Monday, September 9, 2024

தேவ குமாரன் அப்பல்லோ குய்போலே என்ற பிலிப்பைன்ஸ் பாதிரி சிறுமி & பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்கார வழக்கில் கைது

மணிலா, சிறுமியர் மற்றும் இளம் பெண்களை கடத்தியது, பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட பல குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்த பாதிரியாரை, பிலிப்பைன்சைச் சேர்ந்த, 2,000 போலீசார், இரண்டு வார தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் டாவோ நகரைச் சேர்ந்தவர் பாதிரியார் அப்பல்லோ குய்போலே, 74. இவர் மீது, சிறுமியர் மற்றும் இளம் பெண்களை கடத்தியது, பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட பல வழக்குகள் உள்ளன.

டாவோ நகரில் மிக பிரமாண்ட சர்ச், கல்வி நிறுவனங்கள், மைதானங்கள் உட்பட 74 ஏக்கர் நிலப்பரப்பில், தனி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார். தன் பாலியல் தேவைகளுக்காக சிறுமியர், இளம் பெண்களை கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது அதிக புகார்கள் உள்ளன.

சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்ய பிலிப்பைன்ஸ் போலீஸ் தயாரானது.

கைது

ஆனால், அவரது 74 ஏக்கர் சொத்துக்கள் அடங்கிய நிலத்தின் நுழைவுவாயிலை மூடிய அவருடைய ஆதரவாளர்கள், போலீஸ் உட்பட எவரும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இதைத் தொடர்ந்து, 2,000க்கும் மேற்பட்ட போலீசார், ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

'தெர்மல் இமேஜிங்' எனப்படும், உடல் வெப்பநிலையை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர்.

அதில், அந்த வளாகத்தில் உள்ள ஒரு சுரங்க அறைக்குள் அவர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து, அப்பல்லோ குய்போலேவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

முன்னாள் அதிபர் ரோட்ரிகோ துதேர்த்தேவின் நீண்ட கால நண்பரான குய்போலே, தன்னை, பிரபஞ்சத்தின் உரிமையாளர் என்றும், கடவுளால் நியமிக்கப்பட்ட மகன் என்றும் அழைத்துக் கொண்டார்.

இவர் மீது, பாலியல் தேவைக்காக 12 - 25 வயதுள்ள சிறுமியர், இளம் பெண்களை கடத்தியதாக அமெரிக்காவில் புகார் உள்ளது. மேலும், அந்த நாட்டின் உளவு அமைப்பான, எப்.பி.ஐ., அவரை தேடப்படும் நபராகவும் அறிவித்திருந்தது.

மறுப்பு

இதைத் தவிர, அதிகளவில் பணத்தை கடத்தியதாகவும் அமெரிக்காவில் அவர் மீது வழக்குகள் உள்ளன. தன் ஆதரவாளர்களை, சட்டவிரோத விசா வாயிலாக அமெரிக்காவுக்கு அனுப்பி, மத பிரசாரத்துக்காக நிதி திரட்டி, அதைக் கடத்தியதாக புகார்கள் உள்ளன.

மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வந்த குய்போலே, தனக்கு பணிவிடை செய்யவும், பாலியல் தேவைகளுக்காகவும், இளம் பெண்கள் அடங்கிய குழுவை அமைத்திருந்தார். அதில் இருந்து அவர் தேர்வு செய்யும் சிறுமியர், இளம் பெண்கள், அவருடைய பாலியல் தேவைகளை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் புகார்கள் உள்ளன.

ஆனால், இந்த அனைத்துக் குற்றங்களையும் பாதிரியார் குய்போலே மறுத்துள்ளார். இறை பணியிலேயே ஈடுபட்டதாக கூறி வருகிறார்.

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...