Monday, September 9, 2024

ரூ.13000 கோடி வாடகை பாக்கி - கிண்டி ரேஸ் கோர்ஸ் - சீல் வைத்தத தமிழ்நாடு அரசிற்கு நீதிமன்றம் கண்டனம் -சேப்பாக்கம் ரூ.3000 கோடி வாடகை பாக்கி



சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தது தமிழ்நாடு அரசு!   https://www.malaimurasu.com/politics/tamilnadu/tamil-nadu-government-has-sealed-the-chennai-guindy-race-course-ground

சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசுகள் என வாடகை பணம் நிர்ணயிக்கப்பட்டது.

Published on: 09 Sep 2024, 2:51 pm

சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசுகள் என வாடகை பணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 1970ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி அரசு சார்பில், ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரேஸ்கிளப், 1946ம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை எனத் தெரிவித்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தும்படி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்தும்படி, ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இந்த தொகையை செலுத்தாததால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததுடன், அதற்கான அறிவிப்பையும் வைத்துள்ளனர்.

 

கிண்டி ரேஸ் கோர்ஸ் விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்! -

author img By ETV Bharat Tamil

 https://www.etvbharat.com/ta/!state/tn-government-informed-the-mhc-that-action-will-be-taken-against-guindy-race-course-after-giving-notice-regarding-the-cancellation-of-the-lease-tamil-nadu-news-tns24090905710

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக உரிய நோட்டீஸ் கொடுத்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits: ETV Bharat) சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு குத்தகைக்காக வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம் என்றும் அந்த நிலத்தை அரசு பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று காலை குத்தகையை ரத்து செய்து, தமிழ்நாடு அரசு நிலத்தை சுவாதீனம் எடுத்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ராஜசேகர் ஆகியோர் அமர்வில் முன்பு ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. உடனடியாக இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், இன்று காலை குத்தகையை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், ரேஸ் கோர்ஸை காலி செய்ய அவகாசம் கொடுக்காமல், சுவாதீனம் எடுத்தது சட்டவிரோதமானது எனவும், அதற்கு நீதிமன்றம் துணை போகாது எனவும், இது அரசின் அத்துமீறல் எனவும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தான் நிலம் பயன்படுத்தியுள்ளதாகவும், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அங்கு குதிரை பந்தயம் நடைபெறுவதாகவும், மண்டபம் நடத்தப்படுவதாகவும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார். பின்னர், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஒரே நேரத்தில் குத்தகையை ரத்து செய்து நிலத்தை சுவாதீனம் எடுக்கக் கூடாது எனவும், குத்தகை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என்பதால், காலி செய்ய அவகாசம் வழங்கும் வகையில் குத்தகை ரத்து செய்யப்பட்ட உத்தரவு குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குத்தகையை ரத்து செய்தது தொடர்பான நோட்டீஸ் வழங்கி, பின்னர் காலி செய்வதற்கான அவகாசம் கொடுத்த பின்பு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.



 ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்..ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாதை அடுத்து அதிரடி முடிவு! - Ooty Race Course Sealed

By ETV Bharat Tamil Nadu Team Published : Jul 5, 2024, 4:16 PM IST

https://www.etvbharat.com/ta/!state/revenue-officials-sealed-the-ooty-race-course-land-after-non-payment-of-lease-arrears-of-rs-822-crore-tns24070503704

உதகையில் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானம் ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாதை அடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நீலகிரி: உதகையில் வருவாய்த் துறையினருக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 120 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. இந்த குதிரை பந்தயங்களானது உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

இந்நிலையில், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகமானது அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 முதல் கட்டாமல் இருந்துள்ளது. இதுவரை 822 கோடி வரை குத்தகை தொகையானது நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கானது நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 21ஆம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால், அந்த நோட்டீஸ்க்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகமானது பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 5) காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில், காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, ரேஸ் கோர்சை சுற்றி உள்ள இந்நிலம் அரசுக்கு கையகப்படுத்தப்பட்டது என்ற பேனர்களை வைத்துள்ளனர். மேலும், குதிரை பந்தய மைதானத்திற்குள் உள்ள அலுவலக கட்டிடங்கள், நிர்வாக கட்டிடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. மேலும், எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

உலகுக்கொரு

No comments:

Post a Comment

கமலஹாசன் ரூ.200 கோடி; 2021 தேர்தலில் நின்று திமுக எதிரப்பு ஓட்டு பிரிக்க இத்தாலி காங்கிரஸ் ராகுல் காந்தி தந்ததாராம்

  கமலஹாசன் ரூ.200 கோடி; 2021 தேர்தலில் நின்று திமுக எதிரப்பு ஓட்டு பிரிக்க இத்தாலி காங்கிரஸ் ராகுல் காந்தி தந்ததாராம் https://www.youtube.co...