Monday, March 13, 2023

தமிழ் மொழி தான் தெலுங்கு, கன்னட மொழிகளின் முன்னோடி டுபாக்கூர் மகுடேஸ்வரன்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நான் சில ஆண்டுகளுக்கு முன் மொழியியல் பற்றிய ஒரு குறுகிய பாடத்தை செய்தபோது, எங்களுக்கு கொடுக்கப்பட்ட தாள்களில் இதுவும் ஒன்று - இவை புத்தகங்கள்/தாள்கள் மட்டுமல்ல, திராவிடக் குடும்பத்தின் பல்வேறு அம்சங்களை நிலைநாட்டும் முக்கியமான குறிப்புப் பொருள்களின் தொகுப்பு. மொழிகளும் அவற்றுக்கிடையேயான உறவும். அவைகளின் நகல்கள் என்னிடம் இல்லை ஆனால் சில என்னிடம் உள்ளன.

மொழியியல் பற்றிய விவாதங்களில் இறங்க சில அடிப்படை நூல்கள் படித்திருக்க வேண்டும்.
குறிப்பு: நான் மொழியியல் வல்லுநர் அல்ல. மொழியியல் துறையில் எனக்கு முறையான பயிற்சி இல்லை. ஒரு மொழியில் பண்டிதராக உறுதியான புரிதல் எனக்கு போதாது. (எடுத்துக்காட்டாக தமிழ்ப் பண்டிதர், சமஸ்கிருதப் பண்டிதர்) is not enough to qualify. மொழியியல் ஒரு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் சில புத்தகங்கள் இங்கே உள்ளன:
1. மொழி, லியோனார்ட் ப்ளூம்பீல்ட், ஜார்ஜ் ஆலன் & அன்வின், 1933
2. பொது மொழியியல் படிப்பு, ஃபெர்டினாண்ட் டி சாஸ்சூர், தத்துவ நூலகம், நியூயார்க், 1959 (பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)
3. வரலாற்று மொழியியல், ஒரு அறிமுகம், லைல் கேம்ப்பெல், தி எம்ஐடி பிரஸ், 1999
4. மார்பியல்: வார்த்தைகளின் விளக்க பகுப்பாய்வு, யூஜின் நிடா, மிச்சிகன் பிரஸ் பல்கலைக்கழகம், 1949
இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் முழுமையான புரிதல் இருப்பதாக நான் கூறவில்லை, ஆனால் நான் அவற்றை குறைந்தபட்சம் வாசித்திருக்கிறேன். குறிப்பாக, லைல் கேம்ப்பெல் எழுதிய புத்தகம் வாசிப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த இடத்தில் நவீன புத்தகங்கள் இருக்கலாம்,
மகுடேசுவரனின் மொழி பற்றிய பதிவில் அவரது கூற்றிலும் பின்னூட்டம் இட்டோர் கூற்றிலும் ஏகப்பட்ட தவறுகள். அனைத்தும் மிகுந்த தன்னம்பிக்கையோடு கூறப்படும் கூற்றுகள். ஒருசிலவற்றைப் பார்ப்போம்.
1. தமிழிலிருந்து கிளைத்த ஒரு பெருமொழி தெலுங்கு.
2. தமிழும் சமஸ்கிருதமும் பல்வேறு விகிதங்களில் கலந்து உருவானவைதாம் தெலுங்கும் கன்னடமும்...
3. சமஸ்கிருதம் கலந்ததால் பிற தென்னிந்திய மொழிகள் வீணாகப்போய்விட்டன.
இன்றைய மொழியியல் புரிதலின்படி தெலுங்கு, கன்னடம் போன்றவை தமிழிலிருந்து கிளைத்தவை அல்ல. முந்து-திராவிடம் (Proto-Dravidian) எனும் கருதுகோளிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் கிளைத்தவையே தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்தும். மலையாளம் மட்டும்தான் தமிழிலிருந்து பிரிந்தது என்று சொல்லத்தக்கது. இவை அனைத்துமே ஒரே குடும்பத்திலிருந்து உருவானவை என்பதால், அடிப்படை வினைச்சொற்களுக்கு இக்குடும்ப மொழிகள் அனைத்திலும் பெரும்பாலும் ஒரே வேர்தான். பெயர்ச்சொல் மிகுதியும் அவ்வாறே, ஆனால் சமஸ்கிருதம் அல்லது பிற மொழிகளிலிருந்து உள்வாங்கப்பட்டவையாகவும் இருக்கலாம்.
ஒரே குடும்பம் என்பதைக் குறிப்பது சொற்பிறப்பியல் மட்டுமல்ல. சொல்லப்போனால் சொற்பிறப்பியலை வைத்து இந்த ஆராய்ச்சிகளைச் செய்வது பல நேரங்களில் குழப்பத்தையே ஏற்படுத்தும். மா.சோ.விக்டர் போன்ற அரைகுறையர்கள் "தமிழும் எபிரேயமும்" என்றெல்லாம் புத்தகம் எழுதி நம் உயிரை வாங்கிவிடுவார்கள். வாக்கிய அமைப்பும் இலக்கண அமைப்பும் மிக வலுவாக அமைந்து ஒரே குடும்ப மொழிகளைக் காட்டிக்கொடுத்துவிடும். கூடவே வேர்ச்சொல் ஆராய்ச்சி, மொழிக்குடும்பத்தின் தாயிடமிருந்து இம்மொழிகளுக்கு வேர்ச்சொற்கள் எப்படி வந்து மாற்றம் பெற்றிருக்கலாம் என்பதைக் காட்ட உதவும்.
தமிழகத்தில் மட்டும் திராவிட மொழிக்குடும்ப ஆராய்ச்சி, சில பொய்-அறிஞர்களின் தீவிர முயற்சியால் தடுமாறி, தரங்கெட்டுப் போய்விட்டது.
தெலுங்கர்கள் தம் மொழி சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்று சொல்வார்களேயானால், அதுவும் தவறே.
எல்லிஸ், கால்டுவெல் போன்றோர் தொடங்கி பர்ரோ, எமனோ வழியாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அவருடைய எண்ணற்ற மாணவர்கள் (சி.வி.சண்முகம் போன்றோர்), ஆந்திரத்தின் பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி, இன்னும் ஏகப்பட்டோரைச் சொல்லலாம்.

ஆனால் நம் தீயூழ், தேவநேயப் பாவாணர் வழிவந்தோர்தான் நமக்கு வாய்த்தவர்கள்.
இந்தியாவில் சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்று பரவியுள்ள கருத்தும் தவறே. செவ்வியல் சமஸ்கிருதம் என்பதே பின்னர் தோன்றிய மொழி. முந்து-திராவிடம் போன்றே முந்து-இந்தோ-ஐரோப்பியம் என்றதொரு கருதுகோள்-மொழி, உலகின் பல்வேறு மொழிகளுக்குத் தாயாக இருந்திருப்பதாக மொழியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், பாரசீகம் ஆகிய மொழிகளுக்கு இடையிலான உறவை உணர்ந்தபின்னரே வில்லியம் ஜோன்ஸ் என்பார் மொழியியல் குறித்த ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டினார். இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தின் பல கிளைகளே இன்று இந்தியாவின் வடபகுதியில் பல்வேறு பெருமொழிகளாக விளங்குகின்றன.
அவரவர் தாய்மொழியை ஊன்றிப் படிப்பது, பிற மொழிகளை விருப்பமிருந்தால் கற்பது ஆகியவற்றுடன், மொழியியல் குறித்த அடிப்படைகளைப் புரிந்துகொள்வதும் நலம் பயக்கும். தாய்மொழிகளை மதிப்பதன் முதல்படி, தமிழ்த்தாய் வாழ்த்தின் தொடர்ச்சியாக வரும்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத்தே உதித்து ஒன்றுபல ஆகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே
போன்ற மொழியியலுக்குப் பொருந்தாத கூற்றுகளைத் தவிர்த்தல் நலம்.
இறுதியாக, முந்து-திராவிடம், முந்து-இந்தோ-ஐரோப்பியம் என்னும் மொழிகள் உண்மையிலேயே பேசப்பட்டுக்கொண்டிருந்த மொழிகளா என்ற கேள்வி. இவை கருதுகோள்களே. உயிரியலில் பரிணாமவியல் கொள்கைகளின்படி, எவ்வாறு உயிரினங்கள் கிளைத்துப் பரவின என்பதுகுறித்துப் படித்திருப்பீர்கள். அதேபோலத்தான் மொழியியல், மொழிகள் கிளைத்தலையும் காண்கிறது. நமக்குப் படிமங்களாகக் கிடைக்கும் உயிரினங்களைக் கொண்டு முந்து-வடிவ உயிரினம் ஒன்று இருப்பதை ஊகிப்பதுபோன்றே, முந்துமொழிகளையும் கருதுகோளாகவே முன்வைக்கிறார்கள். உயிரினங்களுக்காவது புதைபடிவங்கள் அவ்வப்போது கிடைக்கின்றன. மொழிகளுக்கு இவை கிடைப்பது எளிதல்ல.

நண்பர் Vijay Vanbakkam என் வலைத்தளத்தில் எழுதியது:
மொழியியலாளர்கள் பேச்சு மொழிக்குதான் அனாலிசிஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பேச்சு மொழியை பொருத்தவரை, தமிழின் மாற்ற விகிதம் மற்ற மொழிகளை விட குறைச்சலோ அதிகமோ இல்லை. தற்கால பேசுதமிழ் அருணகிரிநாதர்க்கோ, கம்பனுக்கோ, வள்ளுவர்க்கோ நிச்சயம் புரியாது. இது வட்டார வழக்கு மட்டுமில்லை. இலங்கைத்தமிழே பல இந்தியர்களை தடுமாற வைக்கிறது. இந்த பேச்சு மொழி மாற்றங்களை மறைக்கவோ உதாசீனப்படுத்தவோ எழுத்து மொழியை கட்டுப்படுத்த தமிழில் பலகாலமாகவே பலத்த பிரயத்னங்கள் நடக்கின்றன. தற்கால `தூயதமிழ்` பைத்தியக்காரத்தனமும் எழுத்தை கட்டுப்படுத்தும் முயற்சி. அதனால்தான் முதல் அகழாய்வு பானை ஓட்டில் கிடைக்கும் தமிழில் பிராக்கிருதமும் சரளமாக இருக்கின்றது. ஆனால் தொல்காப்பியத்தில் `தூயதமிழ்` வலுவாக திணிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பேச்சுத்தமிழ் அல்லாது `செய்யுள் வழக்கு`க்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறது, `உலக வழக்கு` தொல்காப்பியத்தில் முக்கியமில்லை. தமிழ் இலக்கணங்களும்(உதா- பவநந்தியின் நன்னூல்) , எழுத்துதமிழை கட்டுப்படுத்ததான் முயற்சிக்கிறன.
இந்த 2000 ஆண்டு எழுத்தை கட்டுப்படுத்தலின் அப்செஷனால் தமிழில் பிற மொழிகள் காணாத அளவு இருநிலை (டிக்ளோஸியா) உள்ளது, அதாவது எழுத்துக்கும் சொல்லுக்கும் உள்ள இடைவெளி. இன்னும் சொல்ல்ப்போனால் `தமிழ்` என்பது ஒரு மொழி அல்ல, அது ஒரு மொழிக்குடும்பம், பண்டைத்தமிழ், இடைக்காலத்தமிழ், நவீனத்தமிழ், பேச்சுத்தமிழ்கள்.
தமிழ் (https://en.wikipedia.org/wiki/Tamil_script) 12 உயிரெழுத்தும் 24 மெய்யெழுத்தும் அதிகாரபூர்வமாக (official) கொண்டது; இதை பேச்சிலும் பரவலாகவும் (சினிமா, ஊடகம், வணிகம்) பார்க்கலாம் .
ஆனால் சிலர் 6 கிரந்தஎழுத்துகளை தவிர்க்கிறனர்- இதிலேயும் சிலருக்கு தமிழில் ஶ இருப்பதே தெரியாது. சிலர் ஸ, ஷ, ஜ வை எரிச்சலோடு பார்க்கின்றனர்.
பலருக்கு ழ மறைந்துவிட்டது
ற,ர வித்தியாசம் 99% பேச்சில் மறைந்து விட்டது, அதே கதி ந,ன வுக்கு.
சிலருக்கு ஐ, ஔ இல்லை- அதனிடத்தில் அய், அவ் என்கிறனர். இந்த காம்பினேஷன்களை பார்க்கும்போது தமிழ் ஒரு மொழி அல்ல, மொழிக்குடும்பம் என விளங்கும்.
இந்த மொழிமாற்றங்களை `தடுக்க` அல்லது அதை மறைக்க `தூயதமிழர்` மூர்க்கத்தனமாக முயற்சிக்கின்றனர்.
இந்த கலாசாரக்குழப்பதின் விளைவு என்ன ? ஒரு பக்கம் `தூயதமிழ்` , `செந்தமிழ்` `தாய்த்தமிழ்` அரசியல் (திராவிட, இதர) இயக்கங்களால் ஒரு இலட்சியமாக தூக்கிப்பிடிக்கப்படிகிறது, அதே சமயம் சாத்தியமற்ற மொழித்திணிப்பினால், மக்கள் சுலபமாக ஆங்கிலத்திற்கு தாவி விடுகின்றனர். சமீப ஆய்வின் படி தமிழ் பள்ளிமாணவர்கள் மற்ற இந்திய மாணவர்களைவிட குறைவாக தாய்மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் என தெரியவருகின்றது
`தமிழ்` மற்ற தென்னிந்திய மொழிகளை விட தொன்மையானது அல்ல. சரித்திரைப்பார்வை இல்லாமல், பேசுமொழிகளை பார்க்கமல் எல்லாவற்றையும் `தமிழ்` என்ற போர்வையில் திணிப்பதால் `தொன்மை` என்ற மாயையை கொடுக்கிறது.
ஆங்கில மொழி பெயர்ப்பு:
Linguists take spoken language as the starting point for analysis. The rate of change in spoken Tamil is no different than in other languages. Today's Tamil may not be comprehensible to Arunagirinathar or Kamban or Valluvar. This is not just a matter of regional dialects. Even Jaffna Tamil stumps Indian Tamils. To suppress or sideline language changes, there have been strong efforts to control the written language in Tamil. Today’s “Pure Tamil” lunacy is also an effort to control written Tamil. Even from the earliest written records like scratches on pots, there is evidence of Prakrits. Tholkappiyam strives to impose a ‘pure Tamil’.Thol generally gives importance for writing poetry (செய்யுள் வழக்கு`) rather than speech (`உலக வழக்கு`). Other Tamil grammars like Bhavanandi’s Nannul strive to control written Tamil.
Due to this 2000-year-old obsession with controlling written language, there is a large diglossia unseen in other languages. With Old Tamil, Medieval Tamil, Modern Tamil, written and spoken varieties, Tamil is veritably a language group, not a language. Officially, there are 12 vowels, and 24 consonants (https://en.wikipedia.org/wiki/Tamil_script), this can be seen in general usage-commerce, cinema, and media. Some letters have been introduced to take care Perso-Arabic phones also. But for some 6 Grantham letters are a no-go as a matter of policy, not out of spontaneity. Some don’t know the existence of the letter ஶ in Tamil. Some are incensed at reading ஸ, ஷ, ஜ . Many Tamils don’t have ழ in their mother tongue. ற,ர difference has disappeared for 99% of people; the same is the case with ந,ன. Some don’t have the vowels ஐ, ஔ and they think அய், அவ் serve the same purpose. When you see these combinations, you can realize ‘Tamil’ is a wrapper term, a language group, not a language.
To stop these language changes, “Pure Tamil” enthusiasts break their heads on the brick wall of usage and changes in usage.
What is the result of this cultural confusion? On the one hand, Pure Tamil, Senthamiz, or Mother Tamil (mother of all languages) is held as an ideal by Dravida and other social/political movements. OTOH, due to impossible demands, people easily switch to English. English is the easiest escape route from the immense cognitive dissonance of impossible and contradictory ideals of Pure Tamil and everyday demands. A recent assessment showed Tamil school children showed less proficiency in their mother tongue compared to other parts of India.
Tamil is no more antique than other south Indian languages. Not only language, but even the script has also changed over centuries. With an ahistorical outlook, ignoring spoken language, looking at Tamil as only written language, and subsuming everything under the blanket term ‘Tamil’ give rise to an illusion of ‘antiquity’.
இவை நிச்சயம் விவாதத்திற்கு உரியவை.

A few thoughts and disagreements:
1. Prof Jean-Luc Chevilliard suggests not just diglossia, but triglossia in case of Tamil. https://t.co/47Ecwh9SNj
2. It is not fair to say that Tolkappiyan and Pavanandi imposed their Grammars on us. Experts have argued that Tolkappiyan especially is very careful in saying 'so say experts' and 'such is the speech of the learned' clearly indicating that he is describing what goes for correct Tamil in his time. In other words, the ancient grammars are demonstrably descriptive, and not prescriptive. That we today have decided to peg our current Tamil on his grammar instead of using it as a tool to understand the poetry of his times is entirely our fault, not his.
3. It has often been suggested that the use of a Standard Tamil register as a medium of instruction inhibits easy comprehension in young children and that is the reason for the recent abysmal rankings that TN finds itself in in the mother tongue comprehension study. While not completely opposed to some revision of the Standard Tamil register to keep up with the times of today, I do not think the results of that study are caused by the Tamil register itself. I say this because study after study (ASER etc) has found that the learning outcomes in other subjects too are at the bottom in TN. This points to, in my opinion, the way in which schools are administered rather than the anything else. Pointing to second order reasons like the Tamil that is taught in schools would divert focus from TN government doing some hardcore school reform (like linking teacher promotions to learning outcomes of their students maybe?).
Otherwise, I agree that spoken Tamil needs more attention from academia in terms of better documentation and analysis.

Varun Subramanian
I wouldn't say rate of change of spoken tamil is comparable to other languages. It is definitely comparable to other south indian languages , without a doubt, but overall tamil as a language is more conservative in change compared to english which is considered an innovative language. And one must not forget that standard tamil ( derived from illakiya tamil) is also slowly destroying regional dialects by making the standard register as norm.

 

No comments:

Post a Comment