Monday, December 7, 2020

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலை ஆக்கிரமித்த முஸ்லிம் அராஜகமும், விரட்டியல் ராபர்ட் க்ளைவ்

காஞ்சி மடத்தை அடுத்துள்ள இந்த மண்டபத்திற்கு பரமானந்த மண்டபம் என்று பெயர். கச்சியேகம்பத்தின் வாஹன மண்டபம். Sankara Narayanan G

காஞ்சியின் மூன்று முக்தி மண்டபங்களுள் ஒன்று. அழகிய கொடுங்கை, நாஸிக்கூடுகள், காடத்தில் கின்னரர் தலைகள் கீழே விஜயநகரத்தின் சின்னங்கள், பூதங்கள் இவையெல்லாம் இவற்றில் உண்டு.

மசூதியில் ஏன் இவை.

1751-இல் சந்தா ஸாஹிப்புடன் ராபர்ட் கிளைவிற்குக் காஞ்சியைக் கைப்பற்ற பெரும்போர் நிகழ்ந்தது. இஸ்லாமியப் படைகள் கச்சியேகம்பத்தை ஆக்ரமித்துத் தற்காலிகக் கோட்டையாக மாற்றிக் கொண்டன. கோயில் பொலிவிழந்தது. ரஹஸ்ய வழியில் சிவாசார்யர்கள் இறைவனுக்கு திருவமிர்து முட்டாமல் செய்து வந்தனர் என்பது செவிவழிச்செய்தி.

கோயிலைக் கோட்டையாக்கிக் கொண்ட இஸ்லாமியருக்குத் தொழுகை வேண்டி விஜயநகர மன்னர்களால் கட்டப்பெற்ற இந்த மண்டபத்தை மசூதியாக்கிக் கொண்டனர். ராபர்ட் கிளைவ் வரதர் கோயிலில் நிலைப்படையை நிறுத்தினான்.
சென்னையிலிருந்து அதிகப் படை வந்ததும் தாக்குதலை முன்னெடுத்தான் கச்சியேகம்பச் சுற்றுச் சுவர் குலைந்தது. முகமதியபடைகள் வெளியேறின. பாலாற்றங்கரையில் நிகழ்ந்த போரில் ராபர்ட் கிளைவ் வாகை சூடினான்.
அதன் நினைவாக வரதராஜருக்கு மகரகண்டிகை சார்த்தினான். கச்சியேகம்பம்தான் இருந்த மண்டபத்தையும் இழந்து நிற்கிறது. சுவரில் தெரியும் கல்வெட்டுத் துண்டும் இதுவரை வெளியாகவுமில்லை.
மண்டபத்துத் தூண்களில் மஹாகாளியும் வீரபத்ரரும் ஒருவரையொருவர் பார்த்து புரியும் புன்முறுவல் மட்டும் மங்கவேயில்லை.
https://www.facebook.com/sankaran.ganapathy.3/posts/10155465154407499?__cft__[0]=AZVo_mKPUY10mAs66Nik3qfit5EkCFJG_gzvKSK-ESZePq2n7m2QwwVk8c4yCMIk1BGNW7ad-6sitDB1EAscipErn7Gz3avaJG96cviLL1v8d0ttxc1FHcABrR-I-Qan-JA&__tn__=%2CO%2CP-R

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...