Friday, September 27, 2024

ஜான் மார்ஷல் சிந்துச் சமவெளி மண்டையோடுகளை திராவிட மண்டையோடுகள் or சுமேரியர்களுடையவை என்று சொல்வதோ சரியாக இருக்காது

  திராவிடக் கோமாளிகள் ஜான் மார்ஷல் என்ன சொல்கிறார் என்பதைப் படித்திருப்பார்களா என்பதே சந்தேகம். 



மார்ஷல் என்ன சொல்கிறார்?

1. ஆரியர் வருகைக்கு முன்னாலேயே சிந்துச் சமவெளியில் ஓர் உயரிய நாகரிகம் இருந்தது.

2. இந்து மதம் அதன் பல அம்சங்களை – வேதங்களில் சொல்லப்படாத அம்சங்களை - தனதாக்கிக் கொண்டது.

3. உயரிய தத்துவச் சிந்தனைகளும் கலாச்சாரமும் ஆரியர் வருகைக்கு முன்னால் இருந்த நாகரிகத்திற்கு இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. 

4. இன்றைய ஆதி வாசிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் வாரிசுகள் என்று சொல்வது சரியாக இருக்காது.  அவர்கள்  அந்நாகரிகத்தின் சில பண்படாத அம்சங்களை கொண்டிருக்கலாம். ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தின் மதம்/கலாச்சாரம் மிகவும் பண்பான பல அம்சங்களைக் கொண்டது. அவர்கள் கட்டிடங்களுக்கும் இவர்கள் குடிசைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

அந்தக் காலமுறைப்படி மண்டையோடுகளை ஆராய்ந்த மார்ஷல் அந்நாகரிகத்தின் மக்கள் பல இனங்களைச் சார்ந்தவர்கள்  என்கிறார். முக்கியமான ஒன்றையும் சொல்கிறார். “இப்போது இருக்கும் திராவிடர்கள் கருப்பானவர்கள் குட்டையானவர்கள், சுருட்டை முடி கொண்டவர்கள். இவர்கள் ஐயாயிரம் ஆண்டுகள் முன்னால் இருந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்வது அபத்தமானது.”  திராவிடர்கள் வெளியிலிருந்து வந்திருந்தால் அவர்கள் ப்ரோடோ ஆஸ்ட்ரலாயிட் மக்களோடு கலந்திருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிலேயே இருந்திருந்தால், அவர்கள் மூதாதையர்கள் ப்ரோடோ ஆஸ்ட்ரலாயிட் மக்களாக இருந்திருக்க வேண்டும். வெளியிலிருந்து வந்தவர்களோடு கலந்திருக்க வேண்டும் என்கிறார்.

எப்படி இருந்தாலும் மண்டையோடுகளை திராவிட மண்டையோடுகள் என்று சொல்வதோ அல்லது சுமேரியர்களுடையவை என்று சொல்வதோ சரியாக இருக்காது என்கிறார்.

ஜான் மார்ஷல் இன்றைய "திராவிடர்"களைப் பற்றி என்ன சொன்னார்?
"குட்டையாக இருப்பார்கள். நிறம் மிகவும் கறுப்பு, ஏறத்தாழ கறுப்பர்களைப் போன்ற கறுப்பு. மயிர் அதிகம். சமயங்களில் சுருட்டை. கறுப்புக் கணகள். நீளமான முகம். சப்பை மூக்கு. இவர்களோடு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திராவிட இனத்தை ஒப்பிடுவது அபத்தம்."
இது அப்பட்டமான இனவெறிப் பதிவீடு.
மார்ஷல் அன்றைய ஆங்கிலேயரைப் போலப் பேசியிருக்கிறார். ஆனால் திராவிடக் கும்பலுக்கு ஆங்கிலேயர் என்ன சொன்னாலும் அது வள்ளுவர் சொன்னது போல.

"கணவன் - மனைவி வாழ்க்கை என்பதே பார்ப்பான் வருவதற்கு முன் இங்கு கிடையாது. எந்தச் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் கிடையாது. எவராலும் இதில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டவும் முடியாது.
"ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கூடி வாழ்ந்தார்களே தவிர, கணவன் - மனைவி என்ற முறையில் அல்ல! இதற்குச் சரியான சான்று கிடையாது! தமிழனுக்குச் சரித்திரமே கிடையாது! நமக்குள்ள இலக்கியங்களெல்லாம் பார்ப்பான் வந்ததற்குப் பிறகு 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றின. இவைகள் யாவும் பார்ப்பனர்களாலும், அவனது அடிமைகளாலுமே எழுதப்பட்டவை யாகும். "

No comments:

Post a Comment

திராவிட மாடல் தியாகன்கள் என்றால் - ஸ்டாலின் விளக்கம்

 திராவிட மாடல் தியாகன்கள் என்றால் - ஸ்டாலின் விளக்கம் செந்தில் பாலாஜி மீது ஆள்கடத்தல், நிலஅபகரிப்பு புகார்கள் கூறியது உண்மையா இல்லையா? பேருந...