Sunday, September 8, 2024

பள்ளிகளில் மாணவர்கள் தமிழர் வழியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் சூழல் பாதுகாப்பு உறுதிமொழி சுற்றறிக்கை - வாபஸ்

தமிழர் வழியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தமிழர் வணக்கம் என பள்ளி மாணவர்களிடம் அரசே கூறுவதாக உள்ளது என பல தமிழர் மெய்யியல் விரோத அன்னிய மத அடிமை கட்சிகள் தூண்ட வாபஸ் செய்தி

https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-govt-action-against-officials-for-sending-vinayagar-sathurthi-circular-to-schools/articleshow/113070093.cms

பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி சுற்றறிக்கை... தமிழக அரசு ரத்து செய்து நடவடிக்கை! 

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 4 Sep 2024, 9:21 pm

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று முதன்மை கல்வி அலுவலர்களால் அனுப்பப்பட்டது. இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை -மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தல் தவறாக அனுப்பப்பட்டுள்ளது; அலுவலர்கள் மீது பாயும் நடவடிக்கை

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் அல்லது அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய / செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகர பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்படும் விநாயகர் சிலை தயாரிப்பு

யார் யாருக்கு பொருந்தும்

மேலும் உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

சுற்றறிக்கை வெளியீடு

இவ்வாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆனது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் அல்லது அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பாடு

இத்தகைய சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல் / உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அறிவுறுத்தல்கள் ரத்து

இவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது ஆகும். ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

துறை ரீதியான நடவடிக்கை

மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா

தமிழகத்தில் இன்று காலை பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த விவகாரத்திற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மாணவர்களிடம் மத சாயம் பூசும் முயற்சி என்று குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சுற்றறிக்கையை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...