Friday, December 11, 2020

கிறிஸ்துவ மிஷநரி பாதிரிகள் பரங்கியர்(பால்வினை தோல் வியாதி) அழைக்கப் பட்டது ஏன்?

பரங்கியர் எனப் பாதிரி அழைக்கப் பட்டது ஏன் 

 

கிறிஸ்துவ மிஷநரி பாதிரிகள் இந்தியா போன்ற வெப்ப நட்டிற்கு வந்த பின்னும் பன்றி, மாட்டுக் கறி மற்றும் உடல் தேவைக்கு கிடைத்த பெண்ணோடு வன்புணர்ச்சி பலரும் செய்திட பல பால்வினை தோல் வியாதிகள் பெற்றனர்

syphilis -கிரந்தி, மேகப்புண், வெட்டை நோய், பறங்கி வியாதி, இலிங்கவிரணம்

 A contagious venereal disease transmitted primarily by sexual contact and rarely by contact with an open wound or transmission of infected blood or plasma. Untreated, the disease causes lesions in subcutaneous tissue and internal organs and degeneration of the nerves, often causing blindness and psychosis. Treatment with penicillin has been effective in the early stages.

மேக நோய் / சிபிலிஸ் என்னும் நோய் பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்ற Treponema Pallidum எனும் சுருளி வடிவம் கொண்ட அசையும் ஆற்றலுடைய பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இந்த நோயானது பாலியல் நோயுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் கடத்தப்படுகிறது. பெண்ணுறுப்பு அல்லது ஆணுறுப்பின் மெல்லிய தோலினூடே இரத்தத்தில் நுழையும் நோயணுக்கள் இரத்தத்தின் வழியாகவும், லிம்ப் சிஸ்டத்தின் வழியாகவும் உடலெங்கும் பரவுகிறது. இரத்தக் குழாய்களே முக்கியமாக நோயின் பாதிப்புக்கு ஆட்படுகின்றன. இவ்வகைப் பாதிப்புள்ள நோயாளியுடன் உறவு கொண்ட ஒரு சில நாட்களில் இதன் அறிகுறிகள் தெரியவரும். சில நேரங்களில் கருவில் உள்ள சிசு பிறக்கும் போது குழந்தைக்குத் தாயிடம் இருந்து தொற்றடைந்த குருதியினாலும் தொற்றலாம். அதைப் பிறவி சிபிலிஸ் என்பர். மேகநோய் ஏற்படும் காலத்தையும், ஏற்படுத்தும் தாக்கத்தையும் கொண்டு, அதை முதன்மையான மேகநோய் (Primary Syphillis), துணையான (Second ary Syphillis) மற்றும் மூன்றாவது மேகநோய் (Tertiary Syphilis) என வகைப்படுத்தலாம். இதனுடைய அறிகுறிகள், சாதாரணத் தோல் வியாதியைப் போல காணப்பட்டு, பிறகு மறைந்து விடும். அதனால் இது பெரும்பாலும் அலட்சியப் படுத்தபடுகிறது. முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், சுமார் 30 ஆண்டு காலம், பல அறிகுறிகளை ஏற்படுத்தி, மறைந்திருந்து, உடல் உள் உறுப்புகளைத் தாக்கிய வண்ணம் இருக்கும். முற்றிய நிலையில் மரணம் நிச்சயம். ஆரம்ப கட்டங்களில் இதற்கு மருந்துகள் உண்டு.


ஐரோப்பிய நாடுகளுக்குப்போன தமிழ் வைத்தியம் !

அண்ணாமலைசுகுமாரன் 

ஐரோப்பியரை பறங்கியர் என்று பண்டைத்தமிழர் அழைத்தனர் . அதுகூட ஐரோப்பியர்கள்பறங்கி  போல வெண்மையாக இருப்பதால் என்று நினைத்து வந்தேன் .

அண்மையில் ஒரு ஆய்வுக்கட்டுரை 17-18 நூற்றாண்டின் காலனிய ஆட்சியில் தமிழ் மருத்துவம் பற்றிப்படித்தேன் .

ஐரோப்பியர்கள் அநேகர் சிபிலிஸ் போன்ற பால்வினைநோயால் பாதிக்கப் பட்டிருந்தால்மேக  நோய் ,கிரந்தி நோய் அதிகம் பாதித்து  இருந்ததால் அவர்களை தொல் தமிழர்கள் பறங்கியர் என்று அழைத்திருக்கிறார்கள்

1711- 1791 வரை வாழ்ந்த ஜெகன் பிலிப் பாபிரிக்ஸ் என்பவர் எழுதிய அந்தநாளில் புகழ்பெற்ற தமிழ் -ஆங்கில நிகண்டில் கூட பறங்கி  எனும் சொல்லுக்கு சிபிலிஸ்  என்று நேரடியாக்குறிப்பிட்டிருக்கிறார்

.சிபிலிஸ் நோய் பாதித்தவரை அப்போது பறங்கியர் என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது

அப்போது இத்தகைய நோய்களுக்கு உலகில் மருந்து இல்லாமல் இருந்தது .

டேனிஷ் காரர்கள் தரங்கம் பாடியை அடைந்தபோது அங்கிருந்த தமிழ் வைத்தியர்கள் மிக எளிதில் இத்தகைய கொடிய நோய்களை ஒரு வாரத்தில் குணப்படுத்துவத்துக்காண்டு அதிசயித்தனர்

டேனிஷ்(Danish India) டென்மார்க்கின், (1814 வரை டென்மார்க்-நார்வே) முன்னாள் இந்தியக் குடியேற்றங்களைக் குறிப்பதாகும்.

இவை  தமிழ்நாட்டிலிலுள்ள தரங்கம்பாடி (Tranquebar), தற்போதைய மேற்கு வங்காளத்தின் செராம்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் மைய ஆட்சிப்பகுதியில் உள்ள நிக்கோபார் தீவுகள்  மொரேஷியஸ்  உள்ளிட்டவையாகும்.

தரங்கம்பாடிஇந்தியாவின் டேனிஷ் குடியேற்றபகுதிகளை 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரை செயலில் இருந்த க் டேனிஷ்கிழக்கிந்தியக் கம்பனி நிறுவியது.

இந்தக் குடியேற்றங்களின் தலைநகராக 1620 இல் கோரமண்டல் கடற்கரையில் உள்ள தரங்கம்பாடியில் கட்டப்பட்ட  டான்சுபோர்கு கோட்டை விளங்கியது.

 

அவர்களுடைய அலுவலகக்குறிப்புகளிலேயே அவர்களின் குடியேற்றமான தரங்கம்பாடி (Tranquebar),  மேற்கு வங்காளத்தின் செராம்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் மைய ஆட்சிப்பகுதியில் உள்ள நிக்கோபார் தீவுகள் மொரேஷியஸ்ஆகிய இடங்களில்அவர்களுடைய மக்களிடையே  சிபிலிஸ்  எனும் பால்வினை நோய் அதிகம் இருந்ததாகக் கவலை த்தெரிவித்திருக்கிறார்கள் .

சிபிலிஸ் எனும் பால்வினை நோய் 17,18,19,20 ஆம் நூற்றாண்டின் முற் பகுதிவரை  மக்களை அச்சுறுத்திவந்த ஒரு கொடிய நோய் பென்சிலின் கண்டுபிடிக்கும் வரை அதற்க்கு மருந்து  இல்லாமல் இருந்தது .அப்போது கைகொடுத்தது தமிழகத்தின் தரங்கம் பாடியில் இருந்த தமிழ் மருத்துவர்கள் ஆகும்   .

அதன் தொடர்தான் ஏய்ட்ஸ் என்று கருதப்படுகிறது .

ஆனால் தமிழ் நாட்டின் தரங்கம் பாடியில் இருந்த தமிழ் வைத்தியர்கள் இந்தக்கொடிய நோயை 7 நாட்களில் சில மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தியதை தங்கள் அரசு அலுவலகக்குறிப்பில்  பதிவு செய்திருக்கிறார்கள் .

இந்த நோயின் தீர்வை தமிழ் மருத்துவர்களிடம் இருந்து அறிந்துகொள்ள பல நாட்டு ஐரோப்பிய வைத்தியர்கள் தரங்கம் பாடி வந்திருக்கின்றனர் .அவர்களின் பெயர்கள் வருகைபுரிந்த ஆண்டுகள் இவை அத்தனையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

அவர்கள் இனம் கண்ட மூலிகைகள் 20,000 மேல் இருக்கும் ,கொண்டுபோன ஓலைச் சுவடிகளுக்கு கணக்கு இல்லை அத்தனை அதிகம் .

தரங்கம் பாடி தமிழ் மருத்துவர்கள் இந்த கொடிய பால்வினை நோயை மிக எளிதில்

பாதரசம் எனும் பொருளை பயன்படுத்திக்குணமாக்கி யிருக்கிறார்கள் . ஆனால் பாதரசம் இந்தியாவில் கிடைப்பதிலை  .

இத்தகைய மருந்தோ பல நூறு ஆண்டுகளாக வழக்கில் உள்ளதாக தமிழ் வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள் .ஆனால் தமிழ் மருத்துவர்கள் ரசம் எனும் பாசண வகைகளை  நெடுங்காலமாக சீன  நாடுகளில் இருந்து பெற்றிருக்கிறார்கள் .

மேலும் இதர கொடிய நவபாஷாணம் எனும் வீரம் பூரம் போன்றவற்றையும் சீனாவில் இருந்து பெற்று அவைகளை  மருந்தாக மாற்றி மக்கள் பயனடைய செய்திருக்கிறார்கள் .

ஐரோப்பிய வணிகர்கள் தங்கள் நாடுகளில் இருந்து கொண்டுவந்த பாதரசங்களை தமிழ் நாட்டு வைத்தியர்களுக்குக்கொடுத்து ,அவர்களிடம் இருந்து மருந்துகள் ,மூலிகை ரகசியங்கள் , அடங்கிய ஏராளமான ஓலைச் சுவடிகளை பெற்று தங்கள் நாடுகளுக்கு எடுத்து சென்றதாக அவர்களே குறிப்பு  எழுதி வைத்திருக்கிறார்கள்

.இவை களைப்பற்றி  ஒரு நெடிய நூல் கூட எழுதும் அளவிற்கு  அவர்களது  குறிப்பிலிருந்தே செய்திகள் கிடைக்கிறது

பார்வை

Subba Reddy D.S.V., 'Dutch Writings of 16th Century on Indian Drugs', in Bulletin of the Institute of History of Medicine, Vol. I, No.3, Hyderabad, October 197 1, pp 135- 140.

Subba Reddy, D.S.V, 'A Forgotten Chapter in the History of Syphil is in India in 16th Century' in Journal- Bulletin of the Institute of History of Medicine, Vol. ll, No.2, Hyderabad, April 1972, pp.94-97.

28 Julius Jolly, Indian Medicine, New Delhi, 1977, pp. l28-1 29



No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா