Friday, December 25, 2020

சிஎஸ்ஐ சர்ச் -மதுரை அமெரிக்கன் கல்லூரி ஊழல், போதை மருந்து விற்பனை, பாலியல் தொல்லைகள் தொடர்கின்றன

சிஎஸ்ஐ சர்ச் கீழ் வரும் மதுரை அமெரிக்கன் கல்லூரி பற்றி வரும் செய்திகள், கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் வரும் பெண்கள் குழந்தைகள், கற்பழிப்பு செய்தல் போலே இந்த மதுரை கல்லூரியிலும் நடக்கிறது எனத் தெரிகிறது




பள்ளியில் தொடர் பாலியல் தொல்லை: தற்கொலை முயற்சி செய்த பத்தாம் வகுப்பு மாணவன்- அலுவலக உதவியாளர் கைது



பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவனை அந்தப் பள்ளியின் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றக்கூடிய ஆசீர் சுதாகர்ராஜ் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் அலுவலக அறையில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சல் ஏற்பட்டு பள்ளிக்குச் செல்லாத அந்த சிறுவனை அவனது தாயார் பள்ளிக்கு போகச் சொல்லியும், ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதற்கான காரணத்தை கூறும் படியும் வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுவன் அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அவரது தாயார் மதுரை கே.புதூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தனது மகனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த ஆசீர் சுதாகரன் என்பவர் மீது சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

No comments:

Post a Comment

JAPAN JUST KILLED THE GLOBAL MONEY(America) PRINTER AND NOBODY NOTICED

  JAPAN JUST KILLED THE GLOBAL MONEY PRINTER AND NOBODY NOTICED https://substack.com/inbox/post/179099797?r=6p7b5o The most dangerous numbe...