Tuesday, September 3, 2024

பாதிரியார்.. போதை மாத்திரை விற்பனையாளர்.. மனைவியை கொன்று நாடகம்.. தட்டி தூக்கிய போலீஸ்..

 இன்னுமொரு #பலான_பாதிரி

அட்வென்ட் கிறிஸ்துவ சபை பாதிரி. விமல்ராஜ் . போதை மாத்திரை விற்பனையாளர்.. மனைவியை கொன்று நாடகம்.. தட்டி தூக்கிய போலீஸ் 

பாதிரியார்.. போதை மாத்திரை விற்பனையாளர்.. மனைவியை கொன்று நாடகம்.. தட்டி தூக்கிய போலீஸ்.. https://tamil.abplive.com/crime/police-have-arrested-a-dramatized-priest-who-killed-his-wife-in-kelambakkam-area-of-chengalpattu-district-tnn-199125

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகளான வைஷாலி (33) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான விமல்ராஜ் (35) என்பவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர். இருவரும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள பொன்மார் பகுதியில் உள்ள மலைத் தெருவில் வசித்து வந்தனர்.

நாடகமாடிய கணவர்

விமல்ராஜ் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விமல்ராஜின் பெற்றோர் மேடவாக்கத்தை அடுத்துள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி மாலை ஒட்டியம் பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த விமல் ராஜ் தனது மனைவி வைஷாலி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவ மனைக்கு காரில் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும், அதனால் அவரது சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாகவும் கூறினார்.

கழுத்தில் இருந்த காயம்

இதை நம்பிய அவரது பெற்றோர் சடலத்தை வீட்டில் வைத்து வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மும்பையில் இருந்து மாலை ஒட்டியம்பாக்கத்திற்கு வந்த வைசாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால்குமார் ஆகியோர் வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவசர போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இத்தகவல் உடனடியாக தாழம்பூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 

கணவன் மனைவிக்கு இடையே தகராறு

தாழம்பூர் போலீஸ் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் கொடுத்த, அவரது தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தனக்கும் தனது மனைவிக்கும் திருமணம் ஆனதிலிருந்து தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் நேற்று முன்தினம் தகராறு முற்றியதில், அவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்ததாகவும் கொலையை மறைத்து உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியதாகவும் பாதிரியார் விமல்ராஜ் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு

இதையடுத்து போலீசார் அவரது ஒட்டியம்பாக்கம் வீட்டில் இருந்த வைஷாலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையே தனது மகள் கொலை வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும் அதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று வைஷாலியின் தாயார் மேரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

அம்பலமான கள்ளத்தொடர்பு

இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணை யில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மனைவியை கொலை செய்த பாதிரியார் விமல்ராஜ் பொன்மார் பகுதியில் வசித்து வந்த ஜெபஷீலா (30) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர் களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்ததும் தெரிய வந்தது. 

போதை மாத்திரைகள்

மேலும், தனது மாமியார் வீடு அமைந்துள்ள மும்பை பகுதியில் தங்கி இருந்தபோது அங்கிருந்த மெடிகல் ஷாப் ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. கூரியர் சர்வீஸ் மூலம் மொத்தமாக மாத்திரைகளை வாங்கி வந்து உள்ளூர் நபர்களுடன் இணைந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்தபோது வீட்டில் சுமார் 3000 மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளார். அப்போது பாதிரியாரின் மனைவி வைஷாலி இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

போலீசில் சொல்லி விடுவேன்...

பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வாங்கி வைத்திருப்பதாக பாதிரியார் விமல்ராஜ் கூறியதில் சந்தேகம் அடைந்த வைஷாலி தனது சகோதரர் மூலம் மும்பையில் விசாரித்துள்ளார். அப்போதுஅவை போதை மாத்திரைகள் என்றும் மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்காக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிய வந்தது. இதை போலீசில் சொல்லி விடுவேன் என்று வைஷாலி தனது கணவரிடம் கூறியதால் பயந்து போன பாதிரியார் விமல்ராஜ் இத்தகவலை தனது கள்ளக்காதலி ஜெபஷீலாவிடம் கூறி உள்ளார். 

கொலை நாடகம்

இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்து போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் (23), சந்திரசேகர் (19), அரவிந்த் (23), அஜய் (24), நங்கநல்லூரைச் சேர்ந்த மைக்கேல் (33), பொன்மார் மலைத்தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்கிற சங்கர் (44), ஆகியோர் உதவியுடன் பாதிரியார் மனைவை வைஷாலியை கொலை செய்து நாடகம் ஆடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து தாழம்பூர் போலீசார் புதிய வழக்குப் பதிவு செய்து பாதிரியாரின் கள்ளக்காதலி பொன்மார் மலைத் தெருவைச் சேர்ந்த ஜெபஷீலா (30) மற்றும் மேற்கண்ட 6 பேர் உள்ள 7 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஜெபஷீலாவின் வீட்டிலும், பாதிரியாரின் வீட்டிலும் இருந்து 3000 போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இவர்களில் கைது செய்யப்பட்ட தினேஷ் மீது 6 வழக்குகளும், அரவிந்த் மீது 6 வழக்குகளும், அஜய் மீது 20 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

பைபிள் எனும் கற்பனையை உருவாக்கியது யார்? - Kalavai Venkat-6; PGurus

  Who Created the Concept of the Bible? • The Truth about Christianity P6 • Kalavai Venkat Who actually created the Bible — and how did this...