Thursday, September 5, 2024

சேரமான் பெருமாள்

சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களம் கோவிலில் இருந்து வெள்ளை யானையில் கைலாயம் செல்லத் தொடங்க தோழர் சேரமான் பெருமாள் குதிரையில் தொடர அனுக்கிரகம செய்தவை பெரிய புராண பாடல் தரும் புராண வரலாறு.
கேரளா வரலாற்று அறிஞர்கள் இந்த சேர அரசர் 'இராம ராஜசேகர வர்மா' (பொஆ870 -884)என கணித்து உள்ளனர். இவர் சைவர், இவருடைய தந்தை 'ஸ்தாணு ரவி குலசேகரன்' (பொஆ844-870) எனும் குலசேகர ஆழ்வார்.
கொடுங்கல்லூர் பகுதி முழுவதும் கடலுக்குள் இருந்தவை 8ம் நூற்றாண்டு இறுதியில் கடல் உள்வாங்கிட(இதே காலத்தில் கிழக்கே கடல் வெளியே வர பல்லவர் கால சாளுவன் குப்பம் முருகன் கோவில் கடலில் மறைந்தது) உருவான நிலப்பரப்பு என இந்திய தொல்லியல் துறை அகழாய்வு நிரூபித்து உள்ளது.

https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Ancient-inscription-throws-new-light-on-Chera-history/article15293183.ece



வரலாற்றில் மற்றொரு பெரும்பிழை சேரமான் பெருமாள் இஸ்லாமியராக மாறி மெக்கா சென்றார் என்பது. மும்மணிக் கோவை, பொன்வண்ணத்தந்தாதி மற்றும் திருக்கைலாய ஞானஉலா பாடியவர் மாறிச் சென்றதாக அவர்கள் கூறும் ஆதாரங்கள்

1. சேரமான் பள்ளி என வழங்கப்பெறும் பள்ளிவாசல்
2. கேரளோத்பத்தி மற்றும் கேரள மாஹாத்ம்யம் ஆகிய நூல்கள் தரும் தகவல்கள்.
3. சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் ஆழிக்கடல் அரையா என்று பாடி கடல்வழியே இருவரும் புகுந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சேரமான் பெருமாளுக்கு இருநூறு வருடங்களுக்கு உள்ளாகவும் ராஜராஜன் எடுப்பித்த பெரிய கோயிலில் சேரமான் பெருமாள் கைலையேறும் காட்சியை அவன்ஓவியமாக்கியது, பிறகு வந்த பெரியபுராணம், அதனையொட்டி தாராசுரத்துச் சிற்பம், இன்னும் பல கோயிற் சிற்பங்கள் கூறும் செய்திகளையெல்லாம் விடுத்து பிற்கால ஆதாரங்களான கேரளோத்பத்தியும் கேரளமாஹாத்ம்யமும் ஆதாரமாக எப்படி அமையும் என்பதுதான்.
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் பாடியபடியே இருவரும் கடல்வழி புகுந்தனர் என்றால் சேரமான் மட்டும் வலது புறம் திரும்பி மெக்கா புகுந்தாரா. சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் வேறுதிசை புகுந்தாரா.
சேரமான் பள்ளி விஷயத்திற்கு வருவோம். இது சேரமான் என்னும் பெயர் பொதுவாகச் சேரமன்னர்களுக்குப் பயின்று வரும் பொதுச்சொல். இவற்றை நன்கு ஆய்ந்த பல ஆய்வாளர்கள் இந்தப் பள்ளிவாசல் பள்ளி பாணபெருமாள் என்னும் நாயனாருக்குச் சிலகாலம் பிந்தி வந்த மன்னரால் எடுப்பிக்கப் பெற்றதைக் கூறுகின்றனர்.
ஆக பள்ளியும் கேரளோத்பத்தியும் கூறும் மன்னர் இவராகலாம். இரு ராஜராஜர்களும் பெரியபுராணமும் மற்றும் பல சிற்பங்களும் தரும் தரவுகள் பொய், அவர் மெக்கா புகுந்ததே மெய் என்று விதண்டாவாதம் செய்தால், மெக்காவில் சிவாலயம் இருந்ததாக ஒரு கூற்றை ஒப்புக் கொண்டால் போதும். சேரமான் பெருமாள் மெக்கா புகுந்த செய்தியை ஒப்புக் கொள்ள நானும் தயார்.....
https://www.facebook.com/sankaran.ganapathy.3/posts/pfbid0Ub8Ztif3BabZGhfneGndQpNNA4RF4gM6t9dfNnj9JhKQ9mfGifAuRZXb66yXvQWYl?__cft__[0]=AZWs_ov0tIbx4oRyf1JAJEUzJegINCswYDvj-Ed59mTqCvJ0nUcBiON3mL15mhTNvDksPdOlMlbXFx9_yT2xedYhOCnnistg3TFwkuhQ91029FJSO9KeCudCgTh5mmO-O8B_mTVpWJ5rgGryIWojAfHMq-_23iL4sBgue8vT-4cFAQ&__tn__=%2CO*F



சேரமான் பெருமாள் நாயனாரின் கல்வெட்டு
63 நாயன்மார்களில் சமகாலக் கல்வெட்டில் நேரடியாகக் குறிப்பதாக அறியப் பெறுபவர். சேரமான் பெருமாள் நாயனார். காடவர்கோன் கழற்சிங்கனின் அடையாளம் சரியாகத் தெரியாததால் அவரை இதற்கு சேர்க்கவியலாது. அவருடைய வாழைப்பள்ளி கல்வெட்டு 12 ஆம் ஆட்சியாண்டைச் சைர்ந்தது. பொதுவாக ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற பொது மங்கலச் சொல்லோடு கல்வெட்டுகள் தொடங்க இந்தக் கல்வெட்டு மட்டும் நமச்சிவாய என்று தொடங்குகிறது. ஸ்ரீ ராஜாதிராஜ பரமேச்வர பட்டாரக ராஜசேகரதேவர்க்கு யாண்டு என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு திருவட்டாய் கோயிலில் நித்யபலி கொடுக்காதவர்களுக்கு தினார்கள் பெருமாள் அதாவது சேரமான் பெருமாள்அபராதம் விதித்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது. நமச்சிவாய போன்ற மங்கலச்சொல்லாலும் பிற அடைமொழிகளாலும் இவரே சேரமான் பெருமாள் என்பதுறுதி. மேலும் மலையாளத்தின் முதல் கல்வெட்டாகவும் கருதப்பெறுகிறது. இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பதால் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் காடவர்கோன் கழற்சிங்கனும் கூட ஒன்பதாம் நூற்றாண்டே என்றும் ஒருவாறாகக் கணிக்க இயல்கிறது. இவருக்கு முன் ஆண்ட குலசேகர வர்மரே குலசேகர ஆழ்வாராக அடையாளம் காட்டப்பெறுபவர்.
இந்நிலையில் சேரமான் பெருமாள் நாயனார் மெக்கா சென்றதாகக் கூறப்படுவது கற்பனையே. திருக்கயிலாய உலா பாடிய பெருமானைச் சோழர்கால ஓவியங்கள் அதாவது அவர் கைலையை அலங்கரித்த இருநூறு வருடங்களுக்கு உட்பட்ட ஓவியங்கள் அவர் கைலை ஏகியதைக் கூறுகின்றன. இவை பெரியபுராணத்திற்கு முற்பட்ட வை. ஆகவே மெக்கா சென்றதாகக் கருதப்பெறும் சேரமான் பெருமாள் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பதுறுதி.சேரமான் பெருமான் என்ற பொதுப்பெயர் கொண்டு இவ்விதம் குழப்பம் நேரிட்டது.
படம் கோகுள் மாமா


அறிவுத் திருட்டு.
”முடக்கியது பா.ஜ.க, தோண்டுகிறது தி.மு.க”. என்ற கட்டுரையைச் சற்றுமுன் குங்குமம் 16-8-2024 இதழில் படித்தேன்.
என்.ஆனந்தி என்பார் கொடுங்களூர் அருகிலுள்ள பட்டணம் அகழ்வாரய்ச்சி பற்றி எழுதியுள்ளார். கேரள வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் 2007 இல் இந்த அகழாய்வுப் பணியைத் தொடங்கியது. இது தனி ஆர்வலர்கள் தொடங்கிய பணியாகும். இதில் கேரள அரசு முனைப்புக் காட்டியது போல் தெரியவில்லை.
ஆய்விற்கான உரிமத்தை ஒன்றிய அரசு தொடர்ந்து தந்திருக்கவேண்டும். பேராயக் கட்சியின் UPA அரசு இருந்தவரை இந்த ஆய்வில் எல்லாம் ஒழுங்காய்ப் போய்க் கொண்டிருந்திருக்கிறது. 2014 இல் ஒன்றிய அரசில் பா.ச.க ஆட்சிக்கு வந்தபின், செபுதம்பர் 2015 இல் ஏதோ காரணம் காட்டி உரிமத்தை முறித்து ஆய்வை நிறுத்திவிட்டது. பின்வந்த கேரள அரசு/களும் உரிமத்தைப் பெற்றுத்தர ஏதும் முயன்றது போல் தெரியவில்லை.
பொதுவாய்க் கேரளருக்கும், கேரள அரசிற்கும் சேரமான் பெருமாள் அரசுகளுக்கு முந்தைய வரலாற்றைத் தேடுவதில் ஆர்வம் கிடையாது. தங்களின் தமிழ்ப் பின்புலத்தை வெளியே காட்டுவதில் அவ்வளவாக விருப்பம் அவருக்கு இல்லை போலும். ”பட்டணம் ஆய்வு போல் ” மேலும் ஆய்வுகள் நடந்தால், அப்புறம் சங்க இலக்கியத்தை நோண்டிப் படிக்க வேண்டும். தொல்லியல் ஆய்வு மேலும் சில 10 ஆண்டுகளுக்கு நகர்ந்து, கொஞ்சங் கொஞ்சமாய் இன்னும் பல சான்றுகள் வெளிப்படலாம். அப்படி வெளிப்பட்டால், “சேரலத்தில் இருந்து கேரளம் பிறந்த கதையை மறுத்து பரசுராமன் கடலை விலக்கியே கேரள நிலம் பிறந்தது” என்ற தமிழ் மறுப்புத் தொ(ன்மக் கதையை தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.
ஒன்றிய அரசு தம் தொல்லாய்வுத் துறையின் கட்டுப் பாட்டில் கீழடி ஆய்வை நிறுத்தியது போலவே பட்டணம் ஆய்வையும் நிறுத்தியது., “அங்கு ஒன்றுமில்லை” என்ற பொய்க் கதைக்குப் போய்விடலாம் என்ற திட்டம் தான்.
கீழடியில் நாலாம் கட்ட ஆய்வில் இருந்து தமிழக அரசு இந்த ஆய்வு வேலையைத் தொடர்ந்தது. கேரளத்தில் கேரள அரசோ பட்டணம் ஆய்விற்கு எந்த மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. ஒன்றிய அரசும் இந்த ஆய்வை மூடிவிட்டதற்கு அப்புறம் எல்லாமே நின்று போனது. இப்போது தமிழக அரசு அங்கு போய் ஆய்வைத் தொடங்க முயல்கிறது. என்னென்ன சிக்கல் வரும், எப்படி ஆகும் என்பது இப்போது நமக்குத் தெரியவில்லை. இனிமேல் தான் பொறுமையோடு பார்த்துத் தெளிய வேண்டும்.
மேலே அரசுகளின் பால் சொல்லவேண்டியவற்றைக் கூறினேன். இன்னும் சொல்ல வேண்டியது. அறிவுத் திருட்டைப் பற்றியாகும்.
இந்த ஆசிரியை பெரும்பாலும் “சிலம்பின் காலம்” என்ற என் நூலைப் படித்திருக்க வேண்டும் என்றே இக் கட்டுரையைப் படித்தபின் நான் ஊகிக்க வேண்டியுள்ளது. ”தான் எங்கு இக் கருத்தை அறிந்தேன், எங்கு படித்தேன்” என்று ஏதும் சொல்லாமல், தப்பும் தவறுமாய்க் (கூடவே திராவிடருக்கு உதவுவது போல் திருகல் வேலையும் செய்து,) கீழே உள்ளது போல் ஆசிரியர் எழுதியுள்ளார்.
”முசிறித் துறைமுகத்தில் கடலோடு கலக்கும் ஆறு சுள்ளியம் பேரியாறு. இதுதான் இப்போது பெரியாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த ஆற்றின் வழியாக உள்நாட்டுக்குக் கூட கலம் செல்லுமாம். பாண்டிய அரசன் அடுபோர்ச் செழியன் இந்த முசிறியை முற்றுகையிட்டு அங்குவந்த அழகிய படிமப் பொருட்களைக் கைப்பற்றிச் சென்றான் என்பது புலவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் தரும் செய்தி” .
என்று ஆனந்தி எழுதியுள்ளார். என் நூலில் அகநானூறு 149 ஆம் பாடலை விளக்கி, இதற்கு ஆதாரமாய், திரு. வி. ஆர்.சந்திரன் எழுதிய ”கொடுங்கோளூர் கண்ணகி (தமிழில் ஜெயமோகன், யுனைடட்ரைட்டர்ஸ், சென்னை, 200) ” என்ற நூலையுங் எடுகோளாய்க் காட்டினேன்.
”அழகிய படிமப் பொருட்களை அடுபோர்ச் செழியன் கைப்பற்றிப் போனான்” என்று நான் என் நூலில் எழுதவில்லை. மாறாக ”செழியன் எடுத்தது கண்ணகியின் சிலையாய்த் தான் இருக்க முடியும்” என்று தெளிவாய் என் ஆய்வைச் சொல்லியிருப்பேன். அடுபோர்ச் செழியன் பெரும்பாலும் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் தம்பி வெற்றிவேற் செழியன் என்றும் எழுதியிருப்பேன்.
சிலம்பில் ஆய்வு செய்தவன் பெயரைக் குறிப்பிடாதது, ஒரு பிழை எனில், ”வெற்றிவெற் செழியன் ஏதோ அழகிய படிமப் பொருள்களைத் திருடிப் போனான்” என அவதூறு சொல்வது இன்னொரு பெரிய பிழை.
ஒன்றிய, கேரள அரசுகள் செய்ததைக் கண்டிப்பது ஒரு பக்கம். எனில் அறிவுத் திருட்டைக் கண்டிப்பது இன்னொரு பக்கம். இணைய வழி அறிவுத் திருட்டு என்பது நம்மூரில் இப்போது மிகவும் கூடி வருகிறது.

No comments:

Post a Comment

Christians grab SC Reserved seats with Hindu Caste Certficates - Supreme courts helps!

Kerala CPM Devikulam MLA - A.RAJA  a practicing CSI Christian had won Kerala assembly elections in 2021 an was disqualified in 2022 - but Su...