Friday, September 6, 2024

Moral Motivational Speaker quoting Thiruvalluvar criticised


மகாவிஷ்ணு கைது எந்தப் பிரிவுகளின் கீழ் நடந்தது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததை பலரும் விமர்சித்து உள்ளனர். எந்தப் பிரிவின் கீழ் கைது என்பதே தெரியாமல் அதை எப்படி எதிர்க்க முடியும் என்று கேட்கின்றனர். சரி அதை விடுவானேன் என்று அதையும் தெரிந்து கொண்டேன்.
அவர் மீது Bharatiya Nyay Sanhita (BNS) சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தின் பிரிவு 92 என மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 192: கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தில் தூண்டுதல்,
- 196 (1) (a): மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது வேறு எந்த அடிப்படையில், வார்த்தைகள், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது அடையாளங்கள் மூலம் அல்லது காணக்கூடிய பிரதிநிதித்துவங்கள் மூலம் அல்லது மின்னணு தொடர்பு மூலம் அல்லது மற்றபடி, பல்வேறு மத, இன, மொழி அல்லது பிராந்திய குழுக்கள் அல்லது சாதிகள் அல்லது சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை அல்லது பகைமை, வெறுப்பு அல்லது தவறான உணர்வுகள்; அல்லது ஊக்குவிக்கும் அல்லது ஊக்குவிக்க முயற்சிப்பது,
- 352: அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு,
- 353 (2): மதம், இனம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு மதம், இனம், மொழி அல்லது பிராந்திய குழுக்கள் அல்லது சாதிகள் அல்லது சமூகங்களுக்கிடையில் பகை, வெறுப்பு அல்லது தீய உணர்வுகள் உருவாக்கும் எண்ணத்துடன் தவறான தகவல், வதந்தி அல்லது ஆபத்தான செய்திகள் அடங்கிய அறிக்கை அல்லது அறிக்கையை வெளியிடுவது அல்லது பரப்புவது,
- 92 (a): மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றம் செய்வது.
அன்றைய கூட்டத்தில் அவர் இந்த எதையுமே செய்ததாகத் தெரியவில்லை. கலவரத்தை உண்டாக்கும் வகையில் எதுவும் பேசவில்லை. மதம் எதையும் குறிப்பிட்டு அவமதிக்கவில்லை. இரண்டு சாதிகள், மதங்கள் இடையே பகையை உருவாக்க முயற்சிக்கவில்லை. சமூக அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆபத்தான செய்திகள், அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை.
மாற்றுத் திறனாளி சார்ந்த கடைசி செக்சன் மட்டுமே ஓரளவுக்குப் பொருந்துகிறது. ஆனால் மகாவிஷ்ணு அந்த மாற்றுத் திறனாளி ஆசிரியரை நேரடியாக அவமதித்தோ, அவர் ஊனத்தை வைத்து குற்றச் செயல் எதுவுமோ நடத்தவில்லை. அவர் பேசிய 'உடல் ஊனம் என்பது பூர்வ ஜென்ம பாவத்தின் விளைவு,' என்ற கூற்று ஆட்சேபத்துக்குரியது என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படும். அது மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான குற்றம் என்று கருதப்பட மாட்டாது. காரணம், ஊனமும் ஒரு கர்ம வினைப்பயன்தான் என்பது பல்வேறு வகைகளில் இந்து, பௌத்த நூல்களில் வெளிப்படும் கருத்துதான். கீதை, உபநிடதங்கள் முதல் பௌத்த நூல்கள் வரை பலவற்றில் இவற்றைப் பார்க்கலாம்.
சொல்லப் போனால் 'ஊனம் அல்லது உடல் உபாதைகள் கடவுளின் தண்டனை,' என்ற சிந்தனை வேற்று மதங்களில் கூட காணப்படுகிறது.
'Whatsoever your sickness is know your certainly, that it is God’s visitation.'
- Book of Common Prayer
பைபிளில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவரை இயேசு குணப்படுத்துகிறார். அப்படி குணப்படுத்துவதற்கு அவர் சொன்ன வரிகள் 'உன் பாவங்களை நான் மன்னிக்கிறேன். இப்போது எழுந்து நட.' என்ற வரிகள்தான். (மத்தேயு 9:1) தன் பாவங்கள் மன்னிக்கப் பெற்ற அவர் பக்கவாதம் குணமாகி எழுந்து நடக்கிறார்!
குர்ஆனிலும் இதே போன்ற வரிகள் காணப்படுகின்றன:
'... அப்படிப்பட்ட (மோசமான) மனிதர்களை அல்லாஹ் குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஆக்குகிறான்.'
(47:23)
இப்படியெல்லாம் பண்டைய மதங்கள் சிந்தித்ததற்குக் காரணம் இருக்கிறது. நவீன மருத்துவம் வருவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த மதங்கள் எதற்குமே உடல் ஊனம் குறித்த எந்த அடிப்படை அறிவும் இருந்திருக்கவில்லை. எனவே ஊனத்துக்கும், நோய்களுக்கும் அவர்கள் கொடுக்க முனைந்த விளக்கங்கள் மிக எளியவையாக, பழங்குடி சிந்தனை சார்ந்து இருந்திருப்பதில் வியப்பில்லை. நீங்கள் பாவம் செய்தால் உங்களுக்கு நோய்கள் வரும், உடல் ஊனம் ஏறபடும். ரொம்ப சிம்பிள்.
இது என்றல்ல. பண்டைய மத நூல்கள் எதைப் படித்தாலும், எந்த சப்ஜெக்ட்டிலும் அவர்களது அறிவு மிக மிக எளிமையாக, மேலோட்டமாக மட்டுமே இருப்பதைக் காணலாம். நான் அடிக்கடி குறிப்பிடுவது போல, இன்று உலகில் புழக்கத்தில் இருக்கும் அனைத்துக் கடவுளர்களுமே 'உலகம் ஒரு உருண்டை' என்ற மிக மிக அடிப்படை தகவல் கூடத் தெரியாதவர்கள்தான்! அப்படிப்பட்ட மூடக் கடவுளர்களைத்தான் நாம் வழிபட்டு வருகிறோம்!
சோகம் என்னவெனில் இதில் மகாவிஷ்ணு மட்டும் விதிவிலக்கல்ல. அந்தக் கடவுளர்களைப் போற்றும் அந்த மூட மதங்களை நம்பிக் கொண்டு இன்றைக்கும் தங்கள் வாழ்வியலை கட்டமைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் இந்த உலகில் பெரும்பானமையாக இருக்கின்றனர்.
இருப்பினும் பொதுவெளியில், அதுவும் கல்வி நிலையத்தில் அப்படிப் பேசியதே தவறு என்றாலும் கூட அவர் மீது அதிகபட்சம் அவதூறு வழக்குப் பதிவு செய்யலாம், அவ்வளவுதான். அது கூட முன்கூட்டிய கைதுக்கு முகாந்திரம் அல்ல.
எனவே, நண்பர்களே, நண்பிகளே, எந்த செக்சன் என்பதைத் தெரிந்து கொண்டு இப்போது எழுதுகிறேன்: சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு நடந்து கொண்ட விதத்தில் எனக்கு எந்த ஏற்பும் இல்லை. கல்வி நிலையத்தில், மாணவர்களிடம் மத சிந்தனைகளை ஊக்குவித்துப் பேசுவதிலும் ஏற்பு இல்லை. மத கும்பல்களை கல்வி நிலையங்களை விட்டு நூறு மைல் தள்ளி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால் இந்த சிந்தனைகள் எதுவுமே மத நம்பிக்கைகளை குற்றச் செயலாக ஆக்காது! அதிலும் தடுப்புக் காவலில் வைக்கும் அளவுக்கான குற்றச் செயல் அல்ல என்பதில் மிக மிக தெளிவாக இருக்கிறேன்.
அரசு மிக மிக மோசமாக over-reaction செய்திருக்கிறது என்று எனக்கு நேற்று இரவு வந்த கருத்தில் எந்த மாறுதலும் இல்லை. இந்த அனைத்து செக்சன்களுமே நீதிமன்றத்தால் தூக்கி எறியப்படும் என்று எதிர் பார்க்கிறேன். கூடவே மாநில அரசுக்கு விசேஷ டோஸ் நீதிமன்றத்திடம் இருந்து கிடைக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறேன்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்





 

No comments:

Post a Comment

கமலஹாசன் ரூ.200 கோடி; 2021 தேர்தலில் நின்று திமுக எதிரப்பு ஓட்டு பிரிக்க இத்தாலி காங்கிரஸ் ராகுல் காந்தி தந்ததாராம்

  கமலஹாசன் ரூ.200 கோடி; 2021 தேர்தலில் நின்று திமுக எதிரப்பு ஓட்டு பிரிக்க இத்தாலி காங்கிரஸ் ராகுல் காந்தி தந்ததாராம் https://www.youtube.co...