மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது; இன்னொருவர் தப்பி ஓட்டம்
https://www.dinamalar.com/news/tamil-nadu-news/is-this-the-work-of-a-professor-the-person-who-invited-the-student-to-drink-alcohol-was-arrested-another-escaped--/3730976 *பாளை சேவியர் கல்லூரியில் இந்து மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி*
மாணவி குடும்பத்தினரை மிரட்டி மூடி மறைக்க முயன்ற நிலையில்*இந்துமுன்னணி கோரிக்கையை தொடர்ந்து*
சட்டப்படி நடவடிக்கை எடுத்த மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி !
திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை கல்லூரியில் இரவில் மாணவியை தொடர்பு கொண்டு மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்; மற்றொரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் புதிய தூய சவேரியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லூரி என்பதாலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என சொல்லப்படும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முக்கிய கல்லூரி என்பதாலும் இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வந்து படிக்கின்றனர்.
இங்கு சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின்(வயது 40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(40) ஆகிய இருவரும் கடந்த 4-ந்தேதி இரவில் நெல்லை மாநகர பகுதியில் ஒரு விடுதியில் மது குடித்தனர். ஒரு கட்டத்தில் மது போதை அதிகமாகவே, நள்ளிரவு நேரத்தில் தனது துறையில் படிக்கும் குறிப்பிட்ட மாணவி ஒருவருக்கு போன் செய்துள்ளனர்.
மது குடிக்க வா
மறுநாள் அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்குவதற்குள், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால் எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு விடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த புகார் மனுவை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர்.
அதேநேரத்தில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இந்த தகவல்களை அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்பினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரியவரவே, விசாரணை தீவிரமானது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார். அதில் பேராசிரியர்களான ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய 2 பேரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நேற்று நள்ளிரவு தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர். ஜெபஸ்டினை கைது செய்தனர்.
வழக்குப்பதிவு
இதற்கிடையில் போலீசார் வரும் தகவல் அறிந்த பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாளையங்கோட்டை போலீசார் 2 பேராசிரியர்கள் மீதும் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி இந்திய தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மாணவியிடம் நள்ளிரவில் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்னும் மர்மம் வெளியே வருமா ?
பாளை., சேவியர் கல்லூரியில் இது போன்ற பேராசிரியர்கள் சிலர் மீது வந்த பல புகார்கள் மண்ணில் போட்டு மூடப்பட்டதாகவும், பல மாணவிகள் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இது குறித்த விசாரணை நீளுமானால் மேலும் திடுக் தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment