Thursday, September 5, 2024

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எஸ்சி-எஸ்டி இட ஒதுக்கீடு அவசியம் இல்லை - திமுக அதிமுக மாநில அரசு வாதம் ஏற்று திருமாவளவன் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இட ஒதுக்கீடு! திருமாவளவன் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

 By Arsath Kan Published: Thursday, December 7, 2023,

https://tamil.oneindia.com/news/chennai/reservation-in-the-appointment-of-public-prosecutor-madras-high-court-dismisses-thirumavalavan-pet-563805.html

சென்னை: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கோரி விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேற்கொண்டு இந்த வழக்கின் விவரம் வருமாறு;

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அரசு வழக்கறிஞர் பணியிடங்களில் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் , மகளிர் ஆகியோருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் உட்பட 132 அரசு வழக்கறிஞர்கள் உள்ள நிலையில், பட்டியலினத்தவர்களுக்கு 19 சதவீதம் இடஒதுக்கீடு அல்லது மொத்த பணியிடங்களில் 25 சதவீதம் என பிரநிதித்துவம் வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

மேலும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், அரசு வழக்கறிஞர்ளை தேர்வு செய்யும் குழு எப்படி அமைக்கப் படுகிறது என்று தெளிவாக கூறப்படவில்லை எனவும் தனது மனுவில் கூறியிருந்தார். 

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Madras HC dismisses Thirumavalavan's plea seeking SC/ST quota in law officers recruitment

The first bench of Chief Justice SV Gangapurwala and Justice D Bharatha Chakravarthy on Thursday dismissed the petition which was filed in 2017   https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Dec/08/madras-hc-dismissesthirumavalavans-plea-seekingscst-quota-in-law-officers-recruitment-2639611.html


 

 

No comments:

Post a Comment

கமலஹாசன் ரூ.200 கோடி; 2021 தேர்தலில் நின்று திமுக எதிரப்பு ஓட்டு பிரிக்க இத்தாலி காங்கிரஸ் ராகுல் காந்தி தந்ததாராம்

  கமலஹாசன் ரூ.200 கோடி; 2021 தேர்தலில் நின்று திமுக எதிரப்பு ஓட்டு பிரிக்க இத்தாலி காங்கிரஸ் ராகுல் காந்தி தந்ததாராம் https://www.youtube.co...