதறி கிடக்குமோ அந்த மாதிரி நீ உடல் சிதறி செத்துப் போவாய்’ என்று ஆண்டவரின் ‘விருப்பத்தை’ பகிரங்கமான தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார். இன்றுவரை ஆண்டவரின் விருப்பத்தை மீறி நல்ல ஆரோக்கியமாக வாழும் ஜாய்ஸ்டன், மேற்படி விசயத்தையும் நக்கீரன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அம்பலமாக்கியுள்ளார்.

எல்லா பிக்பாக்கெட்டுகளும் சொல்லி வைத்தது போல ஒரே டெக்னிக்கை பயன்படுத்துவது சாமியார்கள் மடாதிபதிகள் உள்ளிட்ட எல்லா மத ஆன்மீக குருக்களுக்கும் பொருந்தும். ஏறக்குறைய நித்தியானந்தா பயன்படுத்திய அதே டெக்னிக்கைத் தான் வின்சென்ட் செல்வக்குமாரும் பயன்படுத்தியிருக்கிறார். நித்தியின் ஆன்மீக செக்ஸ் காண்டிராக்ட் ஷரத்துகளின் படி, செக்ஸின் மூலமும் ஆன்மீக உச்சத்தை அடைய முடியுமாம். இதற்காக நித்தியைக் கிருஷ்ணனாகவும் பக்தைகள் தங்களை ராதையாகவும் பாவித்துக் கொண்டு ஆன்மீக ஆராய்ச்சியில் மூழ்க வேண்டியிருக்குமாம்.

தனது விசுவாசி ராஜ்குமார் என்பவரின் மனைவியின் மேல் தீர்க்கதரிசன வரம் இறங்கியிருப்பதாக ஒரு ஜெபக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் வின்சென்ட். பின்னர் தனியே அந்தப் பெண்ணை அழைத்த வின்சென்ட், மேற்படி தீர்க்க தரிசன வரம் முழுமையடைய வேண்டுமானால் தன்னோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணோ எதிரே இருப்பது தேவ ஆட்டுக்குட்டியல்ல – ஓநாய் என்பதைப் புரிந்து கொண்டு அங்கேயிருந்து தப்பிச் சென்று தனது கணவர் ராஜ்குமாரிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராஜ்குமார் போலீசுக்குப் போயிருக்கிறார். சென்னையின் பாரம்பரிய பார்ப்பனக் குடும்பத்து பெண்ணான ஆர்த்தியும் இப்படித்தான் நித்தியானந்தாவிடம் ஏமாந்திருக்கிறார்.

அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தனியே சொல்ல வேண்டுமா நண்பர்களே? நீங்கள் நினைத்த அதே தான். போலீசு வழக்கம் போல் காசு வாங்கிக் கொண்டு பஞ்சாயத்துப் பேசி ராஜ்குமாரை மிரட்டி விரட்டியடித்து விட்டது.

லோக்கல் ரவுடியாக இருந்தாலும் சரி – ஆன்மீகக் கேடியாக இருந்தாலும் சரி; முதலில் ஓடிவந்து கிரிமினல்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் காக்கி கும்பல் தானே!

இதில் நக்கீரனுக்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் ரெவ்ரன்ட் பாஸ்டர் சாம் ஜேசுதாஸ் சொன்னது தான் மொத்த கதையின் அவல நகைச்சுவை. வின்சென்டின் லீலா வினோதங்களை தாங்களும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன ஜேசுதாஸ், “எந்தக் கடவுளுமே நேரில் வந்து தண்டிக்காது, இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வின்சென்ட் செல்வக்குமாரை தண்டிக்க என் இயேசு தான் நக்கீரன் மூலம் வந்திருக்கிறார்” என்று சுவிசேஷம் அருளியிருக்கிறார். அந்தப்படிக்கு சங்கம் வளர்த்த மதுரையின் நக்கீரனார், இறையனாரை மட்டுமல்ல, ஏசு புரோக்கர்களையும் கேள்வி கேட்டவர் என்று இனி வரலாற்றில் பதிந்து கொள்ளலாம்.

சாம் ஜேசுதாஸின் வார்த்தைகளை விட சிறந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேறு எவராலும் கொடுத்து விடமுடியாது. இரண்டாயிரம் வருடங்களாக ‘ இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும் கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்.

இந்தக் கேடி கிரிமினல்களை இல்லாத ஆண்டவனால் ஒருநாளும் தண்டிக்க முடியாது. தங்கள் வாழ்வை நெருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இந்தக் கயவர்களை நாடும் மக்களின் லௌகீக அறியாமை விலகும் போது ஆன்மீக ஒளியின் பீஸ் பிடுங்கப்பட்டு விடும்.  நித்தியானந்தா துகிலுரிந்த போது மட்டும் கிருஷ்ணனா காப்பாற்ற ஓடிவந்தார்? மக்களிடம் அம்பலப்பட்டு அவர்களே காறித் துப்பிய பின் தானே ஆன்மீக பீடத்திலிருந்து ஒரு காமெடிப் பீஸாக கீழிறங்கியிருக்கிறார்.

மக்கள் தங்கள் மேல் மூடத்தனமான பக்தியும் முட்டாள்தனமான நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்பதும், தங்கள் வாயிலிருந்து வழியும் உளறல்களையெல்லாம் தத்துவங்களாகவும் தீர்க்கதரிசனங்களாகவும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நிலையும் தான் இந்த அயோக்கியர்களின் மூலதனம். அளவற்ற பணமும் அந்த பணம் தரும் அதிகார வர்க்க பரிச்சையமும், அந்த அதிகாரத் திமிர் தரும் மமதையும் தான் இவர்களை திமிரோடு தவறு செய்யத் தூண்டுகிறது.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது கொஞ்சமும் சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் பாஸ்டர்கள்  மேடை போட்டு குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்குகிறோம் என்று வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?

அப்படிச் செய்தால் அந்தச் செயலின் நியாயத்தை அந்திக் காலத்தில் தேவன் அங்கீகரிக்கிறாரோ இல்லையோ உங்கள் குடும்பத்தின் பெண் பிள்ளைகளாவது அங்கீகரிப்பார்கள்.







No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா