Tuesday, September 10, 2024

இஸ்லாம் அரேபிய மதமான முஸ்லீம் உள்ளே ஜாதிகள் தீண்டாமை

 இஸ்லாம் அரேபிய மதமான முஸ்லீம் உள்ளே ஜாதிகள் தீண்டாமை  

கத்தி தீட்டும் மனிதர்கள்

https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/24605-.html


“சாண பிடிக்கிற தம்மா... சாண..! கத்திரி, கத்தி, அரிவாமனைக்குச் சாண பிடிக்கிறதம்மா சாண..!” சென்னைப் பெருநகரின் ஆரவார இரைச்சல்களையும் மீறி குடியிருப்புப் பகுதிகளில் ஒலிக்கும் அந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர்கள் யார், இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என நினைத்துப் பார்த்திருக்கிறோமா? நம்முடைய கத்தி, அரிவாமனைகளைச் சாணை பிடிப்பதுடன் வீட்டுக்குத் திரும்பிவிடுவோம்.

இவர்களில் பெரும்பாலானோர் சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரிச்சந்திராபுரம் என்னும் கிராமத்தில்தான் வாழ்ந்துவருகிறார்கள். அரசு பதிவேடுகளில் அரிச்சந்திராபுரம் என்று குறிக்கப்பட்டிருந்தாலும் ‘முஹம்மதுபுரம்’என்று அவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். இங்கிருக்கும் சுமார் 300 குடும்பங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் சாணை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். இதற்கு முன்னர் இவர்களின் மூதாதையர் திப்புசுல்தான் படையில் ஆயுதத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தாகச் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

சிறந்த உழைப்பாளிகள்

அதிகாலை 4 மணி அளவிலேயே விழித்துக்கொள்கிறது இந்தக் கிராமம். அங்கிருந்து மின்சார விளக்குகள் இல்லாத சாலையில் 2 கிலோ மீட்டர் நடந்து திருவாலங்காடு ரயில் நிலையத்தை அடைய வேண்டும். சிலர் கிட்டதட்ட 20 கிலோ எடையுள்ள சாணை கால்மிதி எந்திரங்களைத் தோளில் சுமந்தவாறு நடக்கிறார்கள். இன்னும் சிலர் சென்னையில் வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே அந்த எந்திரங்களை வைத்துவிட்டு வந்துவிடுவதால் வெறும் கையுடன் நடந்து ரயில் பிடிக்க விரைகிறார்கள். ஒரு ரயிலில் சுமார் 50 பேர் என்று அதிகாலையில் 300 பேர் தினமும் இரை தேடும் பறவைகள் போல சென்னையை நோக்கிப் பயணிக்கிறார்கள்!

சுகமான சுமை

“கஷ்டமான வேலையானாலும் இதுதான் எனக்கு பிடித்த தொழில்” எனப் புன்னகையுடன் சொல்கிறார் 37 வயதான கபீர். 7-வது வரை படித்துள்ள கபீர் 20 ஆண்டுகளாகச் சாணைத் தொழில் செய்துவருகிறார். இரு குழந்தைகளுக்குத் தகப்பனான இவர் பெரம்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் தொழில் புரிந்து வருகிறார்.

“அதிகாலையிலேயே புறப்பட்டுவிடுவோம். திரும்பிவர இரவு 8 மணியாகும். நாள் முழுக்க 20 கிலோ எடையைத் தோளில் தூக்கிக் கொண்டு சுற்றினால் 300லிருந்து 400 ரூபாய்வரை சம்பாதிக்கலாம். இதில் போக்குவரத்து, சாப்பாடு, சாணை மிஷினுக்கு பஸ்ஸில் போடுற லக்கேஜ் சார்ஜ் போக ஓரளவு வருமானம் கிடைக்கும். முதலில் நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்.

இப்போது வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் இப்போது கூலியும் முன்புபோல யாரும் தருவது கிடையாது. மிகக் குறைவான கூலியே கிடைக்கிறது” என்கிறார். கத்தி, கத்திரிக்கோல், அரிவாள் மனை என்று சாணை பிடிக்கும் இவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய்வரை கூலி கேட்கிறார்கள். “சிலர் அடிமாடு விலையாய் ஒரு ரூபாய்க்கு சாணை பிடிக்கச் சொல்கிறார்கள்” எனச் சிரித்தபடி சொல்கிறார் கபீர்.

கத்தியும் செய்வோம்!

அரிச்சந்திராபுரத்தில் சாணை பிடிக்கும் தொழிலைத் தவிர ஒரு சிலர் காய்கறி நறுக்கும் கத்திகளைக் குடிசைத் தொழிலாகச் செய்கிறார்கள். மரம் அறுக்கும் பட்டறைகளிலிருந்து தேய்ந்துபோன மரம் அறுக்கும் பட்டைகளை வாங்கிவந்து சமையலறை கத்திகளைத் தயாரிக்கிறார்கள்.

கத்தி தயாரிக்கும் தொழிலில் ஐந்தாண்டுகளாக ஈடுபட்டுவரும் அப்துல் ரசாக், “ஆரம்பத்திலே சாணைத் தொழில்தான் செய்துவந்தேன். சாணை மிஷினைத் தோளில் சுமந்து என்னால் சுத்தித் தொழில் பார்க்க முடியாத நிலையில் தற்போது இந்தத் தொழிலைச் செய்கிறேன். காய்கறி நறுக்கும் சமையலறைக் கத்திகள் 20 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போய் வெளியிலே லாபம் வச்சு விக்கிறாங்க.” என்கிறார் அவர்.

படங்கள்: இக்வான் அமீர்.


இந்திய முஸ்லிம்களும் சாதிவாரியாக பிரிந்துள்ளார்கள்?அபினவ் கோயல் பதவி,பிபிசி செய்தியாளர் 4 ஜூன் 2022 

https://www.bbc.com/tamil/india-61685946

"மஹ்மூத்-மற்றும்-அயாஸ் ஒற்றுமையாக ஒரே இடத்தில் நிற்கிறார்கள்.

இங்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை".

புகழ்பெற்ற உருது கவிஞர் அல்லாமா இக்பால் (1877-1938) எழுதிய இந்தக் கவிதை, மஹ்மூத் கஸ்னவி (971-1030 கி.பி) மற்றும் அவரது அடிமை அயாஸ் இருவரும் தொழுகை செய்ய நிற்கும்போது ஒரே வரிசையில் நிற்கிறார்கள் என்பதை விவரிக்கிறது. அதாவது அந்த நேரத்தில் அரசனும் இல்லை அடிமையும் இல்லை.

இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் சமம் என்றும் அவர்களில் உயர்வு தாழ்வு கிடையாது என்பதையும் இந்தக் கவிதையின் மூலம் சொல்ல முயல்கிறார் இக்பால்.

இந்திய முஸ்லிம்கள்

பட மூலாதாரம்,Getty Images

ஆனால், சாதிகள் இல்லாத, பாகுபாடு இல்லாத, அனைவரும் சமம் என்று சொல்லப்படும் முஸ்லிம் சமூகம், உண்மையில் அப்படிப்பட்டதா?

மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்துள்ள இந்த நேரத்தில் இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. வியாழன் அன்று மாநில அமைச்சரவையும் இந்த முடிவுக்குத் தனது ஒப்புதலை அளித்தது.

"சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு' எனப் பெயரிட உள்ளோம். இதில், ஒவ்வொரு மதம், சாதியில் இருந்து வருபவர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள். அவர்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுவார்கள்," என்றார் நிதிஷ்குமார்.

இந்த சாதிவாரியான கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும், அதன் அளவுகோல் என்ன என்பது குறித்து பிகார் அரசு அதிக தகவல்களைத் தெரிவிக்கவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்குப் பிறகு, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களுடன் இணைத்தார் என்பது வேறு விஷயம்.

புதன்கிழமை முடிவடைந்த பாஜகவின் மாநில செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிரிராஜ் சிங், கடிஹார் சென்றிருந்தார்.

கடிஹாரில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், முஸ்லிம்களுக்குள் சாதிகள் மற்றும் துணை சாதிகளைக் கணக்கிட வேண்டும் என்றார். முஸ்லிம்களின் சாதி கணக்கெடுப்பின் மூலம் ரோஹிங்கியா மற்றும் வங்கதேச ஊடுருவல்காரர்களையும் அரசால் அடையாளம் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்குள் சாதிகள் மற்றும் உட்பிரிவுகளின் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கிரிராஜ் சிங் என்ன காரணத்திற்காகச் சொல்லியிருந்தாலும், பொதுவாக முஸ்லிம்களுக்குள் சாதிகள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை என்பதும் உண்மை.

முஸ்லிம்களிடையே சாதியின் அடிப்படையில் பாகுபாடு இல்லை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். அதே சமயம், முஸ்லிம்களிடையே கூட சாதிகள் இருப்பதாகவும் ஆனால் இந்துக்களிடையே உள்ளது போன்ற தீவிர வேறுபாடுகள் அவர்களிடையே இல்லை என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் சமூகத்தின் அமைப்பு முறை என்ன? மேலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இடையே உறவுகள் வைத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளதா?

இப்படி சில கேள்விகளுக்கு விடை காண முயன்றோம். பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் இம்தியாஸ் அகமது, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் தன்வீர் ஃபசல் மற்றும் மாநிலங்களவை முன்னாள் எம்பியும் பஸ்மந்தா முஸ்லிம் இயக்கத்தின் தலைவருமான அலி அன்வர் அன்சாரி ஆகியோரிடம் பிபிசி பேசியது.

இந்திய முஸ்லிம்கள்

பட மூலாதாரம்,Reuters

முஸ்லிம்களில் எத்தனை சாதிகள் உள்ளன?

இந்திய முஸ்லிம்கள் முக்கியமாக மூன்று சாதிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவை 'அஷ்ரஃப்', 'அஜ்லாஃப்' மற்றும் 'அர்ஃஜால்' என்று அழைக்கப்படுகிறது. இவை வெவ்வேறு சாதிகளை உள்ளடக்கிய குழுக்கள். இந்துக்களில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் எப்படி இருக்கிறார்களோ அதே வழியில்தான் அஷ்ரஃப், அஜ்லாஃப், அர்ஃஜால் ஆகியோரும் பார்க்கப்படுகிறார்கள்.

அஷ்ரஃப்பில் சையத், ஷேக், படான், மிர்சா, முகலாயர் போன்ற உயர் சாதியினர் அடங்குவர் என்று மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும் பஸ்மந்தா முஸ்லிம் இயக்கத்தின் தலைவருமான அலி அன்வர் அன்சாரி கூறினார். முஸ்லிம் சமூகத்தின் இந்த சாதிகள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் அடங்கிய இந்துக்களின் உயர் சாதிகளுடன் ஒப்பிடப்படுகின்றன.

இரண்டாவது வகை அஜ்லாஃப். இதில் நடுத்தர சாதிகள் எனப்படுபவர்கள் அடங்குவர். குறிப்பாக அன்சாரி, மன்சூரி, ரெய்ன், குரேஷி போன்ற பல சாதிகளை உள்ளடக்கிய ஏராளமானோர் இதில் உள்ளனர்.

குரேஷி என்பவர் இறைச்சி வியாபாரி மற்றும் அன்சாரி என்பவர் முக்கியமாக துணி நெசவு செய்யும் தொழிலுடன் தொடர்புடையவர். அவர்களை இந்துக்களில் உள்ள யாதவ், கோரி, குர்மி போன்ற சாதிகளுடன் ஒப்பிடலாம்.

மூன்றாவது பிரிவு - அர்ஃஜால். இதில் ஹலால்கோர், ஹவாரி, ரஸாக் போன்ற சாதிகள் அடங்குவர். கையால் துப்புரவு பணிகளை மேற்கொள்பவர்களை, முஸ்லிம் சமுதாயத்தில் ஹலால்கோர் என்றும் சலவை செய்பவர்களை, தோபி என்றும் அழைக்கிறார்கள்.

அர்ஃஜாலில் உள்ளவர்களின் தொழில், இந்துக்களில் பட்டியல் சாதி மக்கள் செய்யும் வேலைகளை ஒத்திருக்கிறது என்று விளக்குகிறார் பேராசிரியர் தன்வீர் ஃபசல். இந்த முஸ்லிம் சாதிகளின் பின்தங்கிய நிலை, இந்துக்களின் இதே சாதிகளின் பின்தங்கிய நிலையைப் போலவே உள்ளது.

இந்திய முஸ்லிம்களில் சாதி

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

இந்திய முஸ்லிம்கள் தங்கள் சொந்த சாதிக்குள் திருமணம் செய்து கொள்கிறார்களா?

பேராசிரியர் இம்தியாஸ் அகமத், முஸ்லிம்களிடையே உள்ள சாதிய அமைப்பும் இந்துக்களைப் போலவே செயல்படுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். திருமணம் மற்றும் தொழில் தவிர, முஸ்லிம்களிடையே வெவ்வேறு சாதிகளின் பழக்கவழக்கங்களும் வேறுபட்டவை.

முஸ்லிம்களும் கூட தங்கள் சொந்த சாதியைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். முஸ்லிம் பகுதிகளிலும், காலனிகள் சாதி அடிப்படையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. சில முஸ்லிம் சாதிகளின் காலனி ஒருபுறமும் வேறு சில முஸ்லிம் சாதிகள் வசிக்கும் காலனி, மறுபுறமும் இருந்து வருகிறது என்று டாக்டர் தன்வீர் ஃபசல் கூறுகிறார்.

"மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பலில், துர்க் மற்றும் லோதி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கிடையே நிறைய பதற்றம் உள்ளது. அவரவருக்கு சொந்த பிரதேசங்கள் உள்ளன. இது அரசியலிலும் காணப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்லாம் அதை அனுமதிக்காததால், மசூதியில் சாதி முறை பொருந்தாது என்கிறார் அவர். டெல்லியின் பல மசூதிகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இமாம்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பரஸ்பர உறவுகள் குறித்து மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் அலி அன்வர் அன்சாரியின் கருத்து சற்று வித்தியாசமானது. "வாழ்வது முதல் இறக்கும் வரை, முஸ்லிம்கள் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். திருமணம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர வேறு எந்த உறவும்கூட பராமரிக்கப்படுவது இல்லை," என்று அவர் கூறுகிறார்.

சாதியின் அடிப்படையில் பல மசூதிகள் கட்டப்பட்டுள்ளன என்கிறார் அவர். "ஒவ்வொரு கிராமத்திலும் சாதிவாரியாக மயானங்கள் கட்டப்பட்டுள்ளன. ஹலால்கோர், ஹவாரி, ரஸாக் போன்ற முஸ்லிம் சாதியினருக்கு சயீத், ஷேக், படான் சாதியினரின் கல்லறைகளில் அடக்கம் செய்ய இடம் வழங்கப்படுவதில்லை. சில நேரங்களில் காவல்துறையை அழைக்க வேண்டியிருக்கிறது," என்கிறார் அலி அன்வர் அன்சாரி.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறதா?

முஸ்லிம்களில் ஒரு சாதி எவ்வளவு பின்தங்கியிருந்தாலும், அது பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்தைப் பெறாது. ஆனால், முஸ்லிம்களின் சில சாதிகள், OBC இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுகின்றன.

"அரசியலமைப்புச் சட்டத்தின் 341-வது பிரிவின் மூலம், பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். ஆனால், குடியரசுத் தலைவரின் உத்தரவு அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இந்துக்களில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் சாதியினருக்கு மட்டுமே அதன் பலன் கிடைக்கும். பின்னர் அதில் இரண்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன் கீழ் சீக்கிய மற்றும் பெளத்த சமயத்தினர் சேர்க்கப்பட்டனர். ஆனால், இதுவரை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் சாதிகள் இதில் சேர்க்கப்படவில்லை," என்று பேராசிரியர் தன்வீர் ஃபசல் குறிப்பிட்டார்.

தன்வீர் ஃபசல்
படக்குறிப்பு,தன்வீர் ஃபசல்

முஸ்லிம்களில் குறைந்தபட்சம் 15 சாதிகள் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஓபிசி பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஹலால்கோர் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் இதனால் எந்தப் பலனும் பெறுவதில்லை. அதேநேரம் அவர்களின் பின்தங்கிய நிலை இந்து தலித்துகளைப் போன்றது என்று அவர் தெரிவித்தார்.

"பட்டியலிடப்பட்ட சாதிகளில் மட்டுமல்ல, பட்டியல் பழங்குடியினரிலும் எந்த முஸ்லிம்களும் வருவதில்லை. ஹிந்துக்களில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் மீனா சாதியினர் இடஒதுக்கீடு பெறுகிறார்கள். ஆனால், முஸ்லிம்களில் உள்ள மீனா சாதியினரை ஒத்த மேவ் சாதியினருக்கு, பட்டியல் பழங்குடியினர் ஒதுக்கீடு கிடைப்பதில்லை. அவர்களுக்கு OBC அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது" என்று அலி அன்வர் அன்சாரி தெரிவித்தார்.

இந்தியா முழுவதிலும் எங்கோ ஒரு சில இடங்களில் முஸ்லிம்களின் சில சாதிகள் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன என்பதும் உண்மைதான்.

இந்துவில் இருந்து முஸ்லிமாக மாறினால் இட ஒதுக்கீடு கிடைக்காது.

இந்து மதத்தைப் பின்பற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு பட்டியல் சாதிகளின் கீழ் இட ஒதுக்கீடு கிடைக்காது.

எந்தவொரு தலித் நபரும் தனது மதத்தை சுதந்திரமாகத் தேர்வு செய்ய முடியாது என்று தன்வீர் ஃபசல் விளக்குகிறார். ஏனெனில் இந்து மதத்தில் அவர் பட்டியல் சாதியின் கீழ் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுகிறார். அதே நேரத்தில் முஸ்லிம் மதத்தில் சேர்ந்த பிறகு, OBC ஒதுக்கீட்டின் கீழ் மட்டுமே இடஒதுக்கீட்டின் பலனை அவர் பெறமுடியும்.

இது சுதந்திரமாக மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நேரடியாக மீறுவதாகும் என்று பேராசிரியர் ஃபசல் சுட்டிக்காட்டுகிறார்.

இந்திய முஸ்லிம்கள்

பட மூலாதாரம்,Getty Images

முஸ்லிம்களிடையே சாதி அமைப்பு எப்படி வந்தது?

சாதி அமைப்பு இந்திய சமூகத்தின் சமூக கட்டமைப்பின் மையத்தில் உள்ளது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. வர்ண அமைப்பு பற்றிய பேச்சு இந்து மத நூல்களில் காணப்படுகிறது. ஆனால் அது இஸ்லாத்தின் மையத்தில் காணப்படவில்லை.

வர்ண அமைப்பு இஸ்லாத்தில் இல்லாவிட்டாலும், இந்திய முஸ்லிம்களின் சமூகத்தைப் பார்த்தால், அவர்களிடையே சாதி அமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது தெரிகிறது என்கிறார் தன்வீர் ஃபசல்.

துருக்கி மற்றும் இரான் வழியாக இஸ்லாம் இந்தியாவை அடைந்தபோது, அது ஒரு விரிவான சுத்திகரிப்பு வளர்ச்சியை அடைந்திருந்தது. இந்த மதம் இந்து சாதி அமைப்புடன் தொடர்பு கொண்டபோது, அது வலுப்பெற்றதாக இம்தியாஸ் அகமது விளக்குகிறார்.

இதற்குப் பின்னால் இருக்கும் வேறு சில காரணங்களையும் தன்வீர் ஃபசல் கூறுகிறார்.

"மதமாற்றத்தின் போது, மக்கள் தங்கள் சொந்த சாதியினரையும் தங்களுடன் அழைத்து வந்தனர். இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகும், அவர்கள் சாதியை விட்டு வெளியேறவில்லை. முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொண்ட உத்தரபிரதேச ராஜபுத்திரர்கள் இன்றும் தங்கள் பெயர்களுடன் செளஹான் என்று எழுதுகிறார்கள். தங்களை ராஜபுத்திரர்களாகக் கருதுகிறார்கள்," என்று பேராசிரியர் தவீர் ஃபசல் கூறினார்.

துருக்கியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆப்கானியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, ஆட்சி அமைப்பில் தனது மக்களுக்கு உயர்ந்த பதவியை அளித்து இங்குள்ள மக்களை இழிவாகப் பார்த்தனர். ஆகவே இது அங்கிருந்தும் தொடங்கியிருக்கலாம் என்று பேராசிரியர் ஃபசல் கருதுகிறார்.

நிதிஷ் குமார்

பட மூலாதாரம்,BBC/NIRAJ SAHAI

சாதிவாரி கணக்கெடுப்பால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு நன்மை?

நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதில் எந்த சாதியின் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் இருக்காது. முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகையும் மத அடிப்படையில் செய்யப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், எல்லா மதங்களிலும் உள்ள சாதிகள் என்ன என்பது தெரியவரும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு நடத்தினால், சமூக, பொருளாதார நிலையையும் அது பார்த்துக் கொள்ளும் என்கிறார் தன்வீர் ஃபசல். இது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சாதிகளுக்கு நன்மை பயக்கும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் அடிப்படையில் இடஒதுக்கீடு பெற உதவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment