தொடக்கப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் Joshua By Joshua Sep 09, 2024, 21:09 IST
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பம்மது குளம் அரசினர் உதவி தொடக்கப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். நெல் அரிசி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள், நாடோடிகள் எனப்படும் சாட்டை அடிப்பவர்களின் குழந்தைகள், காட்டு நாயக்கன் கோட்டை பகுதியில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள், சென்னையிலிருந்து புலம் பெயர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் என 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அந்த பள்ளியில் கல்வி கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளியில் மாணவர்கள் குறைந்ததை அடுத்து 566 மாணவர்கள் பள்ளியில் பயின்று வருவதாக கூறிய நிலையில் வெறும் 219 மாணவர்களே பயின்று வருகின்றனர். இதில் கூடுதலாக 167 மாணவர்களுக்கு பள்ளியில் பயில்வதாக கூறி அட்டனன்ஸ் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை லதா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து கண்காணிக்காத வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மேரி ஜோசப் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் செங்குன்றம் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கையை போலியாக கணக்கு காட்டிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்! - govt sch headmaster suspended
Published : Sep 9, 2024, 7:33 PM IST
https://www.etvbharat.com/ta/!state/govt-school-headmaster-and-educational-officer-suspended-regard-fake-teachers-count-tamil-nadu-news-tns24090904819
Fake Teachers Count: ஆசிரியர்களின் எண்ணிக்கையை தக்க வைத்து கொள்வதற்காக, போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காண்பித்த பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் வட்டாரக் கல்வி அலவலரை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், பம்மதுகுளம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகை பதிவேட்டின்படி, 556 மாணவர்கள். அதில், 432 மாணவர்கள் வருகை புரிந்துள்ளதாக வருகைப் பதிவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வின்போது, 266 மாணவர்கள் மட்டுமே அன்று வருகை புரிந்துள்ளனர். வருகை பதிவேட்டைவிட மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, ஆசிரியர்களின் எண்ணிக்கையை தக்க வைத்து கொள்வதற்காக, போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், EMIS-ல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில் 16 ஆசிரியர் இருந்ததாக கூறப்படுகிறது. 8 ஆசிரியர்கள் கூடுதலாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு அதிகப்படியான நிதி இழப்பு ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் நரேஷ் அதிரடியாக பொன்னேரி வட்டாரக் கல்வி அலவலர், பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பின்னர் இவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போலி கணக்கு காண்பிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செப் 6ம் தேதி தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் நரேஷ் பொன்னேரி வட்டாரக் கல்வி அலவலர் மேரி ஜேஷ்பின், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பம்மதுகுளம், தலைமை ஆசிரியை லதா ஆகியோரை அதிகாரப்பூர்வமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள பள்ளிகள் ஆய்வுகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
https://www.dinakaran.com/students_fake_account_school_head_official_suspended/
அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக போலி கணக்கு பள்ளி தலைமை ஆசிரியை கல்வி அதிகாரி சஸ்பெண்ட்: தொடக்க கல்வி இயக்குநர் நடவடிக்கை
சென்னை: ஆசிரியர்களை பள்ளியில் தக்க வைத்துக் கொள்வதற்காக போலி மாணவர்களை வருகை பதிவேட்டில் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார கல்வி அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியரையும் தொடக்க கல்வி இயக்குநர் சஸ்பெண்ட் செய்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வில்லிவாக்கம் வட்டார கல்வி அதிகாரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை இருவரும் தொடக்க கல்வித்துறையின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகையில் முறைகேடு செய்த காரணத்தால் துறைக்கு அதிக செலவினம் ஏற்பட்டதாக தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தில் அடங்கிய, வில்லிவாக்கம் ஒன்றியத்தில் உள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 566 மாணவ மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் தினசரி 432 பேர் பள்ளிக்கு வருவதாகவும் தொடக்க கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த பள்ளிக்கு தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வருகைப் பதிவில் 219 மாணவ மாணவியர் மட்டுமே அன்று வருகை புரிந்துள்ளனர். பின்னர் அதுகுறித்து நடத்திய விசாரணையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக கூடுதலாக போலி பெயர்களில் மாணவர்களை எண்ணிக்கையையும் பெயர்களையும் பதிவு செய்துள்ளது தெரியவந்தது. போலியாக அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு கணக்கு காட்டியதன் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை அந்த பள்ளியில் நியமிக்க வேண்டியதாயிற்று.
இதன் மூலம் அதிகப்படியான நிதி இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொன்னேரி கல்வி மாவட்டம், வில்லிவாக்கம் வட்டார கல்வி அதிகாரி ஜெ. மேரிஜோசபின், மற்றும் பம்மது குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.லதா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மறு உத்தரவு வரும் வரையிலோ அல்லது அனுமதி இன்றியோ மாவட்டத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment